ஹிந்து மணமகன் மணமகள் - திருமணம் பள்ளிவாசலில்
கேரளா ஆலப்புழாவில் அசோகன் மற்றும் பிந்து தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். இரண்டு வருடம் முன்பு அசோகன் இறந்து விடுகிறார். பிந்து மூன்று பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் மகள் அஞ்சுவுக்கு நல்ல இடத்தில் வரன் வந்தது. ஆனால் வரதட்சணை கொடுக்கவோ திருமண செலவுகளை செய்யவோ பிந்துவிடம் பொருளாதார வசதி இல்லை. இதனை வருத்தத்தோடு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒரு இஸ்லாமியரிடம் சொல்லியுள்ளார். அந்த பெரியவரும் தனது ஜமாத்திடம் பிந்துவின் நிலையை விளக்கியுள்ளார்.
சென்ற வெள்ளிக் கிழமை ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் பள்ளிக்கு தொழுகைக்கு வந்தவர்களிடம் பிந்துவின் நிலை விளக்கப்பட்டது. பலரும் பிந்துவுக்கு உதவ முன் வந்தனர். திருமண செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. வரும் ஜனவரி 19ந்தேதி பள்ளிவாசலின் திருமண மண்டபத்தில் இந்து தம்பதிக்கு திருமணம் நடத்தி வைப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
மாப்பிள்ளை சசிதரனின் மகன் சரத் சசி. மணமக்களை நாமும் வாழ்த்துவோம்.
சரத் சசி மற்றும் அஞ்சுவின் திருமண பத்திரிக்கையும் ஜமாத் நிர்வாகத்தினரால் அச்சடிக்கப்பட்டு தற்போது விநியோகிக்கப்படுகிறது.
இந்துக்களும் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்து சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். இவ்வாறு தாயாகவும் பிள்ளைகளாகவும் வாழ்ந்து வரும் சமூகங்களை பிரித்து அதில் ருசி காண பாசிச வாதிகள் தினம் ஒரு சட்டங்களை இயற்றி வருகின்றனர். இந்த மக்களின் ஒற்றுமையானது பாசிசவாதிகளின் எண்ணங்களை தவிடு பொடியாக்கும் என்பது மட்டும் உறுதி.
தகவல் உதவி
ஹிந்து ஆங்கில நாளிதழ்
03-01-2019
ஹிந்து ஆங்கில நாளிதழ்
03-01-2019
மொழி பெயர்ப்பு
சுவனப்பிரியன்.
சுவனப்பிரியன்.
---------------------------------------------
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:
“பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் அன்பு செலுத்துங்கள், வானத்தில் உள்ளவன் உங்களுக்கு அன்பு காட்டுவான்.”
ஆதாரம் அபூதாவுத் 13-285
1 comment:
“பூமியில் உள்ளவர்கள் மீது நீங்கள் அன்பு செலுத்துங்கள், வானத்தில் உள்ளவன் உங்களுக்கு அன்பு காட்டுவான்.”
ஆதாரம் அபூதாவுத் 13-285
-----------------------------------------------
தாங்கள், முஸ்லீம் இயக்க தலைவா்கள், ஐக்கிய ஜமாத் தலைவா் கள், முஸ்லீம்கள் என்றாவது இந்தியாவில் முஸ்லீம்களுக்கு இருக்கும் உரிமை பாக்கிஸ்தான் இந்துக்களுக்கு உள்ளதா ? என்று நினைத்து பார்த்ததுண்டா ?
கிடைக்கவில்லையெனில் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று யோசித்ததுண்டா ? அந்த திசையில் எடுத்த நடவடிக்கை விபரம் என்ன ?
ஈரானிய தளபதி சோலியானி கொ்ல்லப்பட்டதற்கு காஷ்மீரில் வாழும் சியா முஸ்லீம்கள் கண்டன ஊர்வலம் நடத்துகிறான்.ஆனால் காஷ்மீரத்து இந்துக்கள் அகதியாக காஷ்மீரைவிட்டு விரட்டியபோது எந்த முஸ்லீமாவது சுண்டு விரலைக் கூட அசைத்தானா ?
----------------------------------------------------------------------------------
இது போன்ற சம்பவங்கள் இந்துக்களாலும் நிறைய நடத்தப்படுகின்றன.
Post a Comment