'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, May 02, 2015
இந்து மதத்திலிருந்து தாய் மதம் திரும்பிய முஸ்லிம்கள்!
ஆக்ராவில் கடந்த டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்களது மதத்துக்கு மறு மதமாற்றம் செய்து கொண்டனர்.
ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று மாபெரும் மத மாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் மத மாற்றம் செய்துகொண்டனர். இதில் மஹூர் லத்தியா கிராமத்தைச் சேர்ந்த 'நத்' வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும் அடங்குவர். இந்து மதத்துக்கு மாறினால் நிலம் வழங்கப்படும் என்று இந்துதுவ அமைப்பின் தலைவர் வாக்குறுதி அளித்ததன் பேரில் இவர்கள் அந்த நிகழ்ச்சி நடந்தபோது இந்து மத்துக்கு மாறினர்.
இந்த நிலையில் தற்போது சுமார் 17 முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து மீண்டும் மறு மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். மறு மதமாற்றம் செய்துகொண்ட முதியவர் ராமாத் கூறும்போது, "அலி முகமது என்றவர் எங்களது குடும்பத்தினரை மதமாற்றம் செய்துகொள்ளும் படி கூறினார்.
நிலம் தருவதாக இந்துதுவா தலைவர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. எங்களது சமூகத்தை சேர்ந்தவர்களும் எங்களை ஒதுக்கி தள்ளினர். திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை உறவினர்கள் அழைப்பதில்லை. அதனால் திரும்பவும் எங்களது மதத்துக்கு மாறி விட்டோம்" என்றார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று 100 இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மத மாற்றம் செய்துகொண்டால் ஆதார் அட்டை, பணம், நிலம் ஆகியவை வழங்கப்படும் என்று நிகழ்ச்சியை நடத்திய இந்துதுவ அமைப்புகள் அறிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
02-05-2015
எந்த மதத்தவரையும் பணம், பதவி காட்டி மதம் மாற்றினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மேற்கண்ட நிகழ்வு நமக்கு சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகிறது. முன்பு முகலாயர் ஆட்சியில் கத்தியை காட்டி கட்டாய மதமாற்றம் செய்வித்ததாக தொடர்ந்து பொய் பிரசாரம் இந்துத்வாவாதிகளால் பரப்பப்படுகிறது. அது நடைமுறை சாத்தியமில்லாதது என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது. தற்போது மோடி மற்றும் அமீத்ஷா தலைமையில் நடந்து வரும் இந்துத்வ ஆட்சியில் இந்துக்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறுபான்மையினர் அச்சுறுத்தலில் உள்ளதாக இந்துத்வா தலைவரான அருண் ஷோரியே பேட்டி கொடுக்கும் நிலையில்தான் இந்தியாவின் நிலை உள்ளது. அப்படி இருந்தும் இந்து மதம் போன இஸ்லாமியர் தாய் மதம் திரும்பியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாளாலும் அதிகாரத்தாலும் எந்த மக்களையும் அதிக நாட்களுக்கு ஒரு மதத்தில் அடக்கி வைக்க முடியாது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இனியாவது இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற திரிபு வாதத்தை இந்துத்வாவாதிகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழ் இந்து நாளிதழில் இந்த கட்டுரைக்கு ஒரு இந்து நண்பர் எழுதிய பின்னூட்டத்தையும் கீழே பார்போம்....
"ஹா ஹா ஹா. ஆசை காட்டி மோசம் செய்துவிட்டார்களா RSS மற்றும் VHB சாமியார்கள். இது அவர்களுக்கு வழக்கமான ஒன்று தான். RSS கூமுட்டைகளுக்கு விவரம் பத்தவில்லை என்றே நான் நினைக்கிறேன். மதம் மாறிய மக்களுக்கு பேசியபடி நிலத்தை வழங்கியிருக்கலாம். சிறிது நாட்கள் கழித்து பாஜக அமல்படுத்திய நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை பயன்படுத்தி, "மோகன் பகவத் அன் கோ" என்ற பெயரில் "தாயத்து கம்பெனி" ஒன்றை ஆரம்பிக்கிறோம் ஆதலால் நிலம் வேண்டும் என புருடா விட்டு, கொடுத்த நிலத்தையெல்லாம் திரும்ப பிடுங்கியிருக்கலாம். பழியும் அரசு மேல் சென்றிருக்கும்."
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment