Followers

Friday, May 26, 2017

பிஜேயிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது - சவுதி அறிஞர்.

பிஜேயிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது - சவுதி அறிஞர்.

புகழ் அனைத்தும் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்


"பி ஜே யிடம் எனக்கு ஈர்ப்பு  ஏற்பட்டுவிட்டது. அவர் மிகத்திறமை வாய்ந்த அறிஞர்"  சவூதி பேராசிரியர்

பி ஜேயின் தப்ஸீர்,  தர்ஜுமா விமர்சன ஆய்வு  உரையாடலிலிருந்து......

"அறிஞர்  பி ஜே யின் தப்சீரை வாசித்த பின் அவர் மிகத்திறமையான  அறிஞர் என்று எனக்கு விளங்கியது. பி ஜே க்கு முன்பு  அல்குர்ஆனை எவரும் ஆய்வு செய்திராத வகையில் பல திறமையான ஆய்வுகளை நமக்கு தந்துள்ளார். நாம் அவர் விஷயத்தில் அநீதி இழைக்காமல் இருக்க இதுவே என்னால் கூற முடியும். 

"பி ஜே யிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. இவர் போன்ற சீர்திருத்த அறிஞர்களிடம் அதிகமான நுணுக்கமான ஆய்வுத்திறமைகள் அதிகம் இருக்கும்,  மிகச் சில இடங்களில் சில குறைகள் இருக்கும். அல்லாஹ்வே குறையற்ற  பூரணமானவன்."

பக்கத்தில் உள்ள கலாநிதியை நோக்கி "பி ஜே யின்  தப்சீரில் இருந்து பிரயோசனம் அடையாமல் சென்று விடாதீர்கள்" என்று கூறி ஒரு தப்சீரை கூறுகிறார். கூறிவிட்டு “அல்லாஹ் பி ஜே யிற்கு அருள் புரிவானாக, அவர் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறாரா? " என்று கேட்கிறார்.

முடிவாக பி ஜே யின் தப்சீரில் உடன்படுபவைகளை எடுத்து ஒரு தப்ஸீர் நூல் ஒன்றை வெளியிட முடிவெடுத்துள்ளார் கலாநிதி.

 பேராசிரியர் : அப்துர்ரஹ்மான் அல் ஷிர் இ
 மன்னர் ஸஊத் பல்கலைக்கழகம்*

எனது கருத்து: அறிஞர் பி ஜே கருத்துக்கள் அரபுக்கு கொண்டு செல்லப்பட்டால் அதனை மிகப்பெரும் ஆய்வாக, அறிவாக வரவேற்கவும் தவறுகளை ஆய்வு  ரீதியாக விமர்சனம் செய்யவுமே அரபுலகு முடிவெடுக்கும் என்பதை அவதானிக்க முடியும்.

 தமிழ் உலகு போன்ற ஆய்வு இல்லாத  சமூகத்தில் பிறந்து ஆய்வுகளை செய்ததுதான் பி ஜே யின் தவறு என்று  சொல்ல முடியும். இப்னு தைமியாவை ,முழுக்க முழுக்க எதிர்த்து  பல நூற்றாண்டுக்குப் பின் விளங்கிய சமூகம் போல ஒரு சமூகம் அவரை விளங்கவும் முடியும் . அல்லாஹ் அறிஞர் பி ஜே  யின் ஆயுளை நீடித்து இன்னும் பல ஆய்வுகளை எமக்குத்தர போதுமானவன்.

இந்த ரமழானை அல்குர்ஆனுடன் உறவாடுவதிலும் விளங்குவதிலும்  கொண்டு செல்வோம்.இன்ஷா அல்லாஹ்ز

அறிஞர் பி ஜே யின் தப்ஸீர் பற்றிய அரபு உரையாடல்:



 https://www.youtube.com/watch?v=6-cvW5UzCgk&feature=youtu.be

1 comment:

A.Anburaj Anantha said...


அரேபியா்களுக்கு அரேபிய தாசானுதாச அடிமைகளை வெகுவாகப் பிடிக்கும்தானே ? இதில் அதிசயப்பட என்ன இருக்கின்றது.