இதெல்லாம் சட்டம் போட்ட மோடிக்கு எங்கே தெரியப் போகுது?
கீழே உள்ள ஆங்கில நாளிதழில் வந்துள்ள முதற்பக்க செய்தி:
வேலூரிலுள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் வேலூர்,திருவண்ணாமலை
மாவட்டங்களின் கால்நடைகள் விற்பனை நடைபெறுகிறது.
மத்திய அரசின் மாடு விற்பனைத் தடைச் சட்டத்தால் 80% விற்பனை நடைபெறவில்லை. ஒரு மாட்டுக்கு 25000/ரூபாய் வரை விலை வீழ்ச்சி, வாங்க ஆளில்லை.
கதிரவன் என்ற விவசாயி ஆறு உருப்படிகளை கொண்டு வந்து விற்க முடியாமல் திருப்பி கொண்டு சென்றுள்ளார். வண்டிவாடகை ரூ 2500/ நட்டம் வறட்சி பாதித்து தீனி இல்லாத கொடுமையில் விற்கவும் முடியாமல் விவசாயிகள் சொல்லமுடியாத வேதனை அடைந்துள்ளனர்.
இன்டியன் எக்ஸபிரஸ்(31-05-2017)
இந்துத்வாவின் கொள்கைகள் அனைத்தும் இந்து மக்களுக்கே எதிரானது
என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
No comments:
Post a Comment