Followers

Thursday, January 16, 2020

இஸ்லாமியனின் சுதந்திர சுதந்திரப்போராட்ட தியாக வரலாறு!

இதோ மறைக்கப்பட்ட இன்னொரு இஸ்லாமியனின் சுதந்திர சுதந்திரப்போராட்ட தியாக வரலாறு!

ஆங்கிலேயனுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த கூட்டம் இன்று தனது நிஜ முகத்தை மறந்து நிற்கிறது விடுதலைப் போரில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத காவிக் கூட்டம் நாட்டுப்பற்றில் முன்னணியில் நிறபதுப்போல் நடிக்கிறது !

காரணம் முஸ்லீம்கள் தங்களது தியாகங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாததால் தான்.

உலகத்திற்கே தெரியும் விடுதலைக்காக முஸ்லீம்கள் பட்டபாடு அப்படிப்பட்ட நம்மையே குடிமகனாக நிரூபிக்கச் சொல்கிறது கேடுக்கெட்ட சாவர்க்கர் கூட்டம்.

யார் இந்த சாவர்க்கர் ? கற்பழிப்பு வழக்கில் லண்டன் சிறையில் அடைப்பட்ட சாவர்க்கர்தான் சக இந்துவைக் கொன்ற கொலைக் குற்றத்திற்காக அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்!

அங்கு ஆங்கிலேயனின் அடிவருடியாக இருந்து ஆறு முறை மன்னிப்புக் கடிதம் எழுதிய தியாகிதான் இவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அதே அந்தமான் சிறையில் இன்னொரு இஸ்லாமிய கைதியும் அடைக்கப்பட்டிருந்தது யாருக்காவது தெரியுமா?
அவர்தான் சுதந்திரப்போராட்ட தியாகி ஷேர் அலி அஃப்ரிடி!

வரலாற்றில் இந்தப் பெயர் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இவர் என்ன குற்றத்திற்காக அங்கு அடைக்கப்பட்டார் என்பதை விட அங்கு என்ன செய்தார் என்பது தான் இப்போதைக்கு முக்கியம்.

சாவர்க்கர் செய்த கோழைத்தனம் அங்கிருந்த ஜெயிலரின் ஷூவை நக்கியதுச் சொன்னதைச் செய்து அடிமையாக அடைபட்டுக் கிடந்தது.

ஆனால் ஷேர் அலி செய்த செயல் இன்றும் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறது!

சரி அப்படி என்னதான் செய்தார் வாருங்கள் பார்ப்போம்!

இந்திய தலைமை அதிகாரத்தில் இருந்த வைஸ்ராய் லார்டு மேயோவை கழுத்தில் கத்தியைப் பாய்ச்சி கொலை செய்தார் தியாகி ஷேர் அலி அஃபிரிடி !

வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கி ஓட்டினால் சுத்த வீரன் யாரெனத் தெரியும் வாருங்கள் ....

1857 ல் சிப்பாய் கலகத்தில் அதில் கலந்துகொண்ட குற்றவாளிகளுக்காக கட்டப்பட்டது தான் அந்தமான் சிறைச்சாலை ஆரம்பத்தில் இருநூறு கைதிகளோடு இயங்கிய இந்த ஜெயிலில் தான் ஷேர் அலி வரும்போது ஏழாயிரம் கைதிகள் இருந்தனர்.

பிப்ரவரி எட்டு 1872 ல் லார்டு மேயோ பர்மாவில் வந்து இறங்கினார் அங்கிருந்த தலைமை நீதிபதி ஜார்ஜ் நார்மனை யாரோ கொலை செய்துவிட அந்த கொலைப்பற்றி விசாரிக்க தான் போர்ட் பிளேயர் வந்திறங்கினார் லார்டு மேயோ.

லார்டு மேயோவிற்கு சடங்கு சம்பிரதாயங்கள் பேண்ட் வாத்திய அணிவகுப்புகள் எல்லாம் முடிந்து குடும்ப சகிதமாக சுற்றிப் பார்த்துவிட்டு கிளம்பும் வேளையில் தான் யாரும் எதிர்பார்க்காத அந்தக் கொலை நடந்து முடிந்தது.

இரவு எட்டு மணி எங்கும் கும்மிருட்டு மேயோவிற்கு படகு தயாராக நிற்கிறது அவரது மனைவி படகில் காத்துக்கொண்டிருக்கிறார் மெதுவாக படகை நோக்கி வைஸ்ராய் அடியெடுத்து வைக்கும்போது தான் இருட்டைக் கிழித்துக்கொண்டு ஷேர் அலி வெளிப்பட அவரது கையில் கூரான கத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் மேயோவின் கழுத்தில் அந்தக் கத்தி பாய்ந்தது சரியாக மெய்ன் ரத்தக்குழாய் சிதைந்தது இரத்தம் பீச்சிட நிலத்தில் சரிந்தார் மேயோ வரலாற்றில் மிக முக்கியமான படுகொலையிது.

இங்கு கொலையை நாம் நியாயப்படுத்தவில்லை ஒரு சாதாரண கலெக்டரைக் கொன்ற வாஞ்சிநாதன் என்ற இளைஞனை வீர வாஞ்சி என வரலாறு போற்றுகிறது காவியம் ஆனால் இந்தியாவின் வைஸ்ராயையே ஒரு முஸ்லீம் இளைஞன் கொன்று விட்டு தப்பியோடாமல் அப்படியே நின்றவனைப்பற்றி வரலாற்றுப் பதிவுகளில் எங்குமேக் காட்டிடாமல் மறைத்தது பாசீச பார்ப்பணியம்!

நம்மை அடிமையாக்கி ஆட்டம் போட்ட ஆங்கிலக் கூட்டத்தின் தலைமை பொறுப்பில் இருந்த வைஸ்ராயைக் கொன்றவன் #முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அந்த இளைஞனின் தியாகம் பிற்காலத்தில் கொண்டாடப்படவில்லை.

மாறாக ஐயா சாமி என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சிய கோழை சாவர்க்கருக்கு செல்லுலார் ஜெயிலில் ஒரு நினைவுச் சின்னம் எவ்வளவுப் பெரிய அயோக்கியத்தனம். #சாவர்க்கரை இந்தக் கூட்டம் தூக்கிப் பிடிக்கும்போது ஷேர் அலி அஃப்ரிடியை நாம் ஏன் தூக்கிப் பிடிக்கவில்லை.?.

அந்தத் தவறு தான் #இப்போது நம்மை இந்த மண்ணின் குடிமகன் என்பதை நிரூபிக்கச் சொல்கிறது.

தியாகி ஷேர் அலி செய்த தியாகம் கோடீஸ்வரன் கேள்வி பதிலில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது.

வரலாற்றை மறந்தவன் மரணித்த பிணத்திற்கு சமம் என்பதை நினைவில் வைத்து அதிகம் பகிர்வோம்....

தியாகி ஷேர் அலி அஃபிரிடி வரலாற்றை....!



1 comment:

Dr.Anburaj said...

இங்கு கொலையை நாம் நியாயப்படுத்தவில்லை ஒரு சாதாரண கலெக்டரைக் கொன்ற வாஞ்சிநாதன் என்ற இளைஞனை வீர வாஞ்சி என வரலாறு போற்றுகிறது காவியம் ஆனால் இந்தியாவின் வைஸ்ராயையே ஒரு முஸ்லீம் இளைஞன் கொன்று விட்டு தப்பியோடாமல் அப்படியே நின்றவனைப்பற்றி வரலாற்றுப் பதிவுகளில் எங்குமேக் காட்டிடாமல்

மறைத்தது பாசீச பார்ப்பணியம்!
--------------------
இன்றுதான் இந்த செய்தியைப் படிக்கின்றேன்.தியாகி ஷேர் அலி அஃப்ரிடி!இதற்கு பார்பணியம் காரணம் அல்ல.
சதா பார்பணியம் என்று தீக காரன் போல் நயவஞ்சகமாக இந்தக்களிடையே பிளவை உண்டாக்கலாம் என்பது உமது திட்டம்.

காங்கிரஸ்காரன் தனக்கு பிடித்தமானவர்களின் பெயா்களை வரலாற்றில் சோர்த்தான்.
மற்றவர்களின் தியாகம் மறைக்கப்பட்டது என்பது உண்மைதான்.
முஸ்லீம் பத்திரிகைகள் படிக்கின்றேன்.
அதில் கூட இவா் பெயா் வரவில்லையே.ஏன் ??

இவரை தியாகி என்று ஏற்பதில் முஸ்லீம்களுக்கு உள்ள பிரச்சனை என்ன ?