Followers

Wednesday, January 08, 2020

ஆஷிக் என்ற அன்பழகன் தரும் அழகிய விளக்கம்!

ஆஷிக் என்ற அன்பழகன் தரும் அழகிய விளக்கம்!
மோடியும் அமித்ஷாவும் கொண்டுவர துடிக்கும் குடியுரிமை சட்டத்தின்படி இந்தியாவில் இஸ்லாத்தை துடைத்தெறிந்து விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். தோல்வியடையப் போகும் இவர்களின் கோமாளி சட்டங்களை அழகிய முறையில் அன்பழகன் இந்த காணொளியில் விளக்குகிறார்.
"இறைவன் குர்ஆனிலே கூறுகிறான்
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறை மறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்-குர்ஆன் 9:32)
இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் முற்றாக துடைத்து வெளியேற்றி விட்டால் மட்டும் இஸ்லாம் இந்தியாவை விட்டு போய் விடுமா? கல்யாண வீட்டில் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று ஒருவன் நினைத்தால் எவ்வளவு அபத்தமோ அது போன்ற வாதம்தான் இது. எனது பெயர் அன்பழகன். இதோ எனது ஆதார் கார்டில் அன்பழகன் என்ற பெயர்தான் உள்ளது. மதமும் இந்து என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சட்டப்படி நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் மதம் என்ற பிரிவில் நான் இந்துதான். அன்பழகன் என்ற பெயரில் எனது நண்பர்களுக்கும் எனது உறவினர்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பேன். என்ன செய்து விட முடியும் உங்களின் சட்டத்தால். சிவா, நந்தா, பிரபு, டேவிட் என்று பழைய பெயரிலேயே முஸ்லிம்களாக வாழ்ந்து வரும் பலரை என்னால் காட்ட முடியும். இவர்களை எப்படி தடுப்பீர்கள். எங்களின் பழைய பெயரிலேயே பள்ளி வாசலுக்கு சென்று தொழுகையை தலைமையேற்றும் நடத்திக் கொண்டுள்ளோம். யாரும் எங்களை 'நீ எந்த சாதி? பூணூல் போட்டுள்ளாயா?' என்றெல்லாம் கேட்பதில்லை.
'உனக்கு குர்ஆன் ஓத தெரியுமா? தொழுகையின் சட்டங்கள் தெரியுமா? வாங்க பாய். வந்து தொழுக வையுங்க பாய்' என்றுதான் கூறுகிறார்கள். இந்து பெயரிலேயே இஸ்லாத்தை பின் பற்றும் என்னைப் போன்ற லட்சக்கணக்கான மக்களை எந்த சட்டத்தை கொண்டு ஒடுக்குவீர்கள்? அபூஜஹில், ஃபிர்அவுன் போன்ற மிகக் கொடுமையான அரசர்களையே சந்தித்து அதில் வெற்றியும் கண்டது இந்த இஸ்லாமிய மார்க்கம். அதிகபட்சமா உன்னால என்ன பண்ண முடியும்? எங்களை கொலை செய்ய முடியும். அதுதான் எங்களின் வாழ்வின் ஆரம்பமே. ஒவ்வொரு தொழுகையிலும் 'இறைவா! எங்களை இஸ்லாத்திற்காக இஸ்லாத்தை நேசித்தவர்களான நிலையில் எங்களின் உயிரை எடுப்பாயாக' என்றுதான் கேட்டு வருகிறோம்.'
இவ்வாறாக சகோ ஆஷிக் என்ற அன்பழகனின் பேச்சு தொடர்கிறது. இஸ்லாத்தை பொருத்த வரை அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அன்பழகன், அறிவழகன், சுவனப்பிரியன், மலர்கொடி, ஆரோக்கியம் போன்ற அழகிய பெயர்களிலேயே இஸ்லாமியராக வாழலாம். நமது இந்தியாவில் இந்து பெயரிலேயே தொடர்ந்தால் அடுத்து 'என்ன சாதி?' என்ற கேள்வி பிறக்கும். எனவே தான் இஸ்லாமியராக மாறியவுடன் அவரது பெயரை அரபியில் வைத்துக் கொள்கின்றனர் இஸ்லாமியர். அன்பழகன் சொல்வது போல் அரசு கெஜட்டில் இந்துவாக பதிந்து விட்டு இந்து பெயரிலேயே இஸ்லாத்தை கடை பிடித்தால் அவர்களை எப்படி மோடியால் தடுக்க முடியும்? 130 கோடி மக்களின் வணக்க வழிபாடுகளை கண்காணிக்க ரகசிய அலுவலர்களை நியமிப்பாரா? எனவே குழப்பத்தை தவிர இந்த சட்டத்தால் இந்திய அரசுக்கு ஒரு பலனும் விளையப் போவதில்லை. இந்துத்வாவாதிகள் தங்கள் லட்சியத்தில் எந்நாளும் வெற்றிப் பெறப் போவதுமில்லை.
---------------------------------------------------------
அல்லாஹ் கூறுகிறான் :
நபியே! நீர் கூறும்: ‘உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்.
(அல்-குர்ஆன் 3:29)
‘நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.


