Followers

Friday, May 22, 2015

இஸ்லாம், கிருத்தவம், இந்து மூன்றுமே இந்த மண்ணுக்கு அந்நியம்தானே!



திரு ஹானஸ்ட் மேன்!

//இந்துமதம் இன்று படுபாதாலத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பது என்பது உண்மையே. உங்கள் வருத்தம் கலப்பு ஏதுமற்ற உண்மையானது. அது உங்கள் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து வருகிறது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. இப்படி இந்து மதத்தின்மீது அளவுகடந்த பக்திகொண்ட நீர் அதை தடுத்து நிறுத்த உங்களின் செயல் எதுவும் வேண்டாம் atleast உங்களின் ஆக்கப்பூர்வ கருத்துக்களை இங்கே சொல்லலாமே! அதற்கு மாறாக ”””’அந்நிய””” மதத்தவர்களின் கொள்கைகளுக்கு ஜால்ரா போடுவதுதான் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர்கள் உங்களை பாராட்டுவதும் நீங்கள் அவர்களை ஆஹா ஓஹோ போற்றுவதும் கொஞ்சமும் சகிக்கவில்லை//

ஆர்எஸ்எஸின் போதனைகள் உங்களின் மனதில் எந்த அளவு அழுக்கை விதைத்திருக்கிறது என்பதை உங்கள் எழுத்தே காட்டிக் கொடுக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பரந்த எண்ணத்துக்கு எப்போது வரப் போகிறீர்கள். இந்துத்வாவின் குறுகிற மன ஓட்டத்தை எப்போது கைவிடப் போகிறீர்கள்?

அந்நிய மதம் என்று இஸ்லாம் கிருத்தவத்தை மட்டும் ஏன் சொல்ல வேண்டும். இந்து மதம் தமிழனுக்கு அந்நிய மதம்தானே! ஆரிய படையெடுப்புக்கு முன்பு இந்து மதமோ, சமஸ்கிருதமோ தமிழன் அறியாதவைகள்தானே! ராமன், சீதை வாழ்ந்த பெரும்பாலான பகுதிகள் இன்று தாலிபான்கள் கையில் அல்லவா உள்ளது? மொகலாயர் ஆட்சிக்கு முன்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகள் என்று தமிழகமே நான்கு நாடுகளாகவல்லவா பிரிந்து கிடந்தது? இஸ்லாமியருமு;(மொகலாயரும்), கிருத்தவரும் (ஆங்கிலேயர்) இல்லை என்றால் அகண்ட பாரத் ஏது? எனவே இந்து, கிருத்தவம், இஸ்லாம் என்ற இந்த மூன்று மதங்களும் இந்த நாட்டுக்கு அந்நியமே! மூன்றையும் ஒரே தரத்தில் வைத்தே பார்க்க வேண்டும்.

//அவர் இந்தியனாக இருப்பதில் நமக்கு ஒருவித ஆட்சபனையும் இல்லை. ஆனால் அவர் ”அந்நிய” மதமான இஸ்லாமியராக இருப்பதும் இந்துக்களை கிண்டலடிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை.//

இன்று இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு காலத்தில் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே. தனது பூர்வீக மதம் முகவரி இழந்து பொய்க் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் வரும் வார்த்தைகளே அவை. எடுத்துச் சொல்லும் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சியுங்களேன்.

//தன்னை பெற்ற தாய் நோய்வாய் பட்டால் .அவளை குணபடுத்த முயற்சிக்கவேண்டுமே அன்றி அவளை ஒதுக்கிவிட்டு எதிர் வீட்டு (இன்னொருத்தனின்) அம்மாதான் எனக்கு அம்மா என்று கூறுவது சரியா (((அதாவது இந்து மதத்தில் தவறுகள் இருந்தால் அதை திருத்த முயல்வதற்கு பதிலாக ”அந்நிய” மதம்தான் சிறந்த மதம் அதுதான் இனி என் மதம் என்று கூறுவது போல) நான் கூறுவது தவறா என்று உங்களுக்கு free time கிடைக்கும்போது ஆற அமர சிந்தித்து பாருங்கள். நல்ல ஒரு விடை கிடைக்கும்.//

அதையே தான் நானும் சொல்கிறேன். தமிழனுக்கு ஆரிய மதமான இந்து மதம் பூர்வீக மதம் அல்ல. சந்தர்ப்ப வசத்தால் சில குழந்தைகள் மாற்றாந்தாய் அல்லது செவிலித்தாய் பராமரிப்பில் வளருவதில்லையா? அது போல்தான் ஆரிய படையெடுப்பால் இன்று தமிழனின் தொன்மையான வழிபாட்டு முறைகள் மறைக்கப்பட்டு ஆரிய வழிபாடுகள் முன் நிறுத்தப்பட்டன. கோவிலில் இருந்த தமிழ் வழிபாட்டு முறை நீக்கப்பட்டு சமஸ்கிரதம் வலிந்து உள்ளே புகுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் ஆரிய மயமாக்கலுக்கு உறுதுணையாக இருந்ததால் இது இலகுவாக சாத்தியப்பட்டது. அது இன்று வரை தொடர்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலினுள் தமிழை கொண்டு போக ஆறுமுக சாமி இன்று வரை என்ன பாடுபடுகிறார் என்பதை நமது காலத்திலேயே பார்த்தோம்.

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ன கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும் ஆள்வோர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை. கர்நாடகாவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காஷ்மீரில் ஒரு பண்டிட் கொடுமைபடுத்தப்பட்டால் இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பத்திரிக்கைகளும், ஆளும் வர்க்கமும் கொதித்தெழுகின்றன. அந்த குடும்பத்தையே டெல்லிக்கு அழைத்து வந்து சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவர்களின் குழந்தைக்கு படிப்பு முதலான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. காஷ்மீரில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு வசதிகளோடு தங்க வைக்கப்படுகின்றனர். ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் ஆனாலும், பிஜேபி ஆனாலும், கம்யூனிஸ்டுகள் ஆனாலும் இதுதான் நிலை. ஏனெனில் எல்லா கட்சிகளிலுமே அந்த கட்சிகளை ஆட்டுவிக்கும் அதிகார மையத்தில் பார்பனர்களே இருப்பர்.

தனக்கு பிறக்காத ஒரு குழந்தையை ஒரு மாற்றாந்தாய் எப்படி நடத்துகிறாளோ அது போல்தான் இந்து மதத்தில் தமிழர்களும், தமிழ் மொழியும் நடத்தப்படுகிறது. தமிழையும், தமிழர்களையும் அவனது சொந்த தாயிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். பிரச்னை தீர்ந்து விடும். திருக்குறள், திரு மந்த்ரம், திருவாசம், போன்ற தமிழ் நூல்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறட்டும். வர்ணாசிரமத்தை போதிக்கும் ராமாயணமும், மஹா பாரதமும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த மனு தர்மமும் அவர்களின் சொந்த நாட்டுக்கே செல்லட்டும்.

1 comment:

Dr.Anburaj said...

தமிழ்நாடு அரசு இன்றே ஒரு சட்டத்தைப்போடு அனைத்து மக்களும் திருக்குறள் திருமந்திரம் அருடபெருஞ்சோதி அகவல் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் பாராயணம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டால் எனக்கு சம்மதமே. முறையானசமய கல்வி இல்லாததுதான் இங்கு நிறைய பிரச்சனைகளுக்கு காரணம். ஆாியா்கள் என்று யாரும் இல்லை. திருவாசகம் கடவுளை -சிவபெருமானை- பாசமாம் பற்றருத்துப் பாரிக்கும் ஆாியனே என்கிறாா். ஆாியா்கள் திராவிடா்கள் என்பது கட்டுக்கதை.அப்படியே அதில் எதேனும் உண்மை இருப்பின் - திராவிடா்களும் ஆாியா்களும் இரண்டறக் கலந்து விட்டாா்கள்.தனியே பிாிக்க எந்த கொம்பனாலும் முடியாது.ஆகவே ஆாியம் திராவிடம் என்று பேசுவது சாதிவெறியாகும். இன்று இந்தியா உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியா்களே என்ற கருத்து அனைத்து மக்கள் மனதில் வலுவடைய வேண்டும்.