'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, January 22, 2016
சாதிக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்!
1.மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 - இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை
2.அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு
3.ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்
4. செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்
5. பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 - முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
6. ஜி. சுமன், ஜனவரி 2, 2009 – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்
7. அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்
8. டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009 – முதலாம் ஆண்டு பி.டெக், சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்
9. எஸ். அமராவதி, நவ 4, 2009 – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர், சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்
10. பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்
11. புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010 – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு
12. சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 - இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ
13. பால்முகுந்த் பாரதி, மார்ச் 3, 2010 – இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், எய்ம்ஸ், புது தில்லி
14. ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 - இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
15. ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு, விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்
16. மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி
17. லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி
18. அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி
பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.
(தகவல்: இன்சைட் அறக்கட்டளை) நன்றி: ஆனந்த், அவுட்லுக்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சற்றிது கேளுங்கள் மானிடரே...!By தி. இராசகோபாலன் தினமணி நாளிதழி
தலைமுறை தலைமுறையாகப் பெரியம்மை நோய் மனித உயிர்களைக் கொள்ளைக் கொண்டு போயிற்று. ஆனால், இன்று அது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. நூற்றாண்டுகள் கணக்கில் பிளேக் நோய், மண்ணின் மைந்தர்களை அள்ளிக்கொண்டு போயிற்று.
ஆனால், அந்த நோய் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் போயிற்று. ஆனால், காலம் காலமாய் சமூகத்தைச் சீரழித்து வரும் தீண்டாமை என்னும் நோய், குற்றுயிரும் கொலையுயிருமாய்க் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கின்றதே, அதனை ஏன் கட்டோடு களைந்தெறிய முடியவில்லை?
அடிமைத்தனத்தைப் போக்க நாம் கொடுத்த விலை 15.08.1947-ஆம் ஆண்டோடு முடிந்து போயிற்று. ஆனால், சாதியிழிவைப் போக்க அன்றிலிருந்து தான், விலை கொடுக்கத் தொடங்கினோம். பல்கலைக்கழக வளாகத்திலேயே இன்னும் எத்தனை இளைஞர்களை நஞ்சூட்டிக் கொல்லப் போகிறோம்?
புறக்கணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த பீமராவிற்குக் (அம்பேத்கார்) கல்வி கொடுத்து, பதவி கொடுத்துப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்ட பரோடா சமஸ்தானத்தைப் போல், ஹைதராபாத் பல்கலைக்கழகம் செய்வதற்கு ஏன் திராணி அற்றுப் போயிற்று?
தீண்டாமை எனும் புற்றுநோயை ஒழிப்பதற்கு எத்தனை மாமனிதர்கள், கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினர். பெரியநம்பி எனும் வைணவ ஆச்சாரியர், சேரியிலிருந்து வந்த மாறனேரி நம்பியைத் தமது சீடராகவே வைத்திருந்தாரே! அந்த மாறனேரி நோய்வாய்ப்பட்டபொழுது, பெரியநம்பி சேரிக்கே சென்று, அவருடைய புண்களை எல்லாம் துடைத்து, மருந்திட்டாரே... அந்த மாறனேரி நம்பி பரமபதிப்பித்தபோது, பெரிய நம்பியே இறுதிக்கடன்களைச் செய்தாரே.. அப்பொழுதே அந்தத் தீண்டாமை நோய் செத்திருக்க வேண்டுமே!
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் ஜாதி இழிவுகள் கர்நாடகத்தில் எக்காளமிட்டுக் கொண்டிருந்தபோது, அதனைக் கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று எண்ணிய பசவர், பிஞ்ஞலன் