Followers

Saturday, May 30, 2015

இந்த வயதிலும் பிடித்தாட்டும் வர்ணாசிரம வெறி!





இந்த காணொளியில் இந்தியாவில் உள்ள தீண்டாமைக் கொடுமை வரிசையாக பட்டியலிடப்படுகிறது. 2:22 லிருந்து ஆரம்பமாகும் காணொளியை பாருங்கள். இதில் பார்பன முதியவர் கூறுகிறார் 'நமது உடலில் காலானது நமது உடலையும் தலையையும் சுமந்து வருகிறது. இது காலா காலமாக நடந்து வருகிறது. திடீரென்று ஒரு நாள் காலானது தலையில் அமர்ந்து கொள்வேன் என்று கூறினால் எப்படி நாம் நடந்து செல்வது? எனவே எந்த பொருள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருந்தால் தான் அதற்கு மதிப்பு' என்கிறார். அதாவது மனு தர்மப்படி காலில் பிறந்த தலித் இறக்கும் வரை தலித்தாகவே இருக்க வேண்டும். நெற்றியில் பிறந்த இவர் உயர் குலத்தவராகவே இருக்க வேண்டுமாம். தனது காலை காட்டி அவர் சொல்வதைத்தான் நான் தனி புகைப்படமாகவும் எடுத்துள்ளேன்.

எந்த அளவு வர்ணாசிரம வெறி இந்த பார்பன கிழவரின் மனதில் உள்ளது என்று பாருங்கள். 70 வயதுக்கு மேல் இறப்பின் ஞாபகம் வந்து நல்லது செய்ய மனம் தோணும். அனால் இந்த கிழவரோ தனது காலைக் காட்டி இதுதான் தலித்தின் நிலை என்கிறார். இதனை காஞ்சி ஜெயேந்திரரும் சிரித்துக் கொண்டே ஆமோதிக்கிறார். இந்த வயதிலும் வர்ணாசிரம வெறி இவ்வளவு தூரம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த வர்ண அடுக்கு முறையை இவர்களின் வேதங்கள் ஸ்மிருதிகள் புராணங்கள் அனுமதிப்பதாலேயே! மற்ற மதங்களில் சாதி பிரிவு இருந்தாலும் அது இந்த அளவு வெறியாக மாறி பார்த்ததில்லை. அந்த பெருமை ஆரியர்கள் உருவாக்கிய இந்து மதத்துக்கே சேரும் என்றால் அது மிகையாகாது.


https://www.youtube.com/watch?v=It7sVWNXx1E

1 comment:

UNMAIKAL said...

பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

சூத்திரன் என்றால் யார்?

சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!

கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: "சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

*************

மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

"ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

"பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

"பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

"வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".

.