Followers

Saturday, January 04, 2020

ஒரு சங்கியுடனான சந்திப்பு!


ஒரு சங்கியுடனான சந்திப்பு!

(21-10-2019) பல் வலிக்காக மருத்துவ மனைக்கு சென்றிருந்தேன். எனது டோக்கன் 5. எனக்கு அடுத்து டோக்கன் 6 ஒரு மலையாளி. காத்திருந்த நேரம் அந்த மலையாளி என்னிடம் நலம் விசாரித்தார். சிறிது நேரம் கழித்து அரசியல் பக்கம் பேச்சு சென்றது. எதிரில் தொலைக்காட்சியில் ஹரியானா, மஹாராஷ்ட்ரா தேர்தல் சம்பந்தமாக செய்திகள ஓடிக் கொண்டிருந்தது. இனி சங்கியோடு நடந்த உரையாடலை பார்போம்.

 'இந்த முறையும் மோடிதான் வருவார் போல் இருக்கிறது. கேரளாவில் அடுத்த ஆட்சி பிஜேபிதான்.'

'தவறு நண்பரே! வட நாட்டில் அதிகம் படிப்பறிவில்லாததால் மோடிக்கு வாக்கு விழுகிறது. எந்த காலத்திலும் கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் ஆட்சியை பிஜேபி பிடிக்கும் என்பது வெறும் கனவுதான்'

'மோடி இந்தியாவை உலக அளவில் மிக உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளார். உலகம் முழுவதும் நமது ராணுவ வலிமையை கண்டு பயப்படுகின்றன.'

'இந்தியா முன்பே உலக அளவில் பிரசித்து பெற்றது. மோடி வந்து அதனை தூக்கி நிறுத்தவில்லை. மேலும் ஆயுதங்களை வாங்கி குவிப்பதால் யாருக்கு நன்மை? பிஜேபிக்கு விசுவாசமாக இருக்கும் இடைத் தரகர்களுக்கு பண மழை பொழியும். சாமான்ய மக்களுக்கு மோடி என்ன செய்தார்? நமது நாட்டு பொருளாதாரம் இன்று எந்த அளவு சீர் கெட்டுள்ளது தெரியுமா? பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி, வாராக் கடன்கள் என்று நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டுள்ளது.'

'இல்லை. மோடியும் நிதி அமைச்சரும் நிலைமையை சரி செய்து வருகிறார்கள்.  வெளி நாட்டு முதலீடுகள் நிறைய வர இருக்கிறது.'

'மன்மோகன் சிங்கும், ரகுராம் ராஜனும், பொருளாதாரம் மீள்வது மிக சிரமம் என்கிறார்கள். முதலீடுகள் எப்படி வரும்? தனது சொந்த பணத்தில் மாட்டுக் கறி வாங்கினால் அதனை மோப்பம் பிடித்து கும்பலாக சென்று தாக்குகிறது இந்துத்வா காட்டுமிராண்டி கும்பல். அவர்களை கொலை செய்கிறது. 'ஜெய் ஸ்ரீராம்' கூறு என்று கூறி முஸ்லிம்களை அடித்துக் கொல்கிறது இந்த கும்பல். மோடியோ, அமீத்ஷாவோ கொலையாளிகளை சிறையில் அடைப்பதில்லை. அவர்களை ஊக்குவிக்கிறார்கள். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் கட்டுவோம் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். இந்த நிலையில் யார் நமது நாட்டில் முதலீடு பண்ண வருவர்? பணம் போடுபவன் அனைத்தையும் சிந்திப்பானே!’

'பன்றிக் கறி உங்களுக்கு ஹராம். அதை நீங்கள் தின்பீர்களா?'

'எங்களுக்கு ஹராம். நாங்கள் சாப்பிடுவதில்லை. நாங்கள் வளர்ப்பதில்லை. ஆனால் அதனை சாப்பிடுபவர்கள் எவரையும் போய் நாங்கள் தடுப்பதில்லையே. சாராயம் குடிப்பது ஹராம். ஆனால் அதனை குடிப்பவர்களை போய் நாங்கள் சண்டை செய்து வம்பளப்பதில்லையே. அவர்களை கொல்வதில்லையே'

(இதற்கெல்லாம் பதில் சொல்ல தெரியாமல் சிறிது நேரம் விழித்த மலையாளி சுதாரித்துக் கொண்டு) 'பாகிஸ்தான் தற்போது நம்மை கண்டு பயப்படுகிறது. அந்த நிலையை ஏற்படுத்தியவர் மோடி'

'ஹா.. ஹா... இந்தியாவோடு ஒப்பிடும்போது பாகிஸ்தான் ஒரு சுண்டைக்காய். நமது நாட்டின் மூன்று மாநிலங்கள் சேர்ந்ததுதான் பாகிஸ்தான். யார் ஆட்சிக்கு வந்தாலும் நமது ராணுவ வலிமையோடு அவர்கள் போராட முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். நம்மோடு நேருக்கு நேர் நிற்க தெம்பில்லாத ஒரு நாட்டை வழிக்கு கொண்டு வந்து விட்டோம் என்பது எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.'

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மலையாளி முழித்துக் கொண்டிருக்க எனது டோக்கனும் வந்தது. நான் உள்ளே சென்று விட்டேன். தெரியாத் தனமாக வாயைக் கொடுத்து சரியாக மாட்டிக் கொண்ட சங்கியின் நிலை எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அதிகம் பேருக்கு மீடியாக்களால் மோடியைப் பற்றிய ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். மோடி ஒரு காற்றடைத்த பலூன் என்பதை வெகு விரைவில் இவர்கள் உணர்வார்கள். 













No comments: