
உத்தரப் பிரதேசம் ஷாஜகான்பூர் பகுதியில் ஆதிக்க சமூகத்தினர், 5 தலித் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
உத்தரப் பிரதேசம் ஷாஜ கான்பூர் மாவட்டத்தில் ஹரேவா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்துள்ளனர். இருவரும் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், 5 தலித் பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் கம்பால் அடித்து உதைத் துள்ளனர். சுமார் 4 மணி நேரம் கிராமம் முழுவதும் தெருத் தெரு வாக நிர்வாணமாக சுற்றிவரச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணின் தந்தை உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியபோது, எங்களை அநாகரிக வார்த்தைகளால் திட்டி, செருப்புகளை வீசி, சாலையில் நிர்வாணமாக அழைத்துச் சென்றனர். உள்ளூர் போலீஸார்கூட இதை வேடிக்கை பார்த்தனர், பக்கத்து கிராம மக்கள் தலையிட்டு எங்களை மீட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
20-05-2015
சாதி விட்டு சாதி திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றால் அதற்கு சம்பந்த மில்லாத பெண்களை நிர்வாணமாக்கி ஊரில் அழைத்து செல்வது எந்த வகை நியாயம். காட்டுமிராண்டிகள் வாழம் சமூகத்தில்தான் நாமும் வாழ்கிறோம்.
1 comment:
விவேகானந்தரது ஞானதீபம் லட்சக்கணக்கான இந்தியா்கள் மனதில் இன்னும் ஏற்றப்படவிலலை என்று தொிய வருகின்றது. கயவர்களுக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும்.
Post a Comment