Followers

Wednesday, January 15, 2020

சவுக்கு சங்கரின் அடுக்கடுக்கான கேள்விகள்! பதில் சொல்லுமா மத்திய அரசு?

சவுக்கு சங்கரின் அடுக்கடுக்கான கேள்விகள்! பதில் சொல்லுமா மத்திய அரசு?
2014 க்கு பிறகு பாஜக ஆட்சியில் பிடிபட்ட அதாவது வெடி குண்டு, டெட்டணேட்டர்கள் போன்ற வெடிபொருள்கள் வைத்திருந்ததாக கைது செய்யபட்டவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கள் கிடையாது. ஆனால் NIA ரிப்போர்ட்டில் ஒரு சிம்கார்டு வைத்திருந்தாலும் அது முஸ்லிம் தீவிரவாதி என்று பொருள்படுத்தபடுகிறது.
மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யாசிங்கை எம்பியாக்கி அவரை பதுகாப்பு கவுன்ஸில் உறுப்பினராகவும் ஆக்குவது எந்த வகை தேச பாதுகாப்பு? கோட்சேவை தேச பிதா என்றும் தைரியமாக பாராளுமன்றத்தில் சொல்கிறார். இதெல்லாம் தேச விரோத செயல்கள் இல்லையா?
தீவிரவாத முகாம் தமிழகத்தில் செயல்படுகிறது என்று பொன் ராதா கிருஷ்ணன் சொன்னால் அவரை கைது செய்து காவல் துறை விசாரிக்க வேண்டாமா? தீவிரவாத முகாம்களை எங்குள்ளது என்பது தெரிந்தும் அதனை மறைப்பது குற்றம் இல்லையா?
முஸ்லீம்களை தீவிரவாதிகளாக கட்டமைக்கிறதா NIA? பிரதமரும், உள் துறை மந்திரியும், சில காவல் துறையினரும் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முஸ்லிம்களின் மீது சுமத்தி இந்துக்களை வெறுப்பு கொள்ளச் செய்ய முயலுகிறார்கள். இதன் தொடர்ச்சியே கைதுகளும் பிரசாரங்களும்.


1 comment:

Dr.Anburaj said...


இராமலிங்கம் கொலை வழக்கு பயங்கரவாதம் இல்லை - தகவல் ஆச்சரியமானதாக உள்ளது.
குரான் பிரச்சாரம் செய்த முஸ்லீம்கள் நெற்றியில் திருநீறு அணிவித்ததற்காக - தவறுக்காக-

அவரது கையை முதலில் வெட்டி பின் கழுத்தையும் வெட்டினார்கள் முஸ்லீம்கள்.

இந்த சம்பவம் ஏன் முக்கியத்துவம் பெறவில்லை. கொலையாளிகள் இன்றும் கைது செய்யப்படவில்லை.
முஸ்லீம்கள் அவர்களை ஒளித்து வைத்து காப்பாற்றி வருகின்றார்களா ?
முஸ்லீம்கள் ஊருக்குள் போவதும் தகவல்கள் திரட்டுவதும் இயலாத காரியம்.
குற்றவாளிகளின் குடும்பங்கள் ராஜபோகமாக வாழ்ந்து வருவார்கள். முஸ்லீம்கள் அவர்களுக்கு உதவிகளை அள்ளி அள்ளி கொடுத்து உதவி வருவார்கள். இந்த தகவல் உண்மையா ? தெரிந்தவர்கள் பதிவிடலாம்.