அம்பேத்கரின் கொலை - ஆர்.எஸ்.எஸ் திட்டம்
இப்போது அம்பேத்கர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு புதிய ‘பக்தி’ வந்திருக்கிறது! நான் இந்து’வாக பிறந்தாலும் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்று பிரகடனப்படுத்திவிட்டு தனது தொண்டர்களுடன் இந்து மதத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு புத்தநெறியில் இணைந்தவர் டாக்டர் அம்பேத்கர்.
புத்தநெறியை கடுமையாக எதிர்த்தவர்கள் ஆர்.எஸ்எஸ் காரர்கள்
‘ இந்து மதத்தின் சாதி அமைப்பை புத்தமதம் தகர்த்துவிட்டது; சாதி அமைப்பு தகர்ந்து போனதால்தான் வடகிழக்கு மாநிலங்களில் முஸ்லீம் மதம் செல்வாக்குப் பெற்றுவிட்டது.’என்று கோல்வால்கள் தனது ‘Bunch of Thoughts’ நூலில் குறிப்பிடுகிறார்.
“இப்போது நான் இந்தியாவில் மிகவும் வெறுக்கப்படுகிற மனிதனாக இருக்கிறேன். என்னை இந்துக்களின் எதிரி என்கிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய எதிரி என்கிறார்கள்” என்று டாக்டர் அம்பேத்கர் அவ்ர்களே மனம் குமுறிச் சொன்னார். (ஆதாரம்: தனஞ்செய்கீர் எழுதிய Ambedkar, Life and Mission நூலில் Page 195) அப்படிப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களையே தீர்த்துக்கட்டும் ஒரு சதிமுயற்சி நடந்திருக்கிறது.
அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் – இந்திய குடியரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்காமைச்சார்ந்த டி.ஏ. காட்டி (D.A,Katti ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். 2-2-1980 ல் பெங்களூரில் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசினார். அவர் தெரிவித்த விவரம் இதுதான்:
“வீர சவர்க்கரின் தம்பி பாபா சவர்க்கார் நாசிக் பீட ஜகத் குருவிடம் , தமக்கு 500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார். அந்த பணம் அம்பேத்கரின் சமையல்காரருக்கு லஞ்சமாகத்தர கேட்க்கப்பட்ட பணம்! அதாவது அம்பேத்கர் உணவில் விஷம் கலந்து கொடுத்து, சாகடிக்க – அவரது சமையல்கார்ரிடம் ரூ.500 லஞ்சம் கொடுக்க பாபா சவர்க்கார் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால், சங்கராச்சாரி இதற்கு பணம் தர மறுத்துவிட்டார். இத்தகவலை பிரபல மராத்திய எழுத்தாளர் – நாடக ஆசிரியரான பி.கே. அட்ரே (P.K.Atre) அவர் நடத்திய “மராத்தா” என்ற மராத்திய நாளிதழில் வெளியிட்டார்.
காந்தியார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வீர சவார்க்காரின் தம்பி, பாபா சவார்க்கார் ஆர்.எஸ்.எஸ் ஐ துவக்கிய ஐவர் குழுவில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் ஆவார்.
(“தலித் வாய்ஸ்” 16-04-1982 இதழில் இருந்து இத்தகவல் எடுக்கப்பட்டுள்ளது)
அதுமட்டுமல்ல – கோயில் நுழைவுப் போராட்டம், நடத்தியபோது அம்பேத்காரை கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற தகவலையும் டி.ஏ. காட்டி தனது உரையில் வெளியிட்டிருக்கிறார். இந்த சதிகாரர்கள் கூட்டம்தான் இன்றைக்கு அம்பேத்காருக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கிறது.
அன்றைக்கு காங்கிரஸ் கட்சியிலே முன்னணியிலே இருந்த பல தேசியத் தலைவர்களின் படங்களை எல்லாம் தங்கள் பூட்ஸ்களுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களை அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டு – இவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்ற தகவலை காந்தியாரின் உதவியாளராக இருந்து காந்தியார் வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தனது நூலில் குறிப்பிடுகிறார்!
அந்தக் காலங்களில் மட்டுமல்ல; இந்தக் காலத்திலும் கூட இவர்களின் தீர்த்துக் கட்டும் சதிவேலை முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நூல்: ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்- விடுதலை ராஜேந்திரன்
1 comment:
பெரும்தலைவர் காமராஜ் அவர்களை உயிருடன் கொளுத்த முயன்ற கூட்டமும் இதுதான்.
மறக்கப்பட்ட வரலாற்றை சிறிது புரட்டிப்பார்ப்போம்.
1966 ம் வருடம் நவம்பர் 7 ந் தேதி டில்லியில் சங்கராசாரியர்களின் தலைமையில் சாதுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்வோர் பாராளுமன்றத்தின் மீது ஆர்.எஸ்.எஸ், ஜனசங்கத்தின் ஆதரவில் தாக்குதல் நடத்துகின்றனர்.
பசுவதை தடைச்சட்டம் அமுலாக்கக் கூறி வீதிகளில் சூலாயுதம்,மற்றும் பல ஆயுதங்களுடன் சாதுக்கள் களம் இறங்குகின்றனர். பெட்ரோலை கொண்டு வானொலி நிலையம்,தபால் அலுவலகம் கொளுத்தப்படுகிறது.
காமராஜர் அவர்கள் பகல் உணவு முடித்துவிட்டு ஓய்வாக இருந்தபொழுது அவரது வீட்டை சூழ்ந்து கொண்டு தீ வைத்து கொளுத்தி கொல்ல முயன்றனர். அதில் மயிரிழையில் தப்பிப்பிழைத்தார்.
நவ சக்தி. 3-11-1966.
Post a Comment