டெல்லியில் தர்ம அடி வாங்கிய போலி சாமியார்!
டெல்லியில் உள்ள விகாஸ் நகரில் நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழா
கொண்டாடப்பட்டது. அங்கு சாமி ஓம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். சாமி ஓம்
ஏற்கனவே பெண்களை இழிவாக பேசுபவர். தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி
அடிவாங்கியவர். இப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெண்கள்
தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சாமி ஓம் வந்ததுமே கூட்டத்தில்
பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பல்வேறு பொது தளங்களில் பெண்களை அவமதிக்கும் சாமி ஓம்மை எப்படி அழைக்கலாம் என
பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், பிரச்சனை தொடங்கியது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். விழா
மேடையில் ஏறி பேசுவதற்கு சாமி ஓம் சென்றார். அப்போது அங்கிருந்த ஒருவர் சாமி ஓம்மை
பிடித்து, நைய்ய
புடைத்தார். உடன் இருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் சிலர் அவரை தாக்கினர்.
அப்போது சினிமாவில் போலி சாமியார்கள் விக்குடன் காட்சி அளிப்பதுபோன்று, சாமி ஓம்மின் விக்கும்
கழண்டுவிட்டது. இதனையடுத்து அவர் தாக்கப்படுவதை தடுத்தவர்களும் சேர்ந்துக் கொண்டு
தர்ம அடி கொடுத்தனர். அடி தாங்க முடியாத சாமியார் விக்குடன் ஓட்டம் பிடித்தார்.
பின்னர் அவரை விழா ஏற்பாட்டாளர்கள் காப்பாற்றி காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தகவல் உதவி
தினத் தந்தி
22-05-2017
Self-proclaimed godman Swami Om is no
stranger to controversy. Neither is he a stranger to violence on television.
Well, in this case, the tables turned on the former Bigg Boss 10 contestant as
he was called as a chief guest at an event in the Capital, and ended up being
beaten up by the organisers. So much so, that his wig came off, and the man
walked out of the premises in a huff, fake hair in hand!
The incident took place at an event
celebrating Nathu Ram Godse’s birth anniversary in Delhi’s Vikas Nagar, where
Swami Om was called as a chief guest – a fact that irked many present,
especially a woman, who raised her voice against the inclusion and felicitation
of a man who has made lewd and controversial remarks against women on several
public platforms. In spite of the organisers attempting to silence the lady, it
wasn’t to be.
Indian Express
21-05-2017
No comments:
Post a Comment