Marx Anthonisamy
இன்பாக்சில் எனது
நெடுநாள் நண்பரும் டெல்லியில் பேராசிரியராக இருப்பவருமான ஒருவர் அனுப்பிய கடிதம்.
அன்புள்ள மார்க்ஸ்
அவர்களுக்கு,
இன்று என் முஸ்லிம்
மாணவன் ஒருவனிடம் செமஸ்டர் இறுதி assignment ஐ ஏன் இன்னும் தரவில்லை eன்று அவனைப் பார்த்தபோது கேட்டேன் ...
எப்பொழுதும் உற்சாகத்துடன்
இருப்பவன், நல்ல football
player, அருமையாக படிப்பவன் கண்கள்
எல்லாம் சோபையற்று, பல நாள் தூங்காதவன்
போல் இருந்தான், ஏன் இப்படி இருக்கிறாய்
என்று, உடம்பு சரியில்லையா என்று
கேட்டேன்அவன் சொன்னது
“சார் தூக்கமே இல்லை,
கண்களை மூடினால்.... என் அப்பா 84’ல் சீக்கியர்களுக்கு நடந்ததை சொல்லியிருக்கிறார்,
சென்ற வாரம் நான், அப்பா, அம்மாவுடன்,
சினிமாவுக்கு சென்றுவிட்டு வந்துகொண்டிருந்தோம்,
திடீரென்று ஒரு 10பேர், எங்களை வழி மறித்து,
வந்தே மாதரம் என்று சொல், பாரத் மாதா கி ஜே என்று சொல்ல என்றார்கள்,
நாங்களும் உரக்கச் சொன்னோம், பிறகு அம்மாவை மிகவும் தரக்குறைவாக பேசினார்கள்,
இத்தனைக்கும் என்
தாத்தா ஆர்மியில் இருந்தவர், என் மாமா இப்போதும்
ஆர்மியில் இருக்கிறார், இதெல்லாம் அவர்களுக்கு
நன்றாகத் தெரியும் எல்லாம் எங்கள் காலனியைச் சுற்றி உள்ள ஆர். எஸ். எஸ்.காரர்கள்,
20 நிமிடம் கழித்து எங்களை ஒரு
வழியாக விட்டார்கள், ஆனால் என்ன ஆகுமோ
என்று பயமாகவே இருக்கிறது” என்று சொன்னான்.
இத்தனைக்கும் அவன்
அப்பாவும், அம்மாவும் Jamia
Milia'வில் கெமிஸ்ட்ரி பேராசிரியர்கள்.
பெயரளவில் இஸ்லாமியரே ஒழிய பெரிய இறை நம்பிக்கை எல்லாம் இல்லாதவர்கள்...என்ன சொல்வது
இந்த பையனுக்கு, 19 வயதில் அவனுக்கு அவன்
வாழும், சமூகத்தின், அரசாங்கத்தின், சூழலின் மேல் இவ்வளவு நம்பிக்கையற்று இருந்தால் இன்னும் மீதமுள்ள
வாழ்க்க்கையை எப்படி வாழ்வான் இவன்? ”Sir, we are not even practicing
Muslims, and within the community, my parents are seen as traitors...where do I
go" என்று கேட்டால், கதி கலங்குகிறது...என்ன செய்துகொண்டிருக்கிறோம்...நம்
குழந்தைகள் என்ன ஆவார்கள்...
No comments:
Post a Comment