Followers

Thursday, May 04, 2017

கேரள மக்களைப் போல நாமும் மாறுவோமா?

கேரள மக்களைப் போல நாமும் மாறுவோமா?

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரளா மறுக்கிறது என்பது தான் தமிழக அரசியல்வாதிகளின் புகார். ஆனால், அழிந்து போன ஒரு ஆற்றை கேரள கிராம மக்கள், 70 நாட்கள் தீவிரமாக பணியாற்றி உயிர் கொடுத்துள்ளனர் என்ற பாடத்தை தமிழக மக்கள் கற்க வேண்டும் என்பதை தமிழக அரசியல்வாதிகள் வலியுறுத்த மறுக்கின்றனர்.

கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஓடுவது குட்டம்பெரூர் ஆறு. இது, பம்பா மற்றும் அச்சன்கோவில் ஆறுகளின் கிளை ஆறாகும். 10 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆறு12 கி.மீ., நீளம், 100 அடி அகலம், 6 - 20 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. ஆனால், 2005ம் ஆண்டு இந்த ஆறு 10 -15 மீட்டர் நீளத்திற்கு சுருங்கி விட்டது. 

சட்டவிரோத மணல் குவாரியால் ஆறு முழுவதும் விஷச்செடிகள் முளைத்து விட்டன. இத்துடன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, அழுகிய குட்டை போல் இந்த ஆறு மாறி விட்டது. ஒரு காலத்தில், இந்த ஆற்று நீரை பாசனம், குடிநீர் அல்லாத தேவைகள், கால்நடைகளுக்கான குடிநீராக புத்னூர் கிராம பஞ்சாயத்து மக்கள் பயன்படுத்தி வந்தனர். 

கடும் வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த ஆற்றை சுத்தப்படுத்த, 2013ம் ஆண்டே முடிவு செய்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அசுரத்தனமான பணி தள்ளிக் கொண்டே போனது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இறுதி முடிவு எடுத்து கடந்த மார்ச், 20ம் தேதி இப்பணியை, 700 கிராம மக்கள், 70 நாட்களில் முடித்தனர். இப்போது அந்த ஆற்றில் தடையில்லாமல் தண்ணீர் ஓடுகிறது. 5 கி.மீ., சுற்றளவில் உள்ள கிணறுகளிலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. 


நீர்நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை கேரள கிராம மக்கள் கற்று தருகின்றனர். கற்றுக் கொள்ள தமிழக மக்கள் தயாரா?

தகவல் உதவி
தின மலர்

04-05-2017


No comments: