இஸ்லாமியர்களுக்கு அடுத்து இன்று கிருத்தவர்களை நோக்கி ....
கர்நாடகா கனக புராவில் 114 அடி ஏசு கிருத்துவின் சிலை நிர்மாணிக்க 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. 'இந்துக்கள் பெருமை பேசும் இந்த மண்ணில் இவ்வளவு உயரத்தில் ஏசுவின் சிலை அமைவதை நாங்கள் தடுப்போம்' என்று இந்துத்வா அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.
முதலில் முஸ்லிம்களிடத்தில் வந்தார்கள். தங்களுக்கு என்ன? நாங்கள் நலமாக உள்ளோம் என்று கிருத்தவர்கள் போராடாமல் ஒதுங்கியே நின்றார்கள். இதோ அமைதியாக உள்ள கிருத்தவர்களையும் சீண்டிப் பார்க்க போராட வந்துள்ளது தீவிரவாத இந்துத்வ கும்பல்.
ஏசுவுக்கு சிலை வடிப்பது எனக்கு ஏற்பில்லை. ஏனெனில் சிலை வணக்கத்தை ஒழிக்கவே ஏசு அனுப்பப்பட்டார். பார்பனியம் கிருத்துவத்தையும் விழுங்கி விட்டதால் இன்று 114 அடி சிலைக்காக ஏங்குகின்றனர் கிருத்தவர்கள். அந்த இடத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தலாம்.
--------------------------------
“அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3)
தேவன் ஒருவரே! தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே” (I தீமோத்தேயு 2:5)
தமிழில் ..
தமிழில் ..
தனக்குவமை இல்லாதான் தாள் பணிந்தோர்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்ற திருக்குறளும்
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்ற திருமந்திரத்தின் வாசகமும் இறை ஏகத்துவத்தை எடுத்தோதுவது நாமறிந்ததே!
1 comment:
கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த பணத்தில் மார்க்கெட் விலையில் அல்லது கிறிஸ்தவனுடைய பட்டா நிலத்தில் 1000 <<<< அடி உயர இயேசுவின் சிலை அமைக்க தடைஏதும்யில்லை.
கிறிஸ்தவனுக்கு அரசு நிலம் 10 ஏக்கா் கொடுக்க வேண்டிய தேவையில்லை.
அங்குதான பிரச்சனை வருகின்றது.
கிறிஸ்தவ சபையில் கோடி கோடியாக பணம் உள்ளது.காசு கொடுத்து வாங்கி சர்ச் கட்டுகின்றார்கள். ..பிரசங்க கூட்டம் நடத்து கிறார்கள்.எந்த இந்துவும் ஆட்சேபிக்கவில்லை.
தினக் கூலி செய்து பிழைக்கும் ஏழைகள் வீடு கட்ட அந்த நிலம் பயன்படுத்த வேண்டும் என்பது நல்ல முடிவு.
Post a Comment