பாலைவன பிரதேசமான வளைகுடாக்களில் கடல் நீரை குடிநீராக்கி ஒட்டகத்தை பணம் கறக்கும் விலங்காக மாற்றிக் காட்டியுள்ளனர். ஆனால் மெத்த படித்த ஆஸ்திரேலியர்களோ ஒட்டகங்களை தண்ணீர் அதிகமாக குடிக்கிறது என்பதற்காக சுட்டுத் தள்ளி அதற்கு போஸூம் கொடுக்கின்றனர். வறுமையில் புரளும் ஏதாவது ஒரு ஆப்ரிக்க நாட்டுக்கு இந்த ஒட்டகங்களை இலவசமாக அனுப்பி வைத்திருந்தால் அந்த மக்கள வாழ்த்தியிருக்க மாட்டார்களா? பீட்டா அமைப்பு இதற்கு எந்த எதிர்ப்பும் காட்டாததையும் கவனிக்க. வெள்ளைத் தோல் உள்ளவன் எது செய்தாலும் அது இந்தியாவாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் தவறாக பார்க்கக் கூடாது என்று எழுதப்படாத சட்டம் போல
உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
குர்ஆன் 7:31
இது சம்பந்தமாக சித்தார்த் என்ற சகோதரர் எழுதியுள்ள பதிவையும் பார்போம்.
----------------------------------------------------------
அன்று இங்கிலாந்து நாட்டிலிலிருந்து தண்டனைக் கைதிகளாக அனுப்பப்பட்ட வர்கள் ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்து அங்கிருந்த தொல்குடி மக்களை(புஷ்மென்கள்) ஈவிரக்கமின்றி கொன்றொழித்து இனப்படுகொலை செய்தார்கள்.
இன்று அவர்களின் வாரிசுகள்தான் ஒட்டகங்கள் தண்ணீரைக் குடித்துவிடுவதால் பஞ்சம் வருகிறது என்று கூறி அவைகளைக் கொலையும் செய்துவிட்டு குற்ற உணர்வுகூட இல்லாமல் பெருமிதத்தோடு படம் பிடித்து வெளியிட்டும் மகிழ்கிறார்கள்.
இவர்களின் முன்னோர்கள்தான் அன்று ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்தி அங்கிருந்த யானை,புலி,சிங்கம்,சிறுத்தைகளை வேட்டையாடிக் கொன்று துப்பாக்கிளுடன் நின்று படம் பிடித்துக் கொண்டார்கள்.
பின்னர் இவர்களேதான் விலங்குகளை அழிவு மற்றும் துன்புறுத்துதல்களிலிருந்து பாதுகாக்க புளுகிராஸ்,கிரீன்பீஸ்,பீட்டா போன்ற அமைப்புகளையும் தொடங்கி நடத்திக்கொண்டும் வருகிறார்கள்.
இந்த இரட்டை வேடதாரிகளின் அமைப்புகள் ஒன்றுகூட ஒட்டகங்கள் கொல்லப்படுவதற்கு எதிராக ஒரு சிறு முனுமுனுப்புகூட தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்தியாவில் இவர்கள் நினைத்தது எல்லாம் உடனே சட்டமாகிவிடுகிறது.
வெறிப்பிடித்த தெருநாய்களைக்கூட கொல்லக்கூடாது.அவைகளைப் பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்து விட்டுவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரைசென்று தீர்ப்பு வாங்கிவிடுகிறார்கள்.
வீட்டு விலங்கான வளர்ப்புக் காளைகளைக்கூட துன்புறுத்துகிறார்கள் என்று கூறி ஜல்லிக்கட்டை தடை செய்து விடுகிறார்கள்.
விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என்று இவர்களிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தால்தான் திரைப்படங்களே சென்சார் செய்யப்படுகிறது.
இந்திய விலங்குகளுக்காக இங்கு கண்ணீர்சிந்தி சர்வாதிகாரம் செய்பவர்கள் ஆஸ்திரேலிய ஒட்கங்களுக்காக ஒரு ஐகோர்ட்டையும் பிடுங்கவில்லையே ஏன்?
இதிலிருக்கிறது இந்த வெள்ளைத் தோல் மனிதர்கள் உலகத்தை ஏய்த்து ஏமாற்றும் தந்திர அரசியல்.
உலகில் முன்னர் எல்லா விலங்குகளையும் கொன்ற வெள்ளையர்களே பின்னர் அவைகளைக் காக்கும் தன்னார்வ அமைப்புகளையும் தொடங்குகிறார்கள்.
இந்தியாவில் முன்னர் பசு,இளம் கன்றுகளின் மாமிசங்களைத் தின்ற பார்ப்பனர்கள்தான் பின்னர் பசுவதைச் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள்.
இவர்கள் செய்தால் சரியாக இருக்கும் ஒன்று அடுத்தவர் செய்தால் மட்டும் குற்றமாகிகிவிடுகிறது.சட்டம் போட்டு தண்டனை வழங்கிவிடுகிறார்கள்.
இந்திய அளவில் பாரப்பன பனியாக்களுக்கும் உலகளவில் வெள்ளைக்காரர்களுக்குமான செயல்திட்டமே இதுவாகத்தானிருக்கிறது.
இவர்கள் அரசு,அதிகாரம்,ஆளுகை எனும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..காட்சிகளையும் வசனங்களையும் இவர்களே காலத்திற்கு ஏற்ப மாற்றி மாற்றி எழுதி இயக்கிப் பேசி நடித்துக் கொண்டு வருகிறார்கள்.
ஏன் முன்பு அப்படி பேசினீர்கள்.இப்போது ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று நாம் ஒரு போதும் கேள்வி கேட்பதே இல்லை.
அவர்கள் நாடகத்தில் அழும்போது நாமும் அழுகிறோம் அல்லது அழுமாறு கட்டாயப் படுத்தப்படுகிறோம்.சிரிக்கும் காட்சியின் போது நாமும் சிரிக்கிறோம் அல்லது சிரிக்குமாறு கட்டாயப் படுத்தப் படுகிறோம்.
இவர்கள் நடத்தும் நாடகத்தின் பார்வையாளர்கள் தானே நாம்.
-சித்தார்த் தமிழவேள்
2 comments:
Do you know why famel z4e reared in middle east for race and meat. In Australia camel, emu hen, Rabbit are really amess for farmer that why thry are killing.
பாலைவன பிரதேசமான வளைகுடாக்களில் கடல் நீரை குடிநீராக்கி
-
சரிதான் சாதனை.தேவையை நிறைவேற்ற வேறு வழி.கடல்நிரை குடிநீராக்கும் தொழில் நுட்பம் அரேபியர்கள் கண்டுபிடித்ததா ? விலைக்கு வாங்கியிருப்பார்கள்.
----------------------------------------------------------------------
ஒட்டகத்தை பணம் கறக்கும் விலங்காக மாற்றிக் காட்டியுள்ளனர்.
-எப்படி என்பதை விளக்கவில்லையே.மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடமுடியாது.ஒட்டகங்கள் வழி அரேபிய நாடுகள் பெற்ற வருமானம் என்ன ?
அரேபியாவாக இருந்தால் அனைத்து ஒட்டகங்களையும் அறுத்து தின்று தீர்த்து இருக்கலாம்.
அதற்கு முடியவில்லை என்ற மனக் கொதிப்புதான் காரணம்.
--------------------------------------------------------------------------
இவர்களேதான் விலங்குகளை அழிவு மற்றும் துன்புறுத்துதல்களிலிருந்து பாதுகாக்க புளுகிராஸ்,கிரீன்பீஸ்,பீட்டா போன்ற அமைப்புகளையும் தொடங்கி நடத்திக்கொண்டும் வருகிறார்கள்
சரி பல நல்ல காரியங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
----------------------------------------------------------------------------------
வெறிப்பிடித்த தெருநாய்களைக்கூட கொல்லக்கூடாது.அவைகளைப் பிடித்து கருத்தடை அறுவைசிகிச்சை செய்து விட்டுவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரைசென்று தீர்ப்பு வாங்கிவிடுகிறார்கள்.
பதில் - தெருநாய்களின் தொந்தரவுகளை உடனுக்குடன் தடுக்க வேண்டும். அரசு தக்க முறையில் செயல்பட வேண்டும்.
--------------------------------------------------------------
வீட்டு விலங்கான வளர்ப்புக் காளைகளைக்கூட துன்புறுத்துகிறார்கள் என்று கூறி ஜல்லிக்கட்டை தடை செய்து விடுகிறார்கள்.
பதில்-- ஜல்லிக்கட்டி அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.பார்த்து வரலாம்.
விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என்று இவர்களிடம் சான்றிதழ் வாங்கிக் கொடுத்தால்தான் திரைப்படங்களே சென்சார் செய்யப்படுகிறது.
பதில் -சரியான நடவடிக்கைதான்.
--------------------------------------------------------------------------
இந்திய விலங்குகளுக்காக இங்கு கண்ணீர்சிந்தி சர்வாதிகாரம் செய்பவர்கள் ஆஸ்திரேலிய ஒட்கங்களுக்காக ஒரு ஐகோர்ட்டையும் பிடுங்கவில்லையே ஏன்? இதிலிருக்கிறது இந்த வெள்ளைத் தோல் மனிதர்கள் உலகத்தை ஏய்த்து ஏமாற்றும் தந்திர அரசியல்.
பதில்- ஏற்கனவே 5000 ஒட்டகங்களை கொல்லவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பெரும் பணம் பெற்ற குவைத் சவுதி அரேபியா பருனேபோன்ற அரேபிய நாடுகள் செலவு தொகை கொடுத்து தங்கள் நாட்டிற்கு அவைகளை எடுத்துக் கொண்டிருக்கலாமே. வறுமையில் வாடும் நாடுகளுக்கு ஒட்டகங்களை கொடுத்து இருக்கலாமே.
இந்தியர்களை நோக்கி குற்றம் சாட்டும் சுவனப்பிரயன் அரேபிய நாடுகளை குற்றம் சொல்ல மறுப்பது ஏன் ?
----------------------------------------------------------------------
இந்தியாவில் முன்னர் பசு,இளம் கன்றுகளின் மாமிசங்களைத் தின்ற பார்ப்பனர்கள்தான் பின்னர் பசுவதைச் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவருகிறார்கள்.
பதில் - தவறு என்ன உள்ளது.ஆதாமும் ஏவாளும் அம்மணமாக வாழ்ந்தார்கள்.அவர்களது இரண்டு மகன்களும் அம்மணமாக இருந்தார்கள். நாமும் அப்படித்தான் வாழ வேண்டும் அதுதான் நபி வழி ஹலால் என்று ஏன் சொல்லவில்லை.நாகரீக பரிணாமத்தை ஏற்றுக் கொண்ட நாம் மாடுகளை தின்ன முழு சுதந்திரம் கிடைக்க வில்லை என்ற விரக்தியில் இப்படி பேசுவது சரியானதல்ல. காட்டறபிகள் வேட்டை சமூகம்.இந்தியர்கள் விவசாய சமூகம். கால்நடைகளை தின்று தீர்த்து விட்டால் விவசாயம் அழிந்து விடும்.ஆகவே சில கட்டுப்பாடுகள் உள்ளது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு அது புரியும்.
இந்தியாவில் வாழும் அரேபியர்களுக்கு எப்படி விளங்கும்.
Post a Comment