Followers

Tuesday, January 19, 2016

தற்கொலைகளை தடுக்க முடியாதா?





படிப்பில் எந்த குறையும் இல்லை: தோற்றத்திலும் எந்த குறைவும் இல்லை: சிந்தனையிலும் எந்த குறையும் சொல்ல முடியாது:. ஆனால் ரோஹித் என்ற அந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மெத்த படித்த மேதாவிகள்தான் அதிக தற்கொலையை நாடுகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. படிப்பு செல்வம் எல்லாம் இருந்தும் மனதில் அமைதி இல்லை. பட தயாரிப்பாளர் ஜிவிக்கு இல்லாத செல்வாக்கா? பண பலமா? ஆனாலும் அவரும் தற்கொலையே தீர்வு என்று செல்கிறார்.

அதே நேரம் உங்கள் அருகில் இருக்கும் இஸ்லாமியர்களை நோட்டமிடுங்கள். தற்கொலையின் நினைவே அவர்களுக்கு இருக்காது. பெற்ற மகன் இறந்தாலும் பெற்ற தாயே இறந்தாலும் 'இறைவன் விதித்தது அவ்வளவுதான்' என்று கூறி வெகு சுலபமாக அதனை எடுத்துக் கொள்வார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தற்கொலையை நாடுவதில்லை. ஏனெனில் அவர்களிடம் இருப்பது அசைக்க முடியாத இறை நம்பிக்கை.

உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார கழகம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் வரை படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆச்சரியமாக இந்த வரை படத்தில் இஸ்லாமிய நாடுகள் தற்கொலை விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த பட்டியலில் முற்றிலுமாக வரவில்லை.

கிறித்தவர்கள், நாத்திகர்கள், இந்துக்கள், யூதர்கள், சீனர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எவரையுமே இந்த தற்கொலையானது விட்டு வைக்கவில்லை. அந்த அளவு மக்களின் வாழ்வு முறை நிம்மதியற்று போய்க் கொண்டுள்ளது. மன அமைதி இழந்த மனிதன் உடன் தற்கொலையை நாடுகிறான்.

மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

theguardian
04-09-2014

மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் எனது முப்பாட்டன் ராமசாமியா? பத்மனாபனா? கிருஷ்ண மூர்த்தியா? யாரென்றே தெரியாது. ஆனாலும் ஏதோ ஒரு சாதிப்பிரிவிலிருந்து வந்துள்ளேன். இன்று அந்த சாதியும் துடைத்தெறியப்பட்டு உலக முஸ்லிம்களில் ஒருவனாக உள்ளேன். மனச் சிதைவு என்பது என்னையும் என்னைப் போன்றவர்களையும் சிறிதும் அண்ட விடாது ஐந்து வேளை தொழுகை காப்பாற்றுகிறது. நாங்கள் தொழுவதால் இறைவனுக்கு தகுதி உயர்ந்து விடுவதில்லை. எங்களின் மன நிலையை சீராக்கி கொள்ள இந்த தொழுகை பயன்படுகிறது

எல்லா புகழும் இறைவனுக்கே.....

-----------------------------------------------------------

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28





1 comment:

Dr.Anburaj said...


முறையான சமயகல்வி இல்லாததுதான் காரணமாக இருக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு முறையான சமயகல்வி அளிக்க வேண்டும்.