Followers

Tuesday, July 21, 2015

ATM ல் கிடைத்த 26 லட்சத்தை ஒப்படைத்த அப்துல் லத்தீஃப்!



ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ATM கார்டை சொருகி கடவுச்சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார்.

ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் சடசடவென வெளியே வந்துள்ளது. அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை. 200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டும் தன்னுடைய முஸ்லிம் நண்பனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த SR நகர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக வந்த காவல்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே இருந்துள்ளது. அனைவரும் ஒரு நொடியின் அதிர்ச்சியடைந்து மாணவன் அப்துல் லத்தீபை கட்டியணைத்தனர். ATM இயந்திரம் சரி செய்யப்பட்டது. நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சிமிகு இந்த சம்பவத்திற்கு ஆளான மாணவன் அப்துல் லத்தீபை அனைவரும் வெகுவாக பாராட்டினர். போலீஸ் கமிஷனர் மகேந்திர ரெட்டி அந்த மாணவனைப் பாராட்டி பணமுடிப்பும் கொடுத்து கவுரவப்படுத்தியுள்ளார்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
21-09-2014

இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் மறைத்து விடும். குர்ஆன் காட்டிய வழியில் நடைபோடும் இந்த லத்தீஃப்தான் உண்மையான முஸ்லிம். வேலையில்லா பட்டதாரியான இவருக்கு பணத்தின் தேவை எவ்வளவு என்பது நமக்கும் தெரியும். ஆனால் தன்னைப் படைத்த இறைவன் பார்த்துக் கொண்டுள்ளான். மறுமையில் இதற்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்ற பயத்தினாலேயே இந்த காரியத்தை செய்துள்ளார் லத்தீஃப்.

இது போன்ற கல்லூரி மாணவர்களை அதிகமதிகம் இறைவன் உருவாக்குவானாக! நாமும் முயற்சிப்போமாக!

The Hyderabad police on Saturday felicitated a youth who found the cash box of an ATM with Rs 24 lakh unlocked and called the police. Sheikh Latif Ali had gone to withdraw Rs 200 from a State Bank of Hyderabad ATM on Friday night when he found the cash box open with no guard around. He called the police who found Rs 24 lakh in the unlocked ATM machine. It was later learnt that there was no CCTV camera. Ali, 22, completed his B.Tech (Electrical) this year and lives in a men’s hostel in Sanjeev Reddy Nagar. On Friday, he went to the ATM at State Bank of Hyderabad’s main branch in S R Nagar with two of his friends. “There was no guard outside and I did not find anything unusual. I inserted the card to withdraw Rs 200. As the machine dispensed the cash, a small door on the side of the machine fell open and currency notes fell out. I was dumbstruck as my account has not more than Rs 500. I asked my friends waiting outside to look for the security guard but they found no one,” Ali said. Ali said he tried to call a toll free number written on the notice board but it was for SBH life insurance. “Then I remembered ‘dial 100’ slogan and called police. A police team reached within 7 minutes,” he said. Detective Inspector N Shankar said that it was gross negligence on the part of the bank staff who forgot to lock the machine properly. “These boys, all of them looking for jobs, went to withdraw Rs 200 but found so much cash. There was no security guard and the ATM does not have a CCTV camera. They could have done anything they wanted. Instead, they decided to inform the police,’’ Shankar said. Police Commissioner M Mahendar Reddy felicitated Ali and gave him a certificate and cash reward on Saturday.



http://indianexpress.com/article/india/india-others/jobless-youth-finds-unlocked-atm-with-rs-24-lakh-calls-cops/#sthash.hJW3Eb1w.dpuf

2 comments:

முஹம்மத் அலி ஜின்னா said...

நம்மை முஸ்லிமென்று இந்தியாவில் தலைநிமிர்ந்து நடக்க வைத்துவிட்டார் அப்துல் லத்தீப். இது போல் நாலு முஸ்லிம்கள் வந்தால் போதும். முஸ்லிமுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வரும். அல்லாஹ் இவர் மீது அருள் பொழியட்டும்.

Dr.Anburaj said...

அப்துல் வத்தீப் செய்த சாதனை இசுலாமிய சாதனை என்பது முட்டாளதனம். எல்லா மதங்களிலும் உத்தம குணங்கள் கொண்ட மாமனிதா்களை காணலாம். ஆக லப்தீப் அவர்களின் நோ்மை பாராட்டத்தக்கது. எவளாவது எவனைக் கூட்டிக் கொண்டு ஓடினால் தலைப்புச் செய்தியாக நமது பத்திாிமைகள் போட்டுவிடுவாா்கள். என்ன செய்வது பத்திாிகை தா்மம் அந்த அவலட்சணமாக உள்ளது. எனக்கு ஒரு நல்ல தகவலை அளித்தமைக்கு தங்களுக்கு நன்றி.நன்றி.