ராஜ லிங்கம் அண்ணே....... கிரேட்......
நெல்லை TO சென்னை கார்
பயணம் அதிகாலை 1 மனி மங்களமேடு தொழுதூர் இடையே நடு ரோட்டில் கார் ஒன்று
கவிழ்ந்து கிடந்தது அருகே இரண்டு குழந்தைகள் நின்று கதறி அழுது கொண்டிருந்தனர்
சுற்றி நின்று சிலர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் நான் பதறி போய் வண்டியை
ஓரம் கட்டி ஓடினேன்.
ஒரு #முஸ்லீம்_தம்பதியர் வெளியே
வர முடியாமல் தன் குழந்தைகளை மட்டும் வெளியே அனுப்பி விட்டு தாங்கள் வரமுடியாமல்
அபய குரல் எழுப்பி கொண்டு இருந்தனர் வண்டியும் அவர்களும் ரத்தசகதியாக நின்றதால் ரத்தகறை படுமோ பிரச்சனை வருமோ என்று சுயநல நாய்கள்
சிலர் வேடிக்கை பார்த்தனர் நான் சென்ற உடன் கவலை வேண்டாம் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என்று ஆறுதல் சொல்லிகொண்டே அந்த அண்ணனை முதலில் மீட்டேன் பின்பு சகோதரியை மீட்கும்
முன்னே அக்கா நான் உங்கள் கூட பிறந்த தம்பி மாதிரி என்று சொல்லிகொண்டே அவரையும்
தூக்கி மீட்டெடுத்து வெளியே கொண்டு வந்தேன்.
சகோதரருக்கு
ரத்தம் பீரிட்டு அடித்தது அதை கழக கருப்பு சிவப்பு துண்டால் இறுக கட்டிவிட்டு108 க்கு போன் செய்தேன். அடுத்தது கவிழ்ந்த வண்டியிலிருந்து
அவர்கள் விலையுயர்ந்த உடைமைகளையும் அவர் கண் முன்னே மீட்டெடுத்து சரியாக
இருக்கிறதா அக்கா என்று கேட்டேன். சரியா இருக்கு அண்ணே என்று சொன்னார்கள். பின்
காரை இருவர் உதவியுடன் புரட்டி ஓரமாக வைத்தேன். அதற்க்குள் 108 வந்தது. அல்லாதான் என்னை அனுப்பி வைத்ததாக நன்றி சொல்லி
அவசரமாக கிளம்பினார்கள். திரும்பவும் எனது காரை தட்டினேன். இதோ வீடு வந்து
சேர்ந்தாச்சு. சட்டையை மாற்றிவிட்டேன்.
காயமடைந்த லங்காகுறிச்சியை சேர்ந்த அண்ணன் #தாஜுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் நலம்
பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்......
No comments:
Post a Comment