2 comments:

Dr.Anburaj said...

குடிஉரிமை வழங்கும் சட்டம் இந்திய பிரஜைகள் சம்பந்தப்பட்டது அல்ல. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வரும் மக்கள் குறித்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய முஸ்லீம்கள் கருத்து தெரிவிப்பது ஆதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.
01.பாக்கிஸ்தான் முஸ்லீம்களும் இந்திய முஸ்லீமும் சமம் அல்ல. இந்திய முஸ்லீம்கள் பாக்.முஸ்லீம்கள் மீது பாசம் கொள்வது தவறு. இந்திய முஸ்லீம்கள் பாக்.முஸ்லீம்கள் ரோகிகோ முஸ்லீம்களை நேசிப்போம் என்றால் அதற்கு இந்திய அரசு இந்தியாவில் அவர்களுக்கு குடியரிமை வழங்க மறுப்பது நியாயம்தான்.பாக் முஸ்லீம்களுக்கு இநதியாவில் குடியுரிமை வழங்க முடியாது.வழங்கக் கூடாது.அது நாசமாக்கிவிடும்.
02.தலாக் சட்டம் ஒழித்தது முஸ்லீம்களுக்கு நன்மை.செப்.23 2017 கட்டுரைபடிக்க.
03.காஷ்மீா் பிரச்சனை முஸ்லீம்கள் சம்பந்தப்பட்டது அல்ல. அங்கும் இந்துக்கள் நிறைய போ் இருக்கின்றார்கள். அவர்கள் ஆதரிக்கின்றார்கள். 370 ரத்து நிரந்தரமானது. எந்த குதி குதித்தாலும் இறந்த பிணம் உயிா்த்தெழாது.
04.முகலாயர்கள் ஆட்சியில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு மசுதி ஆக்கப்பட்டது உண்மை. குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஆலயங்கள் இன்னும் சில முஸ்லீம்களிடமிருந்து மிட்கப்படும். அது மத படுகொலைக்கு ஆளான இந்துக்களுக்கு செய்யும் நிவாரணம்.
---------------------------------------------------------
இந்தியாவில் இந்து மக்களுக்கு பிரிவினையின் சோக வரலாறு - இந்துக்கள் பட்ட துன்பங்கள் தெரியாது.நாட்டு மக்களுக்கு -இந்துக்களுக்கு பாக்கிஸ்தான் பிரிவினை அதற்கு பின்னும் முஸ்லீம்களால் இந்துக்கள் அடைந்த துயரம் ஆகியவைகளை கிண்டி கிளறிவிட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடா்ந்து முஸ்லீம்கள் போராட போராட ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்துவிற்கும் இந்த கொடுமை கொண்டு செல்லப்படும்.

அது முஸ்லீம்களுக்கு அதிக நன்மையை தருமா ? தீமையை தருமா ?
முடிவு முஸ்லீம்கள் கையில்.
அடக்கம் அமரருள் உய்க்கும். அடங்காமை .........

வாழ்ந்து பாருங்கள்.அனுபவித்துப் பாருங்கள்.

Dr.Anburaj said...

குடிஉரிமை வழங்கும் சட்டம் இந்திய பிரஜைகள் சம்பந்தப்பட்டது அல்ல. வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வரும் மக்கள் குறித்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
01.)பாக்கிஸ்தான் முஸ்லீம்களும் இந்திய முஸ்லீமும் சமம் அல்ல. இந்திய முஸ்லீம்கள் பாக்.முஸ்லீம்கள் மீது பாசம் கொள்வது தவறு. இந்திய முஸ்லீம்கள் பாக்.முஸ்லீம்கள் ரோகிகோ முஸ்லீம்களை நேசிப்போம் என்றால் அதற்கு இந்திய அரசு இந்தியாவில் அவர்களுக்கு குடியரிமை வழங்க மறுப்பது நியாயம்தான்.பாக் முஸ்லீம்களுக்கு இநதியாவில் குடியுரிமை வழங்க முடியாது.வழங்கக் கூடாது.
---------------------------------------------------------
இந்தியாவில் மக்களுக்கு பிரிவினையின் சோக வரலாறு - இந்துக்கள் பட்ட துன்பங்கள் தெரியாது.நாட்டு மக்களுக்கு -இந்துக்களுக்கு பாக்கிஸ்தான் பிரிவினை அதற்கு பின்னும் முஸ்லீம்களால் இந்துக்கள் அடைந்த துயரம் ஆகியவைகளை கிண்டி கிளறிவிட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடா்ந்து முஸ்லீம்கள் போராட போராட ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்துவிற்கும் இந்த கொடுமை கொண்டு செல்லப்படும். அது முஸ்லீம்களுக்கு அதிக நன்மையை தருமா ? தீமையை தருமா ?
முடிவு முஸ்லீம்கையில்.