Followers

Saturday, January 04, 2020

கம்பெனியின் இந்த வருட விருந்து உபசார விழா!

கம்பெனியின் இந்த வருட விருந்து உபசார விழா!
வருடா வருடம் கணக்கெடுப்பு முடிந்தவுடன் ஸ்டார் உணவகங்களில் கம்பெனி சார்பில் விருந்து கொடுப்பது வழக்கம். அந்த முறையில் இன்று (04-01-2019) மதியம் கம்பெனி சார்பில் பார்ட்டி கொடுக்கப்பட்டது. அவரவர் தங்களுக்கு விருப்பமானதை ஆர்டர் செய்து தருவித்து உணவருந்தி மகிழ்ந்தோம்.
சவுதி, சிரியா, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான் என்று இனத்தாலோ, நிறத்தாலோ, மொழியாலோ பாகுபாடு காட்டப்படாமல் அனைவரும் சரிசமமாக அமர்ந்து உணவருந்துவதை பார்க்கிறோம். இது சவுதியை பொருத்தவரை அன்றாடம் நிகழும் சர்வ சாதாரணமான நிகழ்வு.
பல கோடிக்கு சொந்தமானவரும் மாத சம்பளத்தில் வேலை பார்க்கும் நபர்களும் ஒன்றாக அமர்ந்து எந்த உயர்வு தாழ்வும் இன்றி உணவருந்தும் பக்குவத்தை கொடுத்தது எது? அது தான் இஸ்லாம்.
--------------------------
அதே நேரம் நமது இந்தியாவையும் இங்கு நினைத்துப் பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் காளிதாஸ் மகன் ஜிதேந்திரா. வயது 21. இவர் பலரால் அடித்துக் கொல்லப்படுகிறார். காரணம் என்ன?
ஆதிக்க சாதியினருக்கு சரிசமமாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதே அந்த தலித் இளைஞர் கொல்லப்பட காரணம். சாதிய வெறியானது அந்த அளவு இந்த அப்பாவி மக்களின் மேல் புகுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் அம்பேத்கார் ஒரு முறை சொன்னார் 'நான் இந்துவாக பிறந்து விட்டேன்: ஆனால் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்' என்று சபதமெடுத்தார். வருங்காலத்திலாவது நாம் சவுதியில் கண்ட இந்த சகோதரத்துவம் நமது இந்தியாவிலும் பரவிட முயற்சி எடுப்போம். சாதி வெறியை களைய முயற்சிப்போம்.
--------------------------------------
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர் அப்பணியாளைத் தம்முடன் அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் அதை சமைத்த போது அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்''
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5460


1 comment:

Dr.Anburaj said...

உயா் வருவாய் பிரிவினா்கள் ஒரு சடங்காக கூடும் இடத்தில் சாதி அந்தஸ்்து சற்று பின்னுக்கு சென்று விடும் என்பது உண்மைதான். ஆனால் இது ஒரு மாற தோற்றம்.பதவி பணம் என்று வந்து விட்டால் மனிதர்கள் வேடடை விலங்குகளாக மாறிவிடுகின்றார்களே!
அது சவுதி அரேபியாவில் இல்லையா ?
----------------------------------
சமயசார்பின்மை கொள்கை காரணமாக இந்து இளைஞர்கள் முறையான சமய சமூக கல்வி பெறாமல் காட்டுமாடுகள் போல் வளா்கின்றார்கள். இந்து சமய அறநிலையத்துறையை சமயசார்பின்மை பேசும் அரசாங்கள் நிா்வாகம் எனற பெயரில் முடக்கி வைத்துள்ளது. என்ன செய்வது எங்களுக்கு என்று நல்ல காலம் பிறக்கும். இந்த பிரச்சனையை தீர்க்க இந்து இயக்கங்கள் தீவிரமாக முயன்று வருகின்றது. விதிவிலக்காக இப்படிநடப்பது நியாயமில்லைதான்.
ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லீம் வீட்டு திருமண விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது 96 பேர் நிகழ்விடத்தில் உடல்சிதறி செத்தார்களே!
சத்தமாக கூவுங்கள் சுவனப்பிரியன்
இசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்று.

கோணல் புத்தி சுவனப்பிரியன். இந்தியாவை பகைநாடாக கருதும் அரேபிய விஷம் உடலெங்கும் எறி ரேபீஸ்நாய் போல் இருக்கும் சுவனப்பியன் வேறு என்ன நினைப்பார் .எழுதுவாா்.