மாற்று மதத்தினர் இவர்கள் கிராமத்துக்கு வரக் கூடாதாம்!
எங்கள் கிராமம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள். கிட்டத்தட்ட 2000 வீடுகளுக்கு மேல் உள்ள கிராமம். காலை ஆறு மணி ஆகி விட்டால் பால் கொண்டு வந்து வீடு வீடாக போடுபவர்கள் இந்துக்கள். காலை எட்டு மணி ஆகி விட்டால் காய்கறிகளை தலையில் வைத்து வீடு வீடாக சென்று விற்பனை செய்வது இந்துக்கள். காலை 9 மணி ஆகி விட்டால் ஆசாரி, கொத்தனார், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், சித்து ஆட்கள் என்று ஒரு பெரும் படையே எங்கள் கிராமத்தை நோக்கி வரும். அனைவரும் இந்துக்கள். எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அரிசன மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் கிராம இந்துக்களின் வாழ்வாதாரமே இஸ்லாமிய கிராமத்தை நம்பித்தான் உள்ளது. எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து இந்துக்களும் நல்ல வளமாக உள்ளனர். தின சம்பளம் 500, 600 என்று வாங்குகிறார்கள்.
அப்போ முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கலாம். சவுதி, துபாய் போன்ற அரபு நாடுகளுக்கும், மலேஷியா, சிங்கப்பூர், புருணை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருளீட்ட சென்று விடுகிறார்கள். அரசு வேலை பார்ப்பவர்கள் சொற்ப எண்ணிக்கையே. பலர் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சிலர் சொந்த கடை வைத்து வியாபாரம் பார்க்கிறார்கள்.
இவ்வாறு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கின்றனர். தமிழகம் முழுக்க இது தான் நிலைமை. ஒரு இடத்திலேயே பொருளாதாரம் குவியாமல் இவ்வாறு பரந்து சென்றால்தான் எல்லோரும் நிம்மதியாக வாழ முடியும்.
மேலே உள்ளது போல் ஒவ்வொரு கிராமத்திலும் போர்டு வைக்க ஆரம்பித்தால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். பன்முகத் தன்மை கொண்ட நமது நாட்டுக்கு இது அழகல்ல. எனவே சம்பந்தப்பட்டவர்கள் கலந்து பேசி அவர்களாகவே இந்த போர்டை எடுக்க முயற்சிக்க வேண்டும். இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் மக்களை பிரித்து அதன் மூலம் அவர்கள் சுகமாக வாழ முயற்சிக்கின்றனர். இதற்கு தமிழர்கள் பலியாகி விடக் கூடாது.
2 comments:
இந்தியனை அரேபியனாக்க நடந்த முயற்சிகளை தடுத்த இராமலிங்கம் என்ற வீரஇந்துவை கொலை செய்தார்கள் முஸ்லீம்கள்.
இந்துக்கள் அப்பாவிகள். எம்மதமும் சம்மதம் என்று முட்டாள்தனமாக பேசி சுலபமாக ஏமாந்து வீடுகின்றார்கள். இதனால் இந்துக்களை சுலபமாக ஏமாற்றி மதம் மாற்றி விடலாம். ஆகவேதான் மதமாற்றத்தை தடுக்க இத்தகைய அறிவிப்பு பலகையை அமைத்துள்ளாா்கள்.
இராமநாத புரத்தில் முஸ்லிம்கள் வாழும் ஏராளமான கிராமங்களில் இத்தகைய அறிவிப்பு உளள்ளது. முதலில் அதை எடுக்க முயன்று பாாக்க வேண்டும்.
You first allow other faith people in mecca and medina and then you can speak legitimately
Post a Comment