கவிஞர் சல்மா செந்திலுக்கு கொடுத்த சிறந்த பதில்!
---------------------------------------------------------------------
"முத்தலாக்கை எதிர்த்து ஆஞ்சநேயர் கோயிலில்
பிரார்த்தனை செய்கிறார்களே பர்தா போட்ட இஸ்லாமிய பெண்கள்..." -புதிய தலைமுறை செந்தில்
கவிஞர் சல்மாலிடம் கேட்க....
"கோயிலுக்கு
போயி அங்குள்ள சாமியை கும்பிட்டாலே முடிஞ்சதே அவங்க இஸ்லாம்... அவர்கள் பர்தா
போட்டிருந்தால் என்ன... போடாட்டால் என்ன... அந்த நிமிஷமே அவர்கள்தான் முஸ்லிம்கள்
இல்லைன்னு ஆயிருச்சே... அப்புறம் எப்படி சொல்கிறீர்கள் அவர்களை இஸ்லாமிய பெண்கள்
என்று..? இந்துக்கள்
என்றே சொல்லலாம்..."
சபாஷ் சல்மா! அருமையான
பதிலை கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்! முழு வீடியோவையும் பாருங்கள்.
தலாக், தலாக், தலாக் என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்ல குர்ஆன் தடை விதிக்கிறது. குர்ஆனை
விளங்காத முஸ்லிம்கள் செய்யும் தவறுக்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும். ஒரே நேரத்தில்
மூன்று முறை தலாக் சொல்பவர்களுக்கு எதிராக அரசு வழக்கு தொடுக்கலாம். இதுதான் சரியான
தீர்வு.
2 comments:
மூன்று தடவைகள் என்று இறைவன் சொல்லியுள்ளதை மூன்று வார்த்தைகளாக்கும் உரிமை எவருக்கும் இல்லை.
மூன்று தடவை என்பதை மூன்று தடவையாகவே எந்த அறிவாளியும் புரிந்துக் கொள்வான். எளிய உதாரணங்களால் இதை விளங்கலாம். நோய்க்கு டாக்டர் மருந்துக் கொடுத்து காலை, மதியம், இரவு என்று மூன்று தடவைகளில் இதைக் குடி என்கிறார். மூன்று வேலை மருந்தையும் ஒருவன் ஒரே தடவையில் குடிக்கிறான் இவன் சரியாகத்தான் செய்தான் என்று யாரும் கூற மாட்டோம்.
மூன்று வேலைக்கு மூன்று பிளேட் உணவை ஒருவர் சாப்பிட சொல்கிறார் மூன்று பிளேட்டையும் ஒரே வேலையில் சாப்பிட்டால் அது மூன்று வேலை உணவாக ஆகாது.
முத்தலாக்கும் இதே அடிப்படையை கொண்டதுதான்.
விவாகரத்து அளிக்கும் உாிமை நீதிமன்றங்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.அதுதான் சாியான தீா்வு.மற்ற அனைத்தும் சப்பபைகட்டாக பழைய கள் புதிய மொந்தை என்பதுபோல் இருக்கும். முஸ்லீம்களை ஏமாற்ற வேண்டாம்.
Post a Comment