Followers

Sunday, January 12, 2020

தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவின் வாக்கு உண்மையானது!

தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவின் வாக்கு உண்மையானது!
இதில் யார் தேச விரோதி? யார் தேசாபிமானி?
கூட்டு மனசாட்சியின்படி பொய்யான குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட அப்ஸல் குருவின் உயிரை திரும்பத் தந்து விடுமா நமது நீதிமன்றங்கள்!
அப்சல் குருவால் அன்று 'தீவிரவாதி' என்று அடையாளம் காட்டப்பட்ட டிஎஸ்பி தேவிந்தர் சிங், இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகளை 5 வெடிகுண்டுகள் 2 AK47 துப்பாக்கிகள் சகிதம் டில்லிக்கு காரில் அழைத்துச்சென்ற போது நேற்றிரவு செக் போஸ்டில் நேரடியாக வந்து நின்ற காஷ்மீர் ஐஜி விஜயகுமார் மூலம் 'கையும் தீவிரவாதமுமாக' பிடிபட்டு கைது செய்யப்பட்டார். இன்று... 'டிஎஸ்பி தேவேந்தர் சிங்கும் ஒரு தீவிரவாதியாகவே கருதப்படுவார்' என்கிறார் ஐஜி விஜயகுமார்..!
"பாராளுமன்ற தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளில் ஒருவனை காஷ்மீரில் இருந்து டில்லிக்கு அழைத்துச்சென்று, அவனுக்கு வாடகை வீடு ஒன்றை எடுத்துத்தந்து, வாடகை கார் ஒன்றும் ஏற்பாடு செய்து தரச்சொல்லி என்னை போலீஸ் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்து கட்டாயப்படுத்தியதே... டிஎஸ்பி தேவிந்தர் சிங்கும் போலீஸ் அதிகாரி ஷாந்தி சிங்கும்தான்"
---இது அன்று அப்சல் குரு கோர்ட்டில் கூறியது.
ஆனால்... அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் இந்த 'தேசத்தின் கூட்டு மனசாட்சி' அன்று விசாரிக்கவே இல்லை. பொய் சொல்கிறான் அப்சல் குரு என்று கூறி அந்த குற்றச்சாட்டை அப்படியே மூடிவிட்டது. 10 வருஷம் கழித்து அப்சல் குரு தூக்கில் போடப்பட்ட பின்பு தேவிந்தர் சிங்குக்கு மட்டும் பதக்கம் தந்து கவுரவித்தது. இன்னொரு போலீசுக்கு பதக்கம் தரவில்லை. காரணம்...
அந்த இன்னொரு போலீஸ் அதிகாரியான ஷாந்தி சிங் சில வருஷங்கள் கழித்து ஒரு கஸ்டடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். எதற்காக என்றால்... ஒரு அப்பாவி காஷ்மீரியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக பிடித்துச்சென்று கஸ்டடியில் வைத்து அடித்துத் துன்புறுத்தி டார்ச்சர் செய்யும்போது அவர் இறந்துவிடவே... அப்புறம் அவர் பக்கத்தில் ஒரு துப்பாக்கியை போட்டு, அவரின் சடலம் மீது சுட்டு, "போலீஸ் என்கவுண்டரில் காஷ்மீர் பயங்கரவாதி மரணம்" என்று கூறிவிட்டார். ஆனால், குடும்பத்தார் புகாரின் பேரில் மனித உரிமை ஆணையம் துணையோடு நடந்த போலீஸ் விசாரணையில் அது கொலை என்பது நிரூபணம் ஆகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருந்தார்.
அன்று ஷாந்தி சிங் கதி அப்படி என்றால்...
இன்று தேவிந்தர் சிங் கதியோ படுகேவலம்.
தேசத்தின் கூட்டுமனசாட்சியால் அநீதி இழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை வீண் போகவில்லை என்றே நம்புகிறேன்.
26 ஜனவரி குடியரசு தினம் நெருங்கும் வேளையில் ஏதோ ஒரு மிகப்பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில்... இந்த டிஎஸ்பி தேவேந்தர் சிங்தான் புல்வாமா பயங்கரவாதம் நடந்த ஏரியாவிற்கு பொறுப்பாளி..!
//The officer said Singh was posted across Kashmir on counter-insurgency duty. “He was DySP DR in Pulwama too,’’ the officer said. “He can open a can of worms once he starts talking”.//
இறைவா...
அநீதியாளர்களை தண்டிப்போரில் நீயே மகத்தானவன்..!
https://indianexpress.com/…/davinder-singh-2001-parliament…/
எல்லாப்புகழும் இறைவனுக்கே...👍👌💐



No comments: