Followers

Tuesday, May 23, 2017

மனிதக் கேடயமாக பயன்படுத்திய ராணுவத்துக்கு விருது!மனிதக் கேடயமாக பயன்படுத்திய ராணுவத்துக்கு விருது!

கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று ராணுவ மேஜர் லீத்துல் கோகய்யின் ஆணைக்கு இணங்க எம்பிராய்டரி கலைஞர் ஃபரூக் அகமது தார் என்பவரை ராணுவ ஜீப்பில் முன்னால் கட்டி 28 கிமீ வரை இழுத்து சென்று கல் வீச்சுக்கு எதிராக மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டது கடும் மனிதார்த்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலைப் பிரிவினை வாதிகள், தீவிரவாதிகள் புறக்கணிக்குமாறு எச்சரித்தனர், ஆனால் எச்சரிக்கையையும் மீறி தான் வாக்களித்து விட்டு வந்த போது ராணுவம் தன்னைப் பிடித்து ராணுவ வாகனத்தின் முன் பகுதியில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி 28 கிமீ அழைத்து சென்றதாக பரூக் தெரிவித்தார். 

இதன் வீடியோ வைரலானது, இதனையடுத்து பொதுமக்கள் ஆவேசமடைந்தனர், பல தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதாவது ராணுவ வீரர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்துபவர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள ராணுவம் இத்தகைய செயலைச் செய்துள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், “ஒரு மனிதனை 28 கிமீ மனிதக் கேடயமாக இழுத்துச் செல்வதுதான் ராணுவ வீரமா?” என்று பாதிக்கப்பட்ட பரூக் அகமது தார் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறித்து காஷ்மீர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது, ராணுவமும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பரூக் அகமது தார், “விசாரணை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு. அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை, நான் யார் ஒரு சாதாரண ஆள், எனக்கு ஏன் அவர்கள் விசனப்பட வேண்டும்?

மேலும் ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது, இன்று வரை போலீஸ் என்னை அழைக்கவில்லை. என்னுடைய புகாரையே முதலில் பதிவு செய்யவில்லைஎன்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்நிலையில் ராணுவ மேஜருக்கு இதற்காக விருது வழங்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பரூக் அகமது தார், “28 கிமீ ஒரு மனிதனை கேடயமாக ஜீப்பில் கட்டி இழுத்துச் செல்வதுதான் ராணுவ வீரமா? அல்லது போராட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகுமா? நான் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஒரு குடிமகனாக வாக்களித்தேன் அதற்கு எனக்குக் கிடைத்த தண்டனையே இது. எங்கு சென்றாலும் இதனால் என் மீது தற்போது பார்வைகள் விழுகிறது. மத்திய மாநில அரசுகள் உண்மையை புதைக்கப் பார்க்கின்றனர்.

ராணுவ மேஜர் வாதம்:
இந்தச் சம்பவத்துக்குக் காரணமான ராணுவ மேஜர் கோகய் கூறும்போது, “வாக்குச்சாவடிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று கொண்டிருந்தோம். அங்கு எங்கள் மீது கல்லெறி சம்பவம் நடந்த்து. பிறகு பெட்ரோல் குண்டுகளையும் எங்கள் மீது வீசினர். அதனால் உள்ளூர் மக்களைக் காப்பாற்றவே இந்த முறையைக் கடைபிடித்தோம்என்று நியாயப்படுத்தினார்.
முன்னாள் ராணுவ ஜெனரல்களில் சிலரும் இந்த மனிதக் கேடய விவகாரத்தை விமர்சனம் செய்துள்ளனர், இந்திய ராணுவத்தின் பண்பாடுக்கு எதிரான செயல் என்று கண்டித்துள்ளனர்.

தகவல் உதவி:
தமிழ் இந்து நாளிதழ்
24-05-2016


2 comments:

Sugumar C Sugumar said...

நமது ராணுவ தலைமை தளபதி ஜெனரல் இந்த காாியத்தை செய்துள்ளாா். தவறுஇல்லை. மிக உயாந்த பொறுப்பில் உள்ளவா்களை மலினப்படுத்த வேண்டாம்.

Dr.Anburaj said...


தோ்தல் கமிஷனைச் சோ்ந்தவா்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டும். அவா்களை கல் ஏறந்து தாக்குகின்றாா்கள் அரேபிய காடையா்கள். ராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடத்தினாலும் கல் கொண்டு ஏறிந்தாலும் ராணுவத்திற்கு ஏச்சு திட்டு.எனவே கல்ஏறிந்த ஒருவனை வண்டியில் கட்டிவைத்து விட்டு அந்த வண்டிமுன் செல்ல ராணுவ மற்றும் தோ்தல் கமிஷன் பணியாா்கள் அடுத்த வண்டியிலும் சென்று காாியத்தை முடித்துக் கொண்டாா்கள்.
இதில் என்ன தவறை தாங்கள் கண்டீர்கள்.
கல் எறிந்து தோ்தல் பணியாளா்களை கடமையைச் செய்ய விடாது தடுத்தவா்கள் குறித்து தாங்கள் ஏதும் சொல்லவில்லை. என்ன நயவஞசகம் தங்கள் மனதில்