நேற்று இரவு ஆங்கிலத்தில் சிறுகதை ஒன்றை
வாசித்தேன் காலத்தின் தேவை கருதி தமிழில் அதனை பதிவிடுகின்றேன்!
புனித பசு!
ஓரு நாள், சிறுவன் ஒருவன் குப்பை கிடங்கில் இருந்து ஓரு வாழைப்பழ தோலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த பசு ஓன்று அந்த பழத்தோலை அவனிடம் இருந்து பிடுங்கியது.
உடனே அந்த சிறுவன் பசுவை அங்கிருந்து விரட்டினான்.
இதனால் பசு சப்தமிட்டுக்கொண்டே தெருவில் ஓடியது.
அப்போது
திடீரென அங்கு வந்த சந்நியாசிகள்( இப்போது பசு பாதுகாவலர்கள்)சிறுவனை நோக்கி புனித
பசுவை தாக்கியது நீதானே என்று கேள்வி எழுப்பினர்?
"நான் பசுவை தாக்கவில்லை, நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பழத்தோலை அது
பிடுங்கியது, எனவே நான்
சப்தமிட்டு அதனை விரட்டினேன்" என்று பதிலளித்தான் அந்த சிறுவன்.
நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என்று வினவினர்
அந்த புனிதர்கள்!
மதம் என்றால் என்ன ?என்று கேட்டான் அந்த சிறுவன்.
நீ ஓரு இந்துவா அல்லது முஸ்லிமா அல்லது
கிறிஸ்தவனா?
நீ கோவிலுக்கு செல்வாயா?
பள்ளிவாசல் அல்லது தேவாலயத்திற்கு செல்வாயா என்று வினவினர் அந்த சாதுக்கள்!
நான் எங்கும் செல்வதில்லை என்றான் அந்த
சிறுவன்.
அப்படியெனில் நீ கடவுள் நம்பிக்கையற்றவனா? என்றனர் சந்நியாசிகள்.
எனக்கு உடுத்துவதற்கு உடைகள் ஒன்றும் இல்லை.
என்னுடைய ட்ரவுசரின்(அரைக்கால் சட்டை) பின்பக்கங்கள் கிழிந்து மிகவும் மோசமாக
இருக்கின்றது என்றான் அந்த சிறுவன்.
அந்த சந்நியாசிகள் (சாதுக்கள் அல்லது பசு
பாதுகாவலர்கள் ) தங்களுக்குள் சிறிது விவாதித்து விட்டு இப்படி சொன்னார்கள்;
"கண்டிப்பாக நீ ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும். நீதான் பசுவை தாக்கியிருக்கின்றாய் என்றனர்".
நீங்கள் தான் பசுவின் உரிமையாளர்களா என்று
கேட்டான் அந்த சிறுவன்.
உடனே கோபம் கொண்ட சந்நியாசிகள் அந்த
சிறுவனின் கழுத்தை நெரித்துக் ( இப்போது கல்லால் அடித்து )கொலை செய்து பிணத்தை
குப்பைத் தொட்டியில் வீசினர்.
பின்பு அந்த சந்நியாசிகள் ஒருமித்த குரலில்
சொன்னார்கள்;
ஓம் நமச்சிவாய!உன்னுடைய இந்த முடிவு மகிமை படுத்தப்படட்டும்!
ஓம் நமச்சிவாய!உன்னுடைய இந்த முடிவு மகிமை படுத்தப்படட்டும்!
(இந்தக் கதை 1960களில் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர்
கமலாதாஸ் அவர்களால் எழுதப்பட்டது.நாயர் சமூகத்தை சேர்ந்த அவர் 1999ல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு 2009ல் இறப்பெய்தினார்.
Love
Haha
Wow
Sad
Angry
No comments:
Post a Comment