தீவிரவாதிகள் அரசால் உருவாக்கப்படுகிறாரகள்!
புதுடில்லி : அசாமில் மார்ச் 30 ம் தேதி ராணுவம், சிஆர்பிஎப், அசாம் போலீஸ் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை
நடத்தினர். அப்போது, தேசிய ஜனநாயக
முன்னேற்றம் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என 2 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்த என்கவுன்டர் குறித்து டில்லி சிஆர்பிஎப் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த சிஆர்பிஎப் ஐஜி ரஜினீஸ் ராய், அதில் பல முரண்பாடுகள் இருப்பதை கண்டறிந்தார். அது தொடர்பாக பல கேள்விகளையும் எழுப்பி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ரஜினீஸ் விசாரணை நடத்தி ஆய்வு வெளியிட்டுள்ளார். அதில், டி கல்லிங் கிராமத்தைச் சேர்ந்த 2 பேரை பாதுகாப்பு படையினர் இழுத்து வந்து என்கவுன்டர் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அருகில் பயங்கர ஆயுதங்களை வைத்துள்ளனர். பல குற்றங்களில் ஈடுபட்ட இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் கூறி உள்ளனர்.
அவர்கள் இருவரையும் வீட்டில் இருந்து இழுத்து வந்த போது அங்கு இருந்த 11 வயது சிறுவனும், ஒரு பெண்ணும் இருந்துள்ளனர். இழுத்து செல்லப்பவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்டதையும் அச்சிறுவனும், பெண்ணும் பார்த்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி என்கவுன்டரில் ராணுவம், சிஆர்பிஎப், போலீசார் ஈடுபட்டிருப்பதையும், அதனை சிஆர்பிஎப் உயரதிகாரி ஒருவரே அறிக்கையாக வெளியிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் உதவி
தினமலர்
24-05-2017
No comments:
Post a Comment