Followers

Sunday, May 10, 2015

விகடன் பேட்டியில் மனம் திறக்கிறார் யுவன் சங்கர் ராஜா!




கேள்வி:

புகழ், பணம் என்று நிறைய பார்த்து விட்டீர்கள் அடுத்து என்ன?

பதில்:

நீங்கள் சொல்வது போல் சினிமா, இசை, புகழ் என்று நிறைய பார்த்து விட்டேன். இதற்கு அடுத்து என்ன என்ற தேடல் எனக்குள் சில நாட்களாகவே இருந்து வந்தது. அம்மாவுடைய மரணம் அந்த தேடலை இன்னும் அதிகமாக்கியது.

கேள்வி:

எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்குதுன்னு சொல்வாங்க. அப்படி இருக்க நீங்க இஸ்லாத்தை குறிப்பாக தேர்ந்தெடுக்கக் காரணம்?

பதில்:

காரணம் நிறைய உள்ளது. அம்மா இருந்த வரை எனக்கு எந்த குறையும் இல்லை. அவர்களுக்கு பிறகு நான் தனிமையானேன். உடைந்து போனேன். இறைவனின் அருளால் குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். அந்த குர்ஆனானது எனது மனதோடு ஒன்றி விட்டது. மனக் குழப்பத்திலிருந்து இஸ்லாம் என்னை விடுவித்தது. அம்மா இறந்த துக்கத்தினால் சிகரெட் நிறைய குடித்தேன். நிறைய மது அருந்தினேன். தூக்கமின்மையால் மிகவும் சிரமப்பட்டேன். இது தொடர்ந்தால் நாம் காப்பாற்றி வைத்திருந்த பெயர் சிதைந்து விடும் என்ற பயம் எனக்குள் வந்தது. அப்படியான இக்கட்டான நிலையில்தான் எனக்கு குர்ஆன் அறிமுகமானது.

எல்லா மனிதர்களுக்குமே ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவை நல்ல வழியில் கொண்டு செல்ல முயல வேண்டும். மனித குலத்துக்கு நம்மால் ஆன நல்ல செயல்களை செய்து வர வேண்டும்.

கேள்வி:

திருமண வாழ்வு எப்படி இருக்கு?

பதில்:

மாஷா அல்லாஹ்! இறைவன் புண்ணியத்தில் நல்லபடியாக போய்க்கிட்டுருக்கு.

கேள்வி:

காதல் கல்யாணம் என்று ஒரு தகவல் உலவுகிறதே?

பதில்:

கண்டிப்பாக இது காதல் திருமணம் அல்ல. எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இஸ்லாமிய மதத்தில் ஒரு பெண்ணை பார்க்கச் சொல்லியிருந்தேன். அவர்கள் மூலமாக வந்த சம்மந்தம்தான் இது. பத்திரிக்கைகளில் வந்த செய்தி தவறானது.

கேள்வி:

உங்க அப்பா இளையராஜா திருமணத்துக்கு சம்மதித்தாரா?

பதில்:

ஆம்.... பெண் வீட்டாரோடும் சந்தோஷமாக பேசினார். பத்திரிக்கைகளில் 'ரகசிய திருமணம்' என்று புரளியைக் கிளப்பி விட்டு விட்டார்கள். பெண் வீட்டாரும் நிறைய வதந்திகளால் குழம்பி போனார்கள். அவர்களை பார்க்க எனக்கும் பாவமாக இருந்தது. இதனால் உடன் திருமணத்தை முடிக்கச் சொன்னார்கள். இதனை அப்பாவிடம் சொன்னேன். 'இரண்டு நாள் என்றால் என்னால் வர முடியாதே. நீ திருமணத்தை முடித்து விட்டு வந்து விடு. பிறகு சென்னையில் பார்த்துக் கொள்ளலாம்' என்றார். அதன்படி அவரது சம்மதத்தோடுதான் திருமணம் நடந்தது.

https://www.youtube.com/watch?v=jJm2BV2ItB8

No comments: