முஸாஃபர் நகரில் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களுக்கு
முஸ்லிம் லீக் சார்பில் வீடுகள் அர்ப்பணிப்பு.....!!
உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் பாஜகவினர்
முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம்
நடத்தினர்.
பாஜக பயங்கரவாதிகளின் இந்த வன்முறை வெறியாட்டத்தில் ஏராளமான
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் பலநூறு கோடி மதிப்பிலான வீடுகளும், சொத்துக்களும் சூறையாடப்பட்டன.
பல முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமான
முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி சொந்த ஊரை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் வீடுகளை இழந்து தவிக்கும் முஸாஃபர் நகர்
முஸ்லிம்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 100 வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது.
அதன் முதல்கட்டமாக 61 வீடுகள்
கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு பள்ளிக்கூடமும்,
பள்ளிவாசல் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் உடைமைகள் வைக்க ஒவ்வொரு இல்லத்திற்கும் தலா ஒரு பீரோவும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் மத்திய, மாநில அரசுகள் எந்த உதவியும் செய்வதில்லை,
மாறாக எங்கு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே பிற முஸ்லிம்கள்
கை கோர்த்து உதவி செய்து வருகின்றனர்.
அரசாங்கத்தின் உதவிகளே இல்லாமல் ஒரு சமுதாயம் வாழ்கிறது
என்றால் அது முஸ்லிம் சமுதாயம் மட்டுமே...
இறையருள் நிறைந்த 61 இல்லங்களை
அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் மே 11 வியாழக்கிழமை
நடைபெறுகிறது.
இந்நிகழ்வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பானக்காடு
செய்யது ஹைதர் அலி, பி.கே.குஞ்ஞாலி
குட்டி எம்.பி, பி.வி.அப்துல்
வஹாப் எம்.பி., தமிழக
சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
தகவலுக்கு நன்றி
முகநூல் முஸ்லிம் மீடியா
No comments:
Post a Comment