Followers

Monday, January 06, 2020

ஹங்கேரிய அரசியல்வாதியையும் கவர்ந்த இஸ்லாம்!

ஹங்கேரிய அரசியல்வாதியையும் கவர்ந்த இஸ்லாம்!
ஹங்கேரி நாட்டின் அரசியல் கட்சியான ஜோப்பிக் இயக்கம் அந்நாட்டில் மிக பிரபலமானது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்த வாக்காளர்களில் 16.67 சதவீத வாக்குகளைப் பெற்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. சட்டமன்றத்தில் 47 இடங்களை பெற்று சிறந்த அரசியல் கட்சியாக பரிணமித்து வருகிறது. இந்த கட்சியின் தலைவரான கேபர் ஓனா துருக்கி நாட்டுக்கு அரசு முறை பயணமாக வந்தார். இங்குள்ள பல்கலைக் கழகங்களை பார்வையிடுவது இவரது வருகையின் நோக்கம்.
இவர் பல்கலைக் கழகத்தில் நடந்த சொற்பொழிவில் பின்வருமாறு தனது பேச்சை ஆரம்பித்தார்:
'எங்களது பயணமானது துருக்கிக்கும், ஹங்கேரிக்கும் இடையிலான வர்த்தக அரசியல் பரிமாற்றத்தை நோக்கமாக கொண்டதல்ல. எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கம் துருக்கியின் சகோதர சகோதரிகளை சந்தித்து உரையாடுவதே! சில மேற்குலக நாடுகள் எங்களது இந்த பயணத்தை விரும்பாது இருக்கலாம். ஆனால் துருக்கி, அஜர்பைஜான், துனீஷியா போன்ற நாடுகளில் நடக்கும் அத்து மீறல்களை நாம் கண்டிக்காமல் இருக்க முடியாது. இஸ்லாமிய மக்களைப் பற்றியும் அதன் சட்டதிட்டங்களைப் பற்றியும் தவறான ஒரு பிம்பமே இதுவரை எங்களுக்கு இருந்தது. ஆனால் துருக்கிய மக்களின் குடும்ப அமைப்பு, கலாசார நிகழ்ச்சிகள், குடும்பத்தவர்களிடையே உள்ள பாச பிணைப்பு, இந்த மக்களின் நாட்டுப் பற்று போன்றவை ஹங்கேரிய மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. மனிதாபிமானத்துக்கும் உலக பொருளாதார சிக்கலுக்கும் ஒரு சிறந்த விடையை இஸ்லாம் உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கான தீர்வு இஸ்லாத்தில்தான் உள்ளது.
ஆப்ரிக்காவுக்கு உலக அரங்கில் எந்த பவரும் இல்லை. ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் தெளிவற்ற சிந்தனைகளையே தனது மக்களுக்கு வழங்கி வருகிறது. மன நிம்மதியற்று அலை பாயும் மனதைக் கொண்ட பெரும்பாலான உலக மக்களுக்கு ஒரே விடியல்தான் உண்டு. அதுதான் இஸ்லாம். எனது சொந்த வாழ்வில் பல முஸ்லிம்களின் நெருக்கத்தைப் பெற்றுள்ளேன். ஒரு பாலஸ்தீனியரின் திருமண விருந்தில் கலந்து கொண்டதையும் என்னால் மறக்க முடியாது.' என்று தனது அழகிய பேச்சை பல இடங்களில் பதிந்தார் இந்த ஐரோப்பியர்.
ஐரோப்பாவுக்கும் அரேபியாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? இரு வேறு மாறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தமான நாட்டிலிருந்து வந்த இந்த ஐரோப்பியரையும் இந்த இஸ்லாமிய வாழ்வு கட்டிப் போட்டுள்ளது.
அடுத்து என்ன.................?
தனது பெயரை அப்துல்லாவாகவோ, அப்துல் ரகுமானாகவோ மாற்றிக் கொண்டதாகவும், தனது வாழ்வு முறை இனி முகமது நபியை பின்பற்றியதாகவும் இருக்கும் என்ற பேட்டியை இன்னும் சில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.  இதுதான் இஸ்லாம்.
Sources
Morocco World News
இது ஒரு மீள் பதிவு


1 comment:

ஆனந்தி வேல் said...

ஆனால் துருக்கிய மக்களின் குடும்ப அமைப்பு, கலாசார நிகழ்ச்சிகள், குடும்பத்தவர்களிடையே உள்ள பாச பிணைப்பு, இந்த மக்களின் நாட்டுப் பற்று போன்றவை ஹங்கேரிய மக்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
----------------------
ஆம் மேல்நாட்டு நாகரீகம் குடும்பவாழ்க்கையின் மாண்பை சிதைத்து விட்டது. இந்தியா மற்றும் துருக்கியில் குடும்பமாக வாழ்வதன் சிறப்பை மக்கள் உணா்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். ஆக குடும்பமாக வாழ நினைக்கும் எவருக்கும் மேல்நாட்டு நாகரீகம் வெறுப்பாக இருக்கும். அடுத்த நலல வாய்ப்பு இந்து பண்பாடு என்ற கருத்து இவருக்கு தெரியாமல் உள்ளது.தெரிந்தால் இந்தியாவை நோக்கி வந்திருப்பாா்.பாவம் ஆழம் தெரியாமல் அரேபியாவை நாடுயிருக்கின்றாா். விஷத்தை அமா்தம் என்று இவா் ஏமாந்தருப்பது பரிதாபம்.