தலித் வீட்டில் ஹோட்டல் உணவை வரவழைத்த எடியூரப்பா!
கர்நாடக மாநில பாஜக தலை வரும், முன்னாள்
முதல்வருமான எடியூரப்பா சில தினங்களாக வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி களைப்
பார்வையிட்டு வருகிறார்.
துமக்கூரு மாவட்டம் குப்பியில் தலித்
வகுப்பைச் சேர்ந்த ருத்ரமுனி வீட்டில் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ஷோபா கரந்தலாஜே உள்ளிட்ட பாஜக தலைவர்கள் காலை உணவு
சாப்பிடுவதற்காகச் சென்றனர்.
ருத்ரமுனி குடும்பத்தினர் தயாரித்த உணவை
சாப்பிடாமல், அருகில் உள்ள உயர்தர சைவ உணவகத்தில் வாங்கி
வரப்பட்ட இட்லி, வடையை எடியூரப்பா உள்ளிட்டோர்
சாப்பிட்டுள்ளனர்.
அந்த வீட்டில் இருந்த பொருட் களைப்
பயன்படுத்தாமல் வாழை இலைகளையும், தண்ணீர்
பாட்டீல் களையும் பயன்படுத்தியுள்ளனர். வீட்டில் வாசனை திரவியங்களும்
தெளிக்கப்பட்டுள்ளன. ருத்ரமுனி கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''கடந்த 10 ஆண்டுகளுக்கும்
மேலாக பாஜகவில் இருந்தபோதும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் எங்கள் குடும்பத்தை
சாதி ரீதியாக அவமானப்படுத்திவிட்டனர்.
நாங்கள் சமைத்த உணவைச் சாப்பிடாமல், சாதியப் பாகுபாட்டை கடைப்பிடித்தது மிகுந்த வருத்தத்தை
ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சாதி எண்ணம் நிறைந்த எடியூரப்பா எங்கள் வீட்டுக்கு
வராமலே இருந்திருக்கலாம்''என சோகத்துடன் கூறியுள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
25-05-2017
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்துத்வா தனது போக்கை மாற்றிக் கொள்ளாது என்பதற்கு இந்நிகழ்வும்
ஒரு சான்று.
No comments:
Post a Comment