பாத்திமா பேகம் ஷேக் மற்றும் சாவித்திரி பாய் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்கள் என்றால் அது மிகையல்ல. பெண் கல்விக்காக சாவித்திரி பாய் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பணிக்கு செல்லும் போது மற்றுமொரு சேலையை பையில் வைத்து எடுத்து செல்வாராம். காரணம், இவர் போகும் வழியில் நிற்கும் பார்ப்பனர்கள், பெண்களுக்கு கல்வி அளிப்பதின் மூலம் வேதங்களுக்கு எதிராக சாவித்திரி செயல்படுவதாக கூறி சேற்றை வாரி இறைப்பார்களாம். அதனாலேயே இன்னொரு சேலை.
இந்துமதத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி தங்களின் சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் சாவித்திரி பாயும் அவரது கணவருமான ஜோதிராவ் பூலேவும். அந்நேரத்தில் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர் ஜோதிராவின் நண்பரான உஸ்மான் ஷேக் மற்றும் அவரது சகோதிரியுமான பாத்திமா பேகம்.
பாத்திமா பேகம் ஏற்கனவே எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தார். இவர்கள் இருவரும் ஆசிரியர் பயிற்சியை முடிக்க உறுதுணையாக இருந்தார் உஸ்மான் ஷேக். இவருடைய வீட்டிலேயே 1849-ஆம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தை தொடங்கினர் சாவித்திரி பாய் பூலேவும், பாத்திமாவும். இதன் பிறகான இவர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்கள் என்று இவர்களை சொன்னால் அது நிச்சயம் மிகையல்ல.
1 comment:
சாவித்திரி பாய் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய சரித்திரம்.
மகத்தான தியாக வரலாறு படைத்த அற்புத அன்னை அவர்கள்.
Post a Comment