Followers

Tuesday, May 02, 2017

மோடியின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நிலை!

மோடியின் ஆட்சியில் தலித்களின் பரிதாப நிலை!

போபால்: பிஜேபி ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் உள்ளது மடா கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட தலித்கள் வசித்து வருகின்றனர். படத்தில் காணும் கிணறு இவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.

சென்ற ஏப்ரல் 23ந் தேதி இந்த கிராமத்தில் மேக்வால் என்ற தலித் தனது மகளுக்கு திருமணம் முடித்தார். சற்று வசதியான இவர் தனது மகளுக்கு தடபுடலாக விருந்து கொடுத்து பேண்ட் வாத்தியமும் வைத்துள்ளார். அந்த கிராமத்தில் இவ்வாறு விமரிசையாக மேல் சாதியினர்தால் திருமணங்களை நடத்துவது வழக்கம்.

வழக்கத்துக்கு மாறாக தலித் திருமணம் நடந்ததால் வெகுண்டெழுந்த அந்த கிராமத்து மேல் சாதியினர் தலித்கள் உபயோகப்படுத்தும் கிணற்றில் மண்ணெண்ணையை ஊற்றியுள்ளனர். தற்போது அந்த கிணறு குடிநீருக்கு லாயக்கற்று போயுள்ளது. தற்போது தலித்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று குளத்தில் தண்ணீர் பிடிக்கின்றனர்.

இந்த அநியாயத்தைக் கண்டித்து மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. சவுஹான் அரசோ போலீசைக் கொண்டு தலித்களை அடக்கப் பார்க்கிறது.

சொந்த நாட்டில் சொந்த மகளின் திருமணத்தை தடபுடலாக நடத்துவது மோடியின் ஆட்சியில் அவ்வளவு பெரிய குற்றமா?




http://www.ndtv.com/india-news/kerosene-in-well-that-was-dalits-punishment-for-band-baaja-at-wedding-1687810









No comments: