Followers

Saturday, May 23, 2015

குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? – திருமந்திரம்



குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? –திருமந்திரம்

//சுவனப்பிரியன்!

இந்துக்களாகிய நாங்கள் எ்ங்கள் மதத்தை நவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அகோரிகளைப்பற்றி எழுதும் நேரத்தில் தாயுமானவர் திருமந்திரம் பற்றி எழுதுங்களேன்! குப்பைகளைப் பற்றி எழுதுவானேன்.// - டாக்டர் அன்பு ராஜ்

டாக்டர் அன்பு ராஜின் விருப்பத்திற்கினங்க இன்று திருமந்த்ரம் என்ன சொல்கிறது என்று பார்போம்.

நித்தியானந்தா, பிரேமானந்தா, சாய்பாபா என்று வரிசையாக பல இந்து ஆன்மீக தலைவர்களை குருக்களை நமது காலங்களிலேயே பார்த்து வருகிறோம்.


குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறை நிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:


குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்


வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்..

சிஷ்யனும் ஏதும் அறியா குருடன். அவன் பின்பற்றும் குருவும் ஏதும் அறியா குருடன். இருவருமே கருத்துக் குருடர்கள். இந்த இரண்டு குருடுகளும் ஒன்றாகி ஒருவருக்கொருவர் வழி காட்டினால் முடிவில் தவறான பாதைக்கு சென்று வீழ்ந்து அழிவர் என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி யறியச் சிவபதந்தானே.



1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் நமக்கு குருவாக எப்படிப்பட்டவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. மேலே சொன்ன திரு மூலரின் பாடல் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.

-----------------------------------------------------------

முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.

-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430

பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?

ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.

-நூல் இப்னுமாஜா 3303.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.

-தப்ரானி 12494

அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

-புகாரி 2837, 3034,4101


முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.

-புகாரி 3906

இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.

3 comments:

C.Sugumar said...

எனது கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு கோடானுகோடி நன்றி ஐயா. ஆனாலும் முகம்மது நபியின் தகுதி பற்றி மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது. ஒரு அரேபியனை வழிகாட்டியாக ஏற்க இயலாது. தங்களது கட்டுரை முகம்மதுவை முழுமையாக காட்டவில்லை. அவருக்கு இருண்ட பக்கம் உள்ளது.

Dr.Anburaj said...

எனது கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. ஆனால் அரேபிய ஆதிக்கத்தை ஏற்க இயலாது. இந்து கலாச்சாரத்தின்படி வாழ நினைக்கும் எங்களுக்கு அரேபிய கலாச்சாரத்தை மட்டும் இறை அ்ங்கிகாரம் பெற்றதாக போதிக்கும் இசுலாமிய தத்துவம் பயன்தராத ஒன்று. மேலும் தங்களது கட்டுரை முகம்மதுவை முழுமையாகக் காட்டவில்லை. அவருக்கு கொடூரமான இருண்ட பக்கம் உள்ளது.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
1.சாதி வெறி கொண்டவராக இருந்தாா்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.புகாரி 3501
பனூ ஃபஸாரா குலத்தினரின் தலைவியாக உம்மு கிர்ஃபா என்ற வயதான பெண்மணி இருந்தார்.
”தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது" என்று கூறினார்கள்.
புகாரி 4425

என்று முஹம்மதிற்கு அல்லாஹ் கற்பித்துக் கொடுத்திருக்கிறான். எனவே பனூ ஃபஸாரா குலத்தை உருப்படச் செய்ய வேண்டுமென்ற ஒரு நல்ல நோக்கத்திற்காக பனூ ஃபஸாரா நோக்கி தனது அடியாளான ஜைத் பின் ஹாரிதாவை அனுப்புகிறார்.


தபரி V-8, பக்- 96

அங்கு நடந்த புனிதப் போரில், ஜைத் மரணஅடி வாங்கியதுடன் தனது சகாக்கள் சிலரையும் இழந்துவிடுகிறார். எஞ்சி இருந்தவர்களும் ஜைத்தும் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர். ஜைத்தின் மனதில் அடக்க முடியாதவெறி; பனூ ஃபஸாராவை வெற்றி கொள்ளும்வரை தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதில்லை அதாவது குளிக்கமாட்டேன் என்பதாக சபதம் செய்கிறார்.......பனூ ஃபஸாராத்தினரை வாதில் குர்ரா என்ற இடத்தில் நேருக்குநேர் சந்தித்து வெற்றி கொள்ளகிறார்.வழக்கம் போல அவர்களின் தலைவி உம்மு கிர்ஃபா மற்றும் அவரது அழகிய மகள்கள் உட்பட பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாகக் கைப்பற்றப்படுகின்றனர். உம்மு கிர்ஃபாவின் இயற்பெயர் ஃபாத்திமா பின்த் ராபியா பின்த் பத்ர்.உம்மு கிர்ஃபாவில் இரண்டு கைகளையும் கால்களையும் தனித்தனியாக கட்டி இரண்டு ஒட்டகங்களுடன் இணைத்து அவரது உடலை இரண்டாக கிழித்து எறிந்தனர். பின்னர் உம்மு கிர்ஃபாவின் மகளையும் அப்துல்லா பின் மஸாதா என்பவரையும் முஹம்மதின் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினர். உம்மு கிஃபாவின் மகளை முஹம்மது சலமா பின் அல்அக்வஉ வழங்குகிறார்.......உம்மு கிர்ஃபாவின் அழகிய மகள் சலமாவிற்கு வழங்கப்பட்டதை, ஒரு இறைத்தூதரால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அவள் அரபியரிலேயே அழகிய பெண் ஆவாள். அவர்களைப் பிடித்துக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அவளுடைய மகளை எனக்குக் கூடுதல் பங்காக வழங்கினார்கள்.
இந்நிலையில் நாங்கள் (மதீனாவுக்கு) வந்தோம். நான் அவளுக்காக ஆடையைக்கூடக் களைந்திருக்கவில்லை. (தாம்பத்திய உறவு கொள்ளவில்லை. மதீனாவின்) கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "சலமா! அப்பெண்ணை என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார்கள். நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் என்னைக் கவர்ந்துவிட்டாள். நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை'' என்று கூறிவிட்டேன்.
பிறகு மறுநாள் கடைத் தெருவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்த போதும் "சலமா! அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடுவாயாக! உன் தந்தை (உன்னைப் போன்ற மகனைப் பெற்றெடுத்ததற்காக) அல்லாஹ்வுக்கே (நன்றி)'' என்று கூறினார்கள்.
நான் "அல்லாஹ்வின் தூதரே! அவள் உங்களுக்கே உரியவள் (அவளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன்). அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவளுக்காக ஆடையைக்கூட களைந்திருக்கவில்லை'' என்று கூறினேன்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளை மக்காவாசிகளிடம் அனுப்பிவைத்து, மக்காவில் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களில் சிலரை விடுவித்தார்கள்
முஸ்லீம் 3609

Dr.Anburaj said...

முஸ்லீம்கள் கூட்டாக தொழுவது போன்ற காட்சிகள் எல்லாம் வெறும் கண்காட்சிதான்-mere show .பிற மதத்தவா்களை அழிக்க நினைப்பவா்கள்தான் கூட்டம் சோ்த்து வல்லாதிக்கம் செய்வா்கள்.பின் தங்களுக்குள் சண்டையிட்டு அழிவாா்கள்.