Followers

Wednesday, May 17, 2017

ஆர்எஸ்எஸில் சேர்ந்த ஒரு இளைஞனின் கண்ணீர் கதை.....

ஆர்எஸ்எஸில் சேர்ந்த ஒரு இளைஞனின் கண்ணீர் கதை.....ஒரு ஆர்எஸ்எஸ் என்ற பயங்கரவாதியை பெற்றவளின் கண்ணீர் கதை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது ஆற்றிங்கல் என்ற ஊர்..,

அங்கே ஒரு உயர்வகுப்பை சேர்ந்த அப்பெண்ணுக்கு கணவன் இல்லை. ஒரு மகன் தான். அவனுக்கு வயது ஐந்து.

அவள் வீட்டருகே நரசிம்ம மூர்த்தி ஆலயம். அவள் சிறந்த பக்திமான்..

கடவுள் நம்பிக்கை நிறையவே அதிகம்.

கோயில் வீட்டருகே இருப்பதால் அங்கு மாலை மங்கினால் சிறுவர்களை வைத்து பலவேசம் போட்டு குறிப்பாக ( கிருஷ்ணர்) நாடகங்கள் மாதிரி ஒத்திகை பார்ப்பது ஒரு கூட்டத்திற்கு (ஆர்எஸ்எஸ்) வழக்கம்

அதையெல்லாம் தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் (அந்த பெண்ணின் மகனின் பெயர்)

ஒரு நாள் அம்மா நானும் அதுபோல கிருஷ்ணர் வேசம் கட்டி நடிக்கனும்னு சொல்கிறான்.

மகன் ஆசைப்பட்டு கேட்கிறானே என அந்த அபலைத்தாய் அனுமதிக்கிறாள்.

மகன் தினமும் அந்த கோவிலுக்கு சென்று கிருஷ்ணனைப்போல வேடமிட்டு அங்கே சொல்லிக்கொடுக்கப்படும் கலைகளை கற்று வருகிறான்.

இப்படியே காலங்கள் உருண்டு இப்போது அவனுக்கு வயது 15. திடீரென தாயிடம் வந்து அம்மா நான் அந்த அண்ணன்களுடன் சேர்ந்து பக்கத்து ஊர் கோயிலுக்கு போகிறேன் என சொல்ல .அம்மாவும் கடவுள் காரியம் தானே என நம்பி அவர்களுடன் அனுப்பி வைக்கிறாள்.

இப்படியே ஐந்து வருடங்கள் கடந்து போகிறது. படிப்பும் ஏறவில்லை .

தினமும் வீட்டிற்கு லேட்டாக வரும் மகனிடம் என்னப்பா இது. அம்மா தனியாக இருக்கிறேனே இப்படி லேட்டாக வந்தால் எனக்கு என்னப்பா பாதுகாப்பு என புலம்புகிறாள்.

மகனும் எதாவது ஒரு காரணத்தை சொல்லி வெளியூருக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டான்.

இப்போது அவனுக்கு வயது 20. ஒரு நாள்....
தாயிடம் வந்து அம்மா நான் ஒரு வேலை விசயமாக வட மாநிலத்திற்கு செல்ல இருக்கிறேன் என கூற,

எதற்காக என அம்மா கேட்க..,

மகன் சொல்கிறான் இந்து மதக் காவலானக எனக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். அதன் பயிற்சி வடமாநிலம் ஒன்றில் நடக்கிறது. நான் போகிறேன் என கூறுகிறான்.

தாயோ மகனே எனக்கும் வயதாகிவிட்டது இனி என்னைப் பாதுகாக்க யார் இருக்கா சாப்பாட்டுக்கே வழியில்லையே மகனே என கூறி அழுகிறாள்.

அதெல்லாம் கவலையில்லை அம்மா உன்னை பாதுகாக்க இந்துமத பாதுகாவலர்கள் இங்கே இருக்கிறார்கள் என கூறி பயணப்படுகிறான்.

போனவன் இரண்டு மாதங்கள் ஐநூறு வீதம் பணம் அனுப்புகிறான். அதற்கு அடுத்த மாதம் அதுவும் நின்று போகிறது. அம்மா கவலையடைகிறாள்.

பெற்ற மகனை காணாத ஏக்கம் ஒரு பக்கம். பசியின் கொடுமை ஒருபக்கம்.....

மகன் சொன்ன இந்துமத காவலர்களும் இந்த பெண்ணை திரும்பிக்கூட பார்க்கவில்லை.

எப்படியாவது மகனை சந்தித்துவிட வேண்டுமென்று கடவுளை வேண்டி காத்திருக்கிறாள் அந்த அபலைத் தாய். அன்று சனிக்கிழமை காலையில் அடுத்தவீட்டு பெண் கையில் அன்றைய பேப்பருடன் ஓடி வந்து சேச்சி இதை பாருங்க நம்ம கண்ணனின் படம் பேப்பர்ல வந்துருக்குன்னு காட்டி நடந்த சம்பவத்தை படித்து காட்டுகிறாள்.

அதை கேட்ட அந்த அபலைத்தாய் தலையிலடித்துக்கொண்டு அழ ஆரம்பிக்கிறாள்..


ஆம் அந்த பேப்பரில் அன்றைய முக்கிய செய்தியாக ....

கண்ணூரில் இசுலாமிய பள்ளியில் உள்ள இமாம் குத்திக்கொலை RSS இந்துத்துவா வெறியர்களின் வெறியாட்டம். அதற்கு முறையாக செயல்பட்ட திருவனந்தபுரம் ஆற்றிங்கல்லை சேர்ந்த கண்ணன் என்கிற 26 வயது ஆர்எஸ்எஸ் காரன் கைது மேலும் இவன் கிருஸ்த்தவ பாதிரியாரையும், அவரது குடும்பத்தையும் உயிரோடு எரித்த வழக்கிலும், இந்துக்கள் வீட்டில் வெடி குண்டு போட்ட வழக்கிலும் சம்மந்தப்பட்டவன் என்றும், பாசிசவாதிகளுக்கு பணம் கைமாற்றுதல் வெடிகுண்டு தயாரித்தல், ஆள்சேர்த்தல், துப்பாக்கி பயிற்சி வழங்குதல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது என எழுதி இருந்தது..

அதை கேட்ட அந்த தாய் தன் மகன் கோயில்களுக்கு சேவை செய்யத்தான் போகிறான் என நினைத்து கொண்டிருந்தேனே! இப்படி அநியாயமா தீவிரவாத கும்பலோட சேர்ந்து ஒரு கொலைகாரனா ஆயிட்டானே என கதறுகிறாள்.. இதையெல்லாம் பார்க்க கூட வழியில்லாமல் தன்னை காக்க ஒருவராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் இன்றுவரை சிறையில் அவன்..


RSS-BJP பாசிசவாதியாக இருந்து தன்னை திருத்திக்கொண்டு இன்று ஒரு இந்துவாக வாக தன் வாழ்க்கையை  மாற்றிக்கொண்டு ஆர்எஸ்எஸ்'ன் முகத்திரையை அக்குவேறு ஆணிவேறாக கிழித்துவரும்


எழுத்தாளர் தோழர் நடராஜ் ராமன் அவர்களின் ஒரு மாநாட்டு பேச்சிலிருந்து..

2 comments:

Sugumar C Sugumar said...

அண்ட புளுகு ஆகாய புளுகு என்பாா்கள்.இது சுவனப்பிாியன் புளுகு
கண்ணூரில் இசுலாமிய பள்ளியில் உள்ள இமாம் குத்திக்கொலை RSS இந்துத்துவா வெறியர்களின் வெறியாட்டம். அதற்கு முறையாக செயல்பட்ட திருவனந்தபுரம் ஆற்றிங்கல்லை சேர்ந்த கண்ணன் என்கிற 26 வயது ஆர்எஸ்எஸ் காரன் கைது மேலும் இவன் கிருஸ்த்தவ பாதிரியாரையும், அவரது குடும்பத்தையும் உயிரோடு எரித்த வழக்கிலும், இந்துக்கள் வீட்டில் வெடி குண்டு போட்ட வழக்கிலும் சம்மந்தப்பட்டவன் என்றும், பாசிசவாதிகளுக்கு பணம் கைமாற்றுதல் வெடிகுண்டு தயாரித்தல், ஆள்சேர்த்தல், துப்பாக்கி பயிற்சி வழங்குதல் போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது என எழுதி இருந்தது..

Sugumar C Sugumar said...


கேரள மாநிலம் மலப்பபுரம் அரேபிய காடையா்களை உற்பத்தி செய்யும் கேந்திரமாக விளங்கி

வருகின்றது என்பது உமக்கு இன்பமான விசயம். காஷ்மீாில் நமது நாட்டு ராணுவத்துடன்

மோதி சரணடைந்தவா்கள் கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பது மற்றவா் களுக்கு

வேதனையான விசயம். இன்றும் ஐஎஸ்எஸ இயக்கத்திற்கு நூற்றுக்கணக்கில் ??

தொண்டா்களை -காடையா்களை அளித்து வருவது மலப்பபுரம்தான்.மறந்து விடா தீா்கள்.