Followers

Thursday, May 28, 2015

தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே!



இந்த கிறுக்கனின் கிறுக்குத் தனமாக செய்கையை பார்த்து விட்டு ஆச்சரியத்தில் இவன் மண்டையை போட்டவுடன் இவனுக்கும் தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே! ஏன் சொல்றேன்னா....துண்டு பீடி குடிச்சு அனாதையாக இறந்து போனவனை எல்லாம் 'பீடி மஸ்தான் வலியுல்லா' என்ற பெயரில் தர்ஹா கட்டி அங்கும் காசு பார்க்கிறது ஒரு கூட்டம். எனவே நாம் முதலிலேயே எச்சரித்து விடுவது நல்லது. :-)

11 comments:

UNMAIKAL said...

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்! PART 1.

அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம்.

குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?

1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !

2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !

3. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!

4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!

5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!

6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!

7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)

8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!

9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!

10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !

11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!

12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.

மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.


அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!

1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)

continues....

UNMAIKAL said...

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்! PART 2.

47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்
பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!

இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?
இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?

இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?

மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ?

இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?

இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?

என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.

இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன?
என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா?

இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ?

உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை?

திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங்கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?

இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே!

இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

THANKS: http://mudunekade.blogspot.com.

UNMAIKAL said...

தர்கா வழிபாடு

• ஒரு மனிதரை மகான் என்று நாம் தீர்மானம் செய்ய முடியுமா?
• அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை மகான்கள் என நமக்கு அறிவித்தார்களோ அவர்களுக்கு இறைத் தனமையோ அல்லது இறைத் தன்மையில் சிறு பகுதியோ உண்டா?
• மகான்கள் அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிகையில் மகான்களைப் பிரார்த்திப்பது தவறா?
• தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி?
• மகான்கள் கனவில் வந்து கட்ட்ளை இடுவது பொய்யா?
• மக்கத்துக் காஃபிர்களின் கொள்கைக்கும் தர்கா வழிபாடு செய்வோரின் கொள்கைக்கும் இடையே வித்தியாசம் உண்டா?
• நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமா?
• வஸீலா தேடுவது தவறா?
• தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?
• நல்லடியார்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்களா?
• சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; மகான்களை வணங்கலாம் என்பது சரியான வாதமா?



இறைவனின் கடும் எச்சரிக்கைக்கு அஞ்சி தர்கா வழிபாட்டை விட்டொழிப்போம்.


>>> இங்கே <<<
சொடுக்கி படிக்கவும்.

.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு சுவனப்பிரியன் அவர்களுக்கு,
கூகுள் தமிழ் தேடலில் 'கூ.செ.செய்யது முஹமது' என்று வினவினால் என்னைப்பற்றி மேல் விவரங்கள் அறிய வருவீர்கள்.நான் நான்கு கலீஃபாக்களுக்குப் பிறகு ஆரம்பித்து 800 வருடங்களுக்கும் அதிகமாக உலகம் முழுவதும் ஆட்சி செய்த இஸ்லாமிய ஆட்சியை வரலாறாக எழுதி வருகிறேன்.இது சௌதி அரேபியா, மலேஷியா, இந்தியாவிலிருந்து நமது சகோதரர்கள் நடத்தும் சில வெப் மற்றும் ப்ளாக்குகளில் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வலைகளில் வர இருக்கிறது. அதன் விவரம்:
http://www.islamkalvi.com/?page_id=103796
http://readislam.net/pdf/salahuddin.pdf
http://ilayangudikural.blogspot.sg/
http://islamhistory-vanjoor.blogspot.sg/
http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html
https://www.youtube.com/watch?v=zYluBPv-2kc
எனது சொந்த ப்ளாக்கான
http://islamiyaatchivaralaru.blogspot.in/2014/08/blog-post_2.html க்குச் சென்று முதலில் "அறிமுகம் மற்றும் நுழையும் முன்" பகுதிகளைப் படித்தால் நீங்களே அறிந்து கொள்வீர்கள். இவ் வரலாறுகளை நம் சமுதாயத்திற்கு தங்கள் வலையின் மூலம் கொண்டு சென்று பலன்களைப் பெற்றிட வேண்டுகின்றேன். மேலும் விவரங்களுக்கு zubair61u@gmail.com ல் தொடர்பு கொள்ளவும். வஸ்ஸலாம்.
கூ.செ. செய்யது முஹமது.

Anonymous said...

கபுர் வணங்கி ..கபுர் முட்டி ....தர்ஹா வழிபாடு ..இனி யாராவது ஒரு உண்மையான மூமினை மனத்தால் நினைத்தாலே ...அவன் மாபெரும் பாவி !
சொல்வது அதைவிட பாவி !
ஒவ்வொரு தர்ஹாவிலும் அல்லாஹ்வை வணங்கும் பள்ளிவாசல் இருப்பதை ஏன் ..இவர்களின் குருட்டு கண்களுக்கு தெரிவதில்லை ..?
தினமும் ஒரு குர்ஆன் வசனம் காப்பி பேஸ்ட் பண்ணுபவர்களுக்கு ..
இறைநேசர்களை பற்றி ரப்பு குர்ஆன் இல் சொன்ன வசனங்கள் ஏன் கண்ணில் படவில்லை >>?
ஏனென்றால் இவர்கள் ரப்பான ...குர்ஆன் வசனங்களை பிழையுடன் எழுதிவைத்து இருக்கும்
ஈனர்களின் வெப்சைட்டில் அதெல்லாம் இல்லை !
அரபி இலக்கணம் ..அரபி ஞானம் தெரிந்த உண்மை உலமாக்களிடம் கேட்க்காமல் ..
இந்த பிரிவினை கூட்டத்தில் உள்ள கைக்கூலியான ஆலிம்களிடம் கேட்டால் ...அவர்கள் எப்படி சொல்வார்கள் ?
மழுப்புவார்கள் !
இப்போது நீங்க வாழ்ந்து கொண்டிருக்கும் ..வாழ்க்கை நடைமுறை எதுவும் குர்ஆன்ஹதீஸில் ஆதாரம் இருக்கா ,...?
என உற்று உணர்ந்து பாருங்கள் உங்கள் மண்டையில் அறிவு இருந்தால் ..!
எதாவது ரஸூலுல்லாஹ் சொன்னது செய்தது நீங்கள் இப்போது செய்கிறீர்களா ..?
செல்போன் கணினி ..ஜீன்ஸ் ...மீடியாக்கள் போன்ற விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் ஏதும் இருந்ததா ..?
இதையெல்லாம் எப்படி காலத்திற்கு தக்கவாறு உங்கள் மனம் சர்வ சாதரணமாக ஏற்றுக்கொள்கிறதோ...?
அதேபோல் தான் நாங்களும் >>
கண்ணியம் கவ்ரவம் மரியாதை....என்பது எது எது என்பதை யும் .>
வணக்கம்..இபாதத் என்றால் எது எது ..என்பதை ..அருமையாக அழகாக ...யதார்த்தமாக ...ஏற்று நடந்தும் வருகிறோம் ..!
இனிமேல் யாராவது கபுர்வணங்கி என்று சொன்னால் ...
அவனை பொருட்படுத்தாதீர்கள் ..உதாசீன படுத்துங்கள் !
இந்த நோஸ்கட் அவனை சிந்திக்க வைக்கும் சத்தியத்தின் பக்கம் இழுக்கும் !
கபூரை இடிக்கனும் என்று சொன்னால் ..பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து இடிக்க வையுங்கள் !
அவன் கையில் ஆயுதத்தை எடுத்த அடுத்த நிமிடம் அவன் நம்முடன் போர் செய்யவில்லை ..
அல்லாஹ்வுடன் போரிடுகிறான் !
அவனின் பரம்பரைக்கே சாபத்தை தேடிக்கொண்டான் ...என்று விட்டுவிடுங்கள் !
உங்கள் உயிருக்குயிரான நண்பனை ஒருவன் ஏசினாலோ..கேலி பேசினாலோ....நோவினை செய்தாலோ....
பார்த்துக்கொண்டிருக்கும் நீங்கள் சும்மா இருப்பீர்களா ..?
நண்பனை தூரப்போக சொல்லிவிட்டு அவனை ...உங்களால் முடிந்த அளவு புரட்டி புரட்டி அடிப்பீர்கள் அல்லவா ..?
அதுபோல்தான் ..அதைவிட அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்களை...அவர்களின் வீடுகளை பற்றி தூஷிப்பவனை அல்லாஹ் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறான் என்றால் ..
அவனை ஏழாம் நரகத்திற்கும் கீழாய் போடப்போகிறான் என்று தான் அர்த்தம் !
அவன் படைத்த நரகத்திற்கு வேறு எப்படி பசி அடங்கும் ..?
ஆதலால் ..இவர்களை பார்த்து நாம் துஆ செய்ய வேண்டும் ..!
வலிமார்களும் நம் கண்மணி நாயகமும் ...செய்யும் துஆ வைக்கொண்டுதான்
இவர்களுக்கு விமோசனம் ..!
அந்தோ..பரிதாபம் ...இது தெரியாமல் ஆடுகிரான்கள் !
நன்றி மறந்து !

Anonymous said...

நாம் அவ்லியாக்களின் தர்காக்களுக்கு சென்று , அவர்கள் மூலமாக , எமது நாட்டம்கள் நிறைவேற , வசீலா அல்லது அவர்களது சிபார்சை வேண்டுகிறோம் .

இந்த வேண்டுதலை , அல்குரான் , சூராஹ் zurkuf வசனம், 86 இல் , " உதவி கோர அல்லாஹ் அனுமதித்த, ஹக்கைக் கண்டு சாட்சியம் கூறியவர்கள் என்று பறைசாற்றுகிறது .

" எனது உம்மத்தினர் உலகம் முடியும்வரை இனிமேல் முஸ்ரிக்குகளாக மாறமாட்டார்கள் என நான் அல்லாஹ்வின் மீது ஆணை இட்டுக் கூறுகிறேன் " ( Volume 2, Book 23, Number 428: Sahih buhari )
என்று இறைத்தூதர் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்து உறுதி அளித்திருக்கும் நிலையில் , வஹ்ஹாபி வழிகேடர்கள் , முமின்களைப் பார்த்து கப்ரு வணங்கிகள் ( முஷ்ரிக்குகள் ) என்று இழிந்து அவதூறு பரப்புவார்களேயானால், அவர்கள் பற்றிய இரண்டு இரகசியம்களை அறிந்து கொள்ளலாம் .

1.அவர்கள் இறைத்தூதரை பொய்யர் ஆக்கியதால் முனாபிக்குகள் என்பது
,2,அல்லாஹ்வின் நேசர்கலான ஒவ்ளியாக்களை சிலைகளுக்கும் அவர்கள் மீது பேரன்பு கொண்டு அவர்களிடம் வசீலா எனும் சிபார்சைக் கொண்டு உதவி கோரும் முமின்களை முஷ்ரிக்குகள் என்றும் கூறுவதால், அவர்கள் திருக்குரானின் கூற்றுப்படி விபசாரிகள் என்பது என்பனவாகும் .

Anonymous said...

”சூஃபி யார்?” இந்தக் கேள்விக்கு வரையறுப்பது போல் ஒரு பதிலைச் சொல்ல முடியாது. இதனை அறிந்தே பாரசீகத்தில் ஒரு சொலவடை உருவானது: “சூஃபி யார்? சூஃபியே சூஃபி!” (சூஃபி ச்சீஸ்த் சூஃபி சூஃபீஸ்த்).

எனினும், சூஃபி என்பவர் முஸ்லிம் ஞானி, முஸ்லிம் சித்தர், முஸ்லிம் யோகி, முஸ்லிம் அத்வைதி என்றெல்லாம் அடையாளப்படுத்தும் பதில்கள் உண்டு. இந்தியச் சூழலில் இந்த பதில்களே சூஃபி என்பவர் யார் என்று சட்டென்று அறிமுகப்படுத்தப் பொருத்தமானவை.
ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. சூஃபி என்பவர் மிகவும் சாதாரண மனிதராக, மற்ற மனிதர்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளாத ஒருவராக வாழக் கூடும். அதாவது, சாதாரண மனிதர்களின் வாழ்க்கை முறை சூஃபியாக இருப்பதற்குத் தடையானதல்ல. சூஃபிகள் பல கோலங்களில் உலகெங்கும் நிறைந்திருக்கிறார்கள். டீக்கடைக்காரர், பெட்டிக்கடை வியாபாரி, தொழில் அதிபர், ஆசிரியர், மருத்துவர், பொறிஞர், ஆசாரி, நாவிதர், விளையாட்டு வீரர், சிப்பாய், இல்லத்தரசி, தோட்டக்கலைஞர், ப்ளம்பர், ஓட்டுநர்- நடத்துநர், தள்ளுவண்டி வியாபாரி, அரசியல் தலைவர் (?)… இப்படி எந்தக் கோலத்திலும் சூஃபிகள் இருக்கலாம்.


சூஃபிகள் எல்லாம் சராசரி மனிதர்களைப் போலவே இருப்பார்கள் என்றாலும் அவர்கள் அகத்தில் விழிப்புப் பெற்றவர்கள். இந்த அண்ட சராசரத்தின் அடிப்படையாக இருக்கும் இறைவனுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மின்சாரம் பாயாத இரும்புச் சங்கிலியும், பாயும் இரும்புச் சங்கிலியும் பார்வைக்கு ஒரே மாதிரி தெரியலாம். ஆனால் தொட்டுப்பார்க்கும் போது அவை தரும் அனுபவம் நிச்சயமாக ஒன்றுபோல் இருக்காது. சூஃபிகள் இறையாற்றல் செயல்படும் கருவிகள்!

Dr.Anburaj said...

சவுதி அரேபியன் போல் இந்திய முஸ்லிம்கள் வாழ முடியாது.சவுதி அரேபியன் போல் வாழ்வது தான் ஆன்மீகம் என்று மிகதரங்கொட்ட முறையில் ஆன்மீகத்தை எடுத்துக் கொள்ளவது இரத்த களறிக்கே வழி வகுத்துக் கொண்டிருக்கின்றது. ஈராக்கிலும் ஈரானிலும் பிற குழு சண்டைக்கும் காரணம் புாவிக நாகாீகத்திற்கும் அரேபிய நாகாீகத்திற்கும் உள்ள மோதல்தான்.

Dr.Anburaj said...

முகம்மது பகிமு கல்லறைகளுக்கிடையே பிராா்தனை செய்தாா் என்ற தகவலை ஏன் வெளியிடவில்லை

Dr.Anburaj said...


இந்து மதத்திலும் அலகு குத்துவது தீமதிப்பது சாமி ஆடுவது தீச்சட்டி எடுப்பது வேப்பிலை கட்டி ஆடுவது போன்ற பழக்க வழக்கங்கள் தங்களை செல்வாக்கை இழந்து வருகின்றன. கத்தி போடுவது கண்ணை பிடுங்குவது போன்ற பழக்க வழக்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்.

abusalik786 said...

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக தர்ஹா பற்றி பிரச்சாரம் செய்வது சரி ஆனால் இப்போ முன்பை விட மக்கக்கள் அதிகல் கூடுகிறார்கள்
காரணம்
தர்ஹா வை விமர்சனம் செய்தவர்கள் இப்போ தங்களுடைய
குறை களை சொல்லி cd விற்பனை செய்து வருகிறது