'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, May 12, 2015
உயிரினங்கள் அனைத்தின் மூலம் தண்ணீர் - குர்ஆன்
'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
-குர்ஆன் 21:30
இந்த அழகிய வசனத்தில் 'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம்' என்ற வாசகத்தை எடுத்துக் கொள்வோம்.
உயிர் வாழக் கூடிய அனைத்தின் உடல்களும் செல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. உயிரினங்களின் செல்களின் மூலம் தண்ணீர் என்கிறது உயிரியல். செல்களின் மூலப் பொருளான சைடோ பிளாஸம் 80 சதவீதம் தண்ணீரால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை. மைக்ரோஸ்கோப் கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர்தான் சைடோ பிளாஸம் பற்றிய ஆய்வுகளே நடத்தப்பட்டது. 1835 ஆம் ஆண்டுகள் வாக்கில்தான் இதன் பயன்பாடே அறியப்பட்டது. ஆனால் இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மிக சர்வ சாதாரணமாக சொல்லிச் செல்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
புரூஸ் ஆல்பர்ட் என்ற அறிவியல் மேதை எழுதிய புத்தகம் "Essential Cell Biology". இந்த புத்தகம் அறிவியல் உலகில் மிக பிரபலமாக பேசப்படும் ஆய்வு புத்தகமாகும். பல பதிப்புகள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்துள்ளது. ஆய்வுக்காக மாணவர்கள் விரும்பி படிக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆய்வில் உயிர்களின் மூலம் தண்ணீர் என்பதனை மிகத் தெளிவாக ப்ரூஸ் ஆல்பர்ட் விவரித்துள்ளார். தேவைப்படுவோர் இந்த புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.
குர்ஆன் இறை வேதம்தான் என்பதனை மேற்கண்ட வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
Bruce Alberts, Essential Cell Biology
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
குரானுக்கும் cell Biology க்கும் சமபந்தமில்லை. பத்தகம் ஒன்றும் குரான் படித்தத்ன் அடிப்படையில் எழுதப்படவில்லை.நீாின்றி அமையாது உலகம் என்ற கருத்து குரானுக்கு முந்தையது. குரானுக்கு 500 -1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் இல்லாத விசயம் போல் எழுதுவது வியப்பாக உள்ளது.
Post a Comment