Followers

Tuesday, May 02, 2017

மோடியின் ஆட்சியில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ்! மனிதனுக்கு இல்லை!

மோடியின் ஆட்சியில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ்! மனிதனுக்கு இல்லை!
-------------------------------------------------------------------------
உத்தரபிரதேச மாநிலம், எட்டாவா நகரில் அரசு மருத்துவமனை ஒன்றில் மருத்துவரின் உதவி மறுக்கப்பட்டதால் தொழிலாளி ஒருவர், இறந்த தனது 15 வயது மகனின் உடலைத் தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

எட்டாவாவில் நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் உதய்வீர் (45) என்ற தொழிலாளி தனது மகன் புஷ்பேந்திராவுக்கு எட்டாவா அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக புகார் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கண்ணீர்மல்க கூறும்போது, “எனது மகனுக்கு கால்களில் வலி இருந்தது. மருத்துவர்கள் அவனைச் சிறிது நேரமே பரிசோதித்தனர். பிறகு அவன் உயிருடன் இல்லை தூக்கிச் செல் என்று கூறிவிட்டனர். எனது மகனின் உடலை எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கும் என்று என்னிடம் யாரும் கூறவில்லைஎன்றார்.

எட்டாவா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராஜீவ் யாதவ் கூறும்போது, “சிறுவன் இங்கு கொண்டுவரப்பட்டபோதே அவன் உயிருடன் இல்லை. அப்போது பேருந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் மும்முரமாக இருந்ததால், ஆம்புலன்ஸ் வசதி வேண்டுமா என்று உதய்வீரிடம் அவர்களால் கேட்க முடியவில்லை. என்றாலும் இது தவறுதான். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

தகவல் உதவி
தின மலர்
NDTV
03-05-2017



1 comment:

Dr.Anburaj said...


AMBULANCE SERVICE TO COW - IS SOUNDS BIG.

OF COURSSE AMBURANCE SERVICE TO HUMAN BEING IS ALREADY AVAILABLE- THAT IS CALLED 108.

DO NOT CHEAT THE INNOCENT mUSLIMS AND HINDUS -READERS