இஸ்லாத்தை நான் ஏன் விட வேண்டும்?
//என் மனதில் மதமே இல்லை. இல்லாத மதத்தை எப்படி தூக்கி எறிவது.// -சுப்பு ராஜா
//உங்க நலஞ்சிணுங்கியையும் அப்படியே மதத்தை தூக்கி ஓரமா வச்சிட்டு வா சகோதரான்னு
Nazeer Ahamed -ஐ கூப்பிடுங்க பார்ப்போம்.....// - ram nivas
அதாவது சுப்பு ராஜா தனது மதத்தின் மேல் உள்ள வெறுப்பால் நாத்திகராக உள்ளார். அதே போல் நஜீர் அஹமதாகிய நானும் இஸ்லாத்தை உதறி விட்டு வருமாறு கேட்கச் சொல்கிறார் ராம் நிவாஸ்.
முதலில் சில அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
சுப்புராஜா போன்ற எண்ணற்ற இந்து இளைஞர்கள் தமிழகத்தில் நாத்திகர்களாக மாறியது ஏன்? ஒரு நாத்திக கட்சியே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அளவுக்கு வளர்ச்சி கண்டது ஏன்? தனது சொந்த மதத்தையே கிண்லடித்து பிரசாரம் பண்ணும் நிர்பந்தத்தை உண்டாக்கியது யார்? அதற்கான காரணத்தை சற்று அலசுவோம்.
பண்டைய தமிழகம் அறிவிலும் ஆற்றலிலும், தெய்வ வழிபாடுகளிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. திருக்குறள், திரு மந்த்ரம் போன்ற காலத்தால் அழியாத இலக்கியங்களும் சமய நூல்களும் தமிழனின் பெருமையை இன்றும் பறை சாற்றி வருகின்றன.
ஆனால் சில சதிகளின் காரணமாக ஆரியர்கள் நமது நாட்டுக்கு படையெடுத்தனர். பூர்வ குடிகளான திராவிடர்களை வஞ்சகத்தால் வீழத்தினர். ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றினர். அரசர்களையும் தங்கள் அடிமைகளாக்கினர். தமிழர்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் வேத நூல்களையும் திட்டமிட்டு அழித்தனர். அவ்வாறு அழித்ததோடு அல்லாமல் தங்களின் மொழியை தேவ மொழியாக பெரும்பான்மை மக்களின் மனதில் ஏற்றினர். தங்களின் வேதங்களையும் திராவிடர்களின் தலையில் கட்டினர். அனைவரையும் இந்து மதம் என்ற ஒரு கோட்டுக்குள் கொண்டு வந்து மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தனர்.
உழைக்காமல் வயிறு வளர்க்கும் தாங்கள் உயர் சாதி என்றும் உழைக்கும் மற்ற மூன்று வர்ணத்தார் தாழ்ந்த சாதிகள் என்றும் மேலும் ஆதி திராவிடர்களை சூத்திரர்கள் என்ற இழி நிலைக்கு தள்ளியும் சட்டங்களை மனுவின் உதவியால் எழுதிக் கொண்டனர். எதிர்த்தவர்களை சாமி குத்தம் என்று அடக்கினர். மேலும் எதிர்த்தவர்களை கொலையும் செய்தனர். எதிர்க்க வழியில்லாமல் திராவிடர்களும் கடந்த 3000 வருடங்களாக ஆரியர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். அது இன்று வரை தொடர்கிறது.
மனிதனை பிறப்பால் பிரத்தாளும் இந்த வiர்ணாசிரம கொடுமையை எதிர்த்து பல மக்கள் கிருத்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மதம் மாறினர். எஞ்சியுள்ள மக்கள் தங்களின் பெற்றோரின் மதத்தை விட்டு விட மனமில்லாமல் நாத்திகர்களாகவும், பகுத்தறிவாதிகளாகவும் மாறியுள்ளனர்.
எனது முன்னோர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்து வரவில்லை. வர்ணாசிரம கொடுமையிலிருந்து தப்பிப்பதற்காக இஸ்லாத்தை ஏற்றனர். ஆனால் எடுத்த முடிவோ மிகச் சரியான முடிவு. இன்று என்னை யாரும் நான்கு வர்ணத்துக்குள் அடைக்க முடியாது. இஸ்லாத்துக்குள் யாரையும் யாரும் திருமணம் செய்து கொள்ளலாம். கோவிலில் ஒரு குறிப்பிட்ட சாதிதான் நுழைய முடியும் என்று இஸ்லாத்தில் யாரும் என்னை தடுக்க முடியாது.
தேர் இழுப்பதில் எந்த சாதிக்கு முன்னுரிமை என்ற பஞ்சாயத்தில் வட மாவட்டங்களில் தேவர், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நேற்று கூட கலவரம் வெடித்துள்ளது. வருடா வருடம் இந்த பஞ்சாயத்துதான். இதை எல்லாம் பார்த்து தான் சுப்பு ராஜா, s kaarthikeyan போன்ற நடுநிலைவாதிகள் மதத்தை வெறுத்து பகுத்தறிவாதிகளாக மாறுகின்றனர். ஒரு சிலர் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொள்கின்றனர்.
எனவே இஸ்லாத்தை விட்டு விடச் சொல்லி என்னை வற்புறுத்துவதற்கு பதில் இந்து மதத்தில் உள்ள குறைகளை களைய முயற்சிக்கச் சொல்லி உங்கள் இந்துத்வா தலைவர்களிடம் ஆலோசனைகளை சென்னி மலை ram nivas போன்றவர்கள் வைப்பது நல்லது. அது ஒன்று தான் இந்து மதத்தின் அழிவை கொஞ்சமாவது காப்பாற்றும்.
செய்வீர்களா? ....... நீங்கள் செய்வீர்களா?
No comments:
Post a Comment