'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, May 21, 2015
தன்பாலினத் திருமணத்தை அறிவித்த தாய்! எங்கே போகிறது இந்தியா?
எந்த ஒரு தாயும் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமானதுதான். ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு தாய், தனது மகனுக்கு பொருத்தமான மணமகன் வேண்டும் என்று விளம் பரம் செய்துள்ளார். ஆம் அவரது மகன் தன்பாலின உறவாளர் என்பதுதான் அதற்குக் காரணம்.
மும்பையைச் சேர்ந்த பத்மா அய்யரின் (58) மகன் ஹரீஷ் அய்யர் (36). தன்பாலின உறவாளரான இவர், மும்பையின் தன்பாலின உறவாளர், திருநங்கைகள் (எல்ஜிபிடி) வட்டாரத்தில் மிகவும் பரிச்சயமானவர். ‘யுனைடெட் வே ஆப் மும்பை’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். தன்பாலின உறவாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இவர் அடிக்கடி செய்திகளில் வருவார்.
இந்நிலையில், பத்மா அய்யர் நேற்று முன்தினம் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், “தன்னார் வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் எனது மகன் ஹரீஷ் அய்யருக்கு 25 முதல் 40 வயதுள்ள, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய, விலங்கு மீது அன்பு செலுத்தும், சைவ உணவுப் பழக்கம் கொண்ட மணமகன் தேவை. ஜாதி தடையில்லை (அய்யருக்கு முன்னுரிமை)” என கூறப்பட்டுள்ளது.
இதில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் தினமும் வெளியாகும் பல்லாயிரக்கணக்கான திருமண விளம்பரங்களைப் போலவே உள்ளன. ஆனால், தன்பாலின உறவாளர் மணமகனுக்கு அதே இன மணமகன் தேவை என்று அவரது தாயே விளம்பரம் செய்திருப்பதுதான் சிறப்பு.
இந்தியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி இருப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தைப் பாராட்டியும் குற்றம்சாட்டியும் சமூக இணையதளங்களில் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-05-2015
தன் மகன் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்து விட்டானே என்று வருந்தி .... அவனுக்குரிய சிகிச்சை செய்து குணப்படுத்தாமல் அவனுக்கு ஒரு ஆண் மகனை பெற்ற தாயே தேர்ந்தெடுக்கும் கொடுமையை என்னவென்பது?. அதிலும் கூட இந்த அம்மா சாதியை விடாமல் 'அய்யர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்' என்று அறிவிக்கிறது. இதிலுமா அந்த பாழாய்ப் போன சாதியை பிடித்து தொங்க வேண்டும். நமது தமிழகத்தில் கூத்தாண்டவர் கோவில் என்று கூறி உலகத்திலிருந்து அனைத்து அரவாணிகளையும் விழுப்புரத்துக்கு அழைத்து வந்து கலாசார சீர்கேட்டையும் ஊக்குவிக்கின்றனர்.
இதற்கு மேலும் இது பற்றி எழுதினால் என் மதத்தில் மூக்கை நுழைக்காதே என்று சென்னி மலையும் ராம் நிவாஸூம் சண்டைக்கு வருவார்கள். எனவே இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று இனி பார்போம்.
-----------------------------------------------
"மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்" (குர்ஆன் - 4:1)
இதிலிருந்து ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இறைவன் படைப்பில் உள்ளது. மூன்றாம் பாலினம் அதாவது 'அரவாணிகள்' என்ற படைப்பே கிடையாது என்று விளங்குகிறோம். நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் அதிகம் நடைபெறும் போது இது போன்ற குரோமசோம்களின் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று குர்ஆனும் தடை செய்கிறது. சிறு வயதிலேயே இதனை கண்காணித்து அவர்களை மருத்துவ மனைகளில் சேர்ப்பித்து விட வேண்டும். வயது முதிர்ச்சி அடைந்து விட்டால் பிறகு குணப்படுத்துதல் சிரமமாகி விடும்.
நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், அவர்க(அரவாணிகளை)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் 'இன்னாரை' வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் 'இன்னாரை' வெளியேற்றினார்கள். (புஹாரி - 6834)
இதிலிருந்து நமக்கு தெரிய வருவது பெண்களை போல் நளினமாக நடந்து குழைந்து பேசினாலும் அவர்கள் ஆண்களே என்று விளங்குகிறோம். சிறு வயதில் பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளையும் ஆண் குழந்தைகளுக்கு பெண் உடைகளையும் அடிக்கடி போட்டு மனதளவில் பாலின மாற்றம் நடக்க பெற்றோரே காரணமாகி விடுகிறோம். ஆண்களை ஆண்களாகவும் பெண்களை பெண்களாகவும் வளர்த்தால் குறைபாடுடைய பிள்ளைகளை ஓரளவு சரி செய்து விடலாம்.
மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு கோடானகோடி செல்லிலும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள், பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி 23-வது ஜோடி குரோமோசோம்கள் மட்டும் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. இதில் ஏற்படும் குளறுபடிகளே ஒருவனின் செயல்களில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவர்கள் 'பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள்' (47XXX), அல்லது 'ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள்' (47XYY) அல்லது 'பெண்பண்புகள் கொண்ட ஆண்கள்' (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.
சவுதி அரேபியாவில் இது போன்று பாலின மாறுபாட்டுடையவர்களை கண்டு பிடித்து அரசு செலவில் அவர்களை சரி செய்கின்றனர். மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர் யாஸிர் ஜமால் கூறுகிறார் 'நெருங்கிய உறவினர்களிடையே திருமண பந்தம் அமைத்துக் கொள்பவர்களின் குடும்பத்தில் இது போன்ற குரோமசோம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கின்றன. சிறு வயதிலேயே அவர்களின் நடத்தையில் மாற்றங்கள் இருந்தால் உடன் எங்களிடம் கொண்டு வந்து விடுங்கள். கவுன்சிலிங் மூலமாக பலரை சரிபடுத்தி விடுகின்றோம். ஹார்மோன்கள் செலுத்தியும் சிலரை குணப்படுத்தியுள்ளோம். ஆண்களை பெண்களாகவோ பெண்களை ஆண்களாக மாற்றுவதையோ நாங்கள் செய்வதில்லை. அதனை இஸ்லாமும் அனுமதிப்பதில்லை. சவுதி அரசாங்கமும் அனுமதிப்பதில்லை. இது வரை எங்கள் மருத்துவ குழு 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து குறைபாடுடையவர்களை முழு ஆண்களாகவும், முழு பெண்களாகவும் மாற்றி அமைத்துள்ளோம்' என்கிறார். கடந்த 25 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக சவுதி கெஜட் தெரிவிக்கிறது. தனியாருக்கு இதற்கான செலவு 10000 ரியாலில் இருந்து 50000 ஆயிரம் ரியால் வரை ஆகும. வசதியுள்ள பெற்றோர் குழந்தைகளை ஜெத்தா அழைத்து சென்று அவர்களை முழு ஆண்களாகவோ பெண்களாகவோ மாற்ற முயற்சி எடுப்பார்களாக!
இவ்வாறு மக்களின் நலனில் அக்கறை எடுக்காத நமது அரசு மக்கள் வரிப் பணத்தில் அரவாணிகள் நல வாரியம் அமைத்து ஓரினச் சேர்க்கையாளர்களை அரசே ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும். அந்த அரவாணிகளை சவுதி அரேபியாவுக்கு அரசு செலவில் அனுப்பி குறைபாடுடையவர்களை முழு ஆண்களாகவும், முழு பெண்களாகவும் மாற்ற நமது அரசு முயற்சிக்க வேண்டும்.
கடந்த 25 வருடங்களாக சவுதி அரேபியாவில் இருந்து வருகிறேன். மிக அரிதாகத்தான் அரவாணிகளை நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் சவுதி அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கையே. ஓரினச் சேர்க்கையை தடை செய்தும் அதில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்கிறது சவுதி அரசு. ஆனால் நமது அரசோ அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து பலரையும் வழி கெடுக்கிறது.
சென்ற ஆண்டு குடும்பத்தோடு டெல்லி, ஆக்ரா சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது ஆந்திராவை ரயில் நெருங்கியவுடன் 10க்கு மேற்பட்ட அரவாணிகள் ரயிலில் ஏறினர். எல்லோரிடமும் பணம் வசூலித்தனர். பணம் தராதவர்களை அறுவறுக்கத்தக்க கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தனர். அவமானத்தால் சிலர் வேண்டா வெறுப்பாக பணத்தை கொடுத்தனர். இது ஒரு வகையில் பகல் கொள்ளை. அங்குள்ள ஆண்கள் சிலர் ரயிலின் மறைவில் அந்த அரவாணிகளிடம் கூச்சமில்லாமல் அத்து மீறி நடந்து கொண்டனர். சமூகம் இதனையும் அனுமதிக்கிறது. ஓரினச் சேர்க்கையை வெட்கமில்லாமல் செய்தும் சமூகத்தில் உயிர்க் கொல்லி நோய்களை பரப்புபவர்களுமான இந்த அரவாணிகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசும் சமூகமும் இவர்களை கண்டித்தால் பலர் திருந்த வாய்ப்புண்டு. அரசும் சமூகமும் இவர்களை அனுமதித்தால் இந்த எண்ணிக்கை மேலும் பெருகவே வாய்ப்புண்டு. பலரது குடும்பத்தை சீரழிக்கும் இந்த அரவாணிகளை மன நல காப்பகத்தில் சேர்ப்பித்து அரசு செலவில் சிகிச்சைக்காக சவுதி அரேபியா அனுப்ப அரசு முயற்சிக்குமா?
தகவல் உதவி
சவுதி கெஜட்
அரப் நியூஸ்
பிபிசி
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஓரினச்சேர்க்கை பிலிப்பினோக்கள் பின்னாடி சவுதிகள் செல்வதை நீங்கள் பார்த்ததில்லை போலும்..
Post a Comment