நரி குறவர் சமுதாயத்திற்க்கும் சென்றடைகிறது சத்திய மார்க்கம்
TNTJ நாகை #வடக்கு மாவட்டம் சார்பாக செம்பனார்கோவில் என்ற ஊரில் 22/05/2015 அன்று நரி குறவர்கள் வசித்து வரும் பகுதிக்கு சென்று அந்த மக்களை அழைத்து " கடவுள் என்றால் யார்? ", " கடவுளுக்கான இலக்கணம் என்ன? ", " அவனை வணங்குவதனால் என்ன பயன்? " & "மனிதன் தோன்றிய வரலாறு" என்ற செய்திகளை அம்மக்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.மேலும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டும் குடும்பவியல் பற்றி பேசும் பொழுது ஆங்காங்கே இருந்த பெண்கள் தங்கள் குழந்தைகளோடு ஆர்வமாக அருகில் வந்து நமது உரையை கேட்டனர்.
இறுதியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தாராளமாக நீங்கள் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது.அதற்கு அம்மக்கள் நீங்கள் கூறிய கடவுள் கொள்கை தெளிவாக புரிந்தது என்று கூறினார்கள்.
மேலும் எங்கள் மக்கள் அதிகம் வாழும் அரசூர் ஜே.ஜே.நகர் என்ற பகுதிக்கு வந்து இது போன்ற விளக்கத்தை தரும்படி நமது ஜமாஅத்தினர்க்கு அன்பான அழைப்பையும் விடுத்தனர்.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருகிறோம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றனர்
இஸ்லாமிய மார்க்கத்தை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு சான்று , #தீண்டாமைஎன்ற மனோஇச்சையை தூக்கி எறிந்த ஒரே #மார்க்கம்இஸ்லாம் மட்டுமே !!! , அல்லாஹூ அக்பர் , விரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி தருவானாக!!!
49:13. மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
குறிப்பு:- இவ்வாறான தாவா பணியை அனைத்து கிளைகளும்.,அனைத்து இயக்கங்களும் செய்தால்.,நன்றாக அமையும்.
-Muhammad Siddiq Ibn Kalifullah
No comments:
Post a Comment