சிவனின் இருப்பிடமாக இந்துக்களால் நம்பப்படும் கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது..
நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது, எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.
இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்ரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்".
இந்த பதில் இன்றும் ஐநா அவையின் அதிகாரபூர்வ ஆவணங்களில் உள்ளது.
சீனா எந்த இந்தியப் பேரரசரின் பெயரை குறிப்பிட்டது தெரியுமா?
"ஔரங்சேப் - Aurangzeb".
உண்மையில் ஔரங்சேப் காலத்திலும் சீனாதான் இந்தியப் பகுதியை ஆக்ரமித்தது. இதைக் குறித்து பேரரசர் ஔரங்சேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச (Ching dynasty) மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு (Shunji I) எழுதிய கடிதத்தில், "கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது எங்கள் இந்து சகோதரர்களுக்கு புனிதமான இடம். எனவே, அந்த இடத்தை விட்டு விலகுங்கள்" என எழுதினார்.
கடிதம் எழுதி ஒன்றரை மாதமாகியும் சீன தரப்பிடமிருந்து பதில் இல்லாததால் குமாவோன் பகுதி அரசர் பாஜ் பஹதூர் சந்த் அவர்களின் படையுடன் இணைந்து குமாவோன் வழியாக மலையேறிச் சென்று சீனாவைத் தாக்கி, கைலாஷ் மானசரோவர் பகுதியை இந்தியாவுடன் மீண்டும் இணைத்தார்.
எந்த பேரரசர் ஔரங்சேப் அவர்களை தீவிர இஸ்லாமிய அரசர் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பரப்புரை செய்யப்படுகிறதோ அதே பேரரசர்தான்.
அவர்தான் இந்தியாவின் முதல் உண்மையான 'சர்ஜிகல் ஸ்டிரைக்' நடத்தியவர்.
வரலாற்றின் இந்த பக்கங்கள், இந்தியா விடுதலை அடைந்த காலத்து ஐநா அவையின் ஆவணங்களில் உள்ளன. அது மட்டுமின்றி அந்த ஆவணங்கள் நாடாளுமன்றத்திலும் பாதுகாப்பாக உள்ளன.
அந்த வரலாற்றுச் சம்பவங்களை நீங்கள் கீழ்க்கண்ட புத்தகங்களிலும் காணலாம்..
ஹிஸ்டரி ஆஃப் உத்தராஞ்சல் - உத்தராஞ்சல் வரலாறு.
ஆசிரியர்: ஓ.சி. ஹாண்டா
ஆசிரியர்: ஓ.சி. ஹாண்டா
மற்றும்
த டிராஜிடி ஆஃப் திபத் - திபத்தின் துயரம் (அல்லது சோகமுடிவு).
ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.
ஆசிரியர்: மன்மோஹன் ஷர்மா.
2 comments:
நல்ல வரலாற்று தகவல் அளித்தமைக்கு நன்றி. சமபந்தப்பட்ட புத்தகங்களைப் படித்து விபரம் உறுதி செய்து கொள்ளலாம்.
-----------------------------------------------------------------
தங்கள் வாதம் காஷ்மிருக்கும் பொருந்தும். மன்னா் ஹரிசிங் தனித்து காஷ்மீா் செயல் படும்எ ன்று அறிவித்தநிலையில் பாக்கிஸ்தான் ராணுவத்தின் அல்.புர்வாகின் என்ற படை பிரிவு முதலாம் காஷ்மீா் புத்தத்தை நடத்தியது.இப்படை முற்றிலும் அஹமதிய முஸ்லீம்களால் அஹமதிய ஜமாத் செலவில் உருவாக்கப்பட்டபடை. இதுதான் கஷ்மீா் இந்துக்களை படுகொலை செய்து நாசவேலை செய்து இந்துக்களை விரட்டியது. இந்துக்களை காப்பாற்ற வேண்டும்எ ன்ற உணா்வு கிஞ்சித்தும் அற்ற நேரு காஷ்மீா் இந்துக்களை காப்பாற்றவில்லை. இந்துக்களின் பிணக்குவியலைப் பார்த்து பயந்து போன மன்னா் ஹரிசிங் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தாா். ராணுவம் அனுப்பப்பட்டது.பாக்கிஸ்தான் காடையர்களை அப்புறப்படுத்தும் பணியை முடிக்காமலே நேரு ராணுவத்தை போரை நிருத்த உத்தரவிட்டாா்.
மேற்படி நில பரப்பில் இந்துக்கள் அனைவரும் கொல்லப்பட்டனா். இந்துக்கள் யாரும் வாழவில்லை. இந்தியா அதைகைப்பற்ற முயலவில்லை.
----------------------------------------------
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்திய அரசு ராணுவ நடவடிக்கை மூலம்கைபற்றுவது சரியானது என்று ஒப்புக் கொண்டு அதற்கு ஒரு நிரூபணமும் அளித்த தங்களுக்கு நன்றி.
பர்கான் படை காஷ்மீரில் உள்ள இந்துக்களை தாக்கி அழித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைபற்றியது.பர்கான் பட்டாலியன்
The Furqan Force or Furqan Battalion was a uniformed fighting force of volunteers (khuddam-i-din[1]) in newly formed Pakistan, composed of the minority Ahmadiyya branch Muslims. Formed in June 1948[2] at the direction of Ahmadiyya leader Mirza Mahmood, at the request of Pakistan government,
the unit fought for Pakistan against India in the First Kashmir War.[3]
In addition to its troops being drawn from the Ahmadiyya population,
the expenses of maintaining the unit were also paid by that community.[4]
The unit was disbanded in 1954 and many of its members became part of Pakistan Army.[1]
நான் இப்படி ஒரு தகவலை கேள்வி பட்டதில்லை.அண்மையில் படித்தேன்.பதிவு செய்கிறேன்.இந்த தகவல் பொய் என்றால் மற்றவர்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
Post a Comment