Followers

Tuesday, May 05, 2015

அரவிந்த் பாண்டியின் தர்ஹா சம்பந்தமான சந்தேகம்!

நண்பர் அரவிந்த் பாண்டி!

//தர்கா என்பது ஒருவரின் அடக்கஸ்தலம் அங்கு சென்று இறைவனை வழிபடலாம் இறந்த்வர்களை தான் வழிபட கூடாது, அப்படியென்றால் முஸ்லிம் அனைவரும் என் மதீனவிற்கு செல்கிறீர்கள்??? அங்கு என்ன உள்ளது நபியின் அடக்கஸ்தலம் தான் உள்ளது அங்கு எதற்கு ஹஜ்,உம்ரா செல்கிறீர்கள்???//

ஹஜ், உம்ரா கடமைகள் அனைத்தும் நடப்பது புனித மெக்காவில். ஹஜ், உம்ரா செல்பவர்கள் இவ்வளவு தூரம் வந்து விட்டோம் நபிகள் நாயம் கட்டிய பள்ளியிலும் தொழுது வருவோம். அங்கு தொழுதால் நன்மை அதிகம் என்ற நோக்கில் செல்வர். மெக்காவுக்கும் மதினாவுக்கும் ஏறத்தாழ 550 கிலோ மீட்டர் தூரம்தான் என்பதால் இது ஒரு சிரமமாக ஹஜ் செய்பவர்களுக்கு இருக்காது.

ஆனால் சில பேர் நபிகள் நாயகம் அடங்கியுள்ள அடக்கத் தலத்தை தரிசிப்போம் என்று வருபவர்களும் உண்டு. இதனை நபிகள் நாயகமே கண்டித்துள்ளார்கள். தனது அடக்கத் தலத்தை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்கள். ஆனால் அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது நபிகள் நாயகத்தின் அடக்கத் தலத்தில் நின்று கொண்டு பிரார்த்தனை புரிவதும், அந்த கட்டிடத்தைக் கட்டிக் கொண்டு அழுவதும் பலர் அறியாமையால் செய்கின்றனர்.

இதனால் தான் சவுதி அரசாங்கம் சில காவலர்களை அங்கு எப்பொதும் நிறுத்தி வைத்திருக்கும். அழுது கொண்டும் பிரார்த்தனை புரிந்து கொண்டும் இருப்பவர்களை தடுத்து 'பள்ளியில் சென்று பிரார்த்தியுங்கள். இது தவறு' என்று அன்பாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பர். நபி அவர்களை கடவுளாக ஆக்கி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இது. இதனை தினமும் பலரும் பார்க்கலாம். நானும் பார்த்துள்ளேன்.

உங்களின் சந்தேகம் விலகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

-------------------------------------------------------

சமாதிகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது சமாதிகள் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால் அல்லாஹ் சபித்து விட்டான். என, தனது மரணத் தருவாயில் நபி அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி.

நீங்கள் எனது சமாதியை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

No comments: