Followers

Tuesday, July 19, 2016

நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!



நோயாளிகளை நலம் விசாரிக்கும் அழகிய பண்பு!

'நோயாளிகளின் நண்பர்கள் குழு' என்ற அமைப்பு மருத்துவ மனைக்கு விஜயம் புரிந்தது. துப்புறவு தொழிலாளர்கள் பலர் வாகன விபத்தில் சிக்குண்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்தித்து 20 மேற்பட்ட விலையுயர்ந்த மொபைல் போன்களையும் வேறு சில பொருட்களையும் அன்பளிப்பாக கொடுத்து விட்டு வந்தனர் இந்த அமைப்பினர்..

இந்த வேலை செய்பவர்களை நம் நாட்டில் 'தோட்டிகள்' என்று இழிவாக பார்த்து அவர்களை கீழ் சாதியாக ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் இந்த அரபுகள் உழைப்பதில் எந்த இழிவும் இல்லை என்பதை உணர்ந்து அந்த மக்களை பெருநாள் தினத்தன்று மருத்துவ மனைக்கே சென்று நலம் விசாரித்த பண்பு பாராட்டத் தக்கது.

தகவல் உதவி
சவுதி கெஜட்
18-07-2015

பெருநாள் தினத்தன்று மாலை நேரங்களில் பெரும்பாலான சவுதிகள் குடும்பம் சகிதமாக நோய் வாய் பட்டவர்களை நலம் விசாரிக்க சென்று விடுவர். இதனை நான் நேரிலேயெ பார்த்துள்ளேன். இந்த பழக்கத்தை தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும்.

நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில்

”ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

நூல் ஆதாரம்:(ஸஹீஹ் முஸ்லிம்)

1 comment:

Dr.Anburaj said...


விழாக்காலங்களில் இப்படி மினுக்குவது தொண்டு அல்ல. இசுலாம் - காபீா்களின் இறைவனுக்கு இணை வைப்பவனை- சிலை வணக்கம் செய்பவனை - முஹம்மதுவை ரசுல் என்று ஏற்றுக் கொள்ளாதவன்
தொண்டையை அறுக்கும் இயக்கம்.