Followers

Friday, May 08, 2015

சல்மான்கானை தூற்றி விட்டு யுவனை பாராட்டலாமா?



//கூத்தாடி சல்மான்கான் இஸ்லாமியன் அல்ல என்று சொல்றவங்க தான்
அந்த கூத்தாடிக்கு தாளம் போடுற யுவனை முஸ்லீம்னு சொல்றாங்க,// -ram nivas

இஸ்லாமிய தாய் தந்தையருக்கு பிறந்ததினாலோ அல்லது அரபியில் தனது பெயரை வைத்துக் கொள்வதாலோ ஒருவர் முஸ்லிமாகி விட முடியாது. இஸ்லாமிய அடிப்படையான ஏக இறைவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். முகமது நபியை கடைசி இறை தூதராகவும் ஒத்துக் கொள்ள வேண்டும். இதுதான் அடிப்படை. மற்ற சட்டங்களெல்லாம் பிறகுதான்.

ஆனால் சல்மான்கான் தன்னை இந்து முஸ்லிம் என்று கூறிக் கொள்கிறார். தனது மாநிலத்தில் பிள்ளையாரை வணங்குகிறார். இது போன்ற இரட்டை வேடத்தை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. ஒன்று இந்துவாக இரு. அல்லது முஸ்லிமாக இரு. இரண்டிலும் இருந்து கொண்டு இரண்டு இடத்தையும் குழப்ப வேண்டாம் என்பதுதான் இஸ்லாமியரின் நிலைப்பாடு.

யுவன் சினிமாவுக்கு தாளம் போடுவது தவறுதான். கூடிய விரைவில் தன்னைத் திருத்திக் கொள்வார். இஸ்லாமிய பார்வையில் இது சிறிய பாவம்.

ஆனால் படைத்த இறைவனை விடுத்து கல்லையும் மண்ணையும் வணங்கி வந்த யுவன் இன்று முஸ்லிமாக மாறி ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவார். பெரும் பாவத்திலிருந்து தப்பித்துக் கொண்டார். தனது தந்தையையும் கூடிய விரைவில் இந்த அன்பு மார்க்கத்துக்கு அழைத்து வந்து விடுவார். கவலை வேண்டாம். தாயும் தந்தையும் இந்துவாக இருந்தாலும் குர்ஆனை விளங்கி இன்று இஸ்லாத்தை ஏற்றுள்ளார் யுவன். இதிலிருந்து பிறப்பினால் எவனும் இஸ்லாமியனாகி விட முடியாது. குர்ஆனின் கட்டளைகளை கடைபிடிப்பவரே முஸ்லிமாக முடியும் என்று விளங்கலாம்.

//இந்துக்களை இழிவு செய்பவனை தானே முஸ்லீம்னு ஏத்துக்க முடியும்,
சரி தானே நசீர் பாய்???!//// - ram nivas

யுவன் இந்துக்களை இழிவு செய்யவில்லையே! சொல்லப் போனால் ஆரியர்களால் வஞ்சிக்கப்பட்டு பல தெய்வ வணக்கத்தில் வீழ்ந்த யுவன் இன்று தமிழனின் பூர்வீக கொள்கையான 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற இடத்துக்கல்லவா வந்துள்ளார். அவரை பாராட்டாமல் இப்படி தூற்றலாமோ!

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே

- திருமந்திரம் 2104

படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒரே தன்மையை உடையவனாம் இவை அனைத்துக்கும் ஒருவனே இறைவன். இதை உணர்ந்து இறைவனை அன்புடன் நினைந்து அருள் பெருவதால் இவ்வுலக வாழ்வும் மறு உலக வாழ்வும் சிறப்புற்றிருக்கும்.. நாணப்படாமல் சேரும் அருள்வாழ்வு ஒன்றே ஒன்றுதான். வேறுவாழ்வெல்லாம் நாணப்படக் கூடியவையாம் எனவே உங்கள் உள்ளத்தில் இறைவனை எப்பொழுதும் நினைந்து வாழுங்கள்.

2 comments:

mohamedali jinnah said...

சிறந்த விளக்கம்
வாழ்த்துகள்

Anonymous said...

ஒரு விடயத்தை இந்தியப் பத்திரிகையும் (தினகரன்) இலங்கைப் பத்திரிகையும் (தமிழ் மிரர்) கூறும் விதத்தைப் பாருங்கள். இந்தியத் தினகரன் பத்திரிகையின் முஸ்லிம் விரோதப் போக்குக்கு ஆதாரம் இதோ.

(தமிழ் மிரர்) http://www.tamilmirror.lk/145671

(தினகரன் - இந்தியா) http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=144797

- வள்ளுவன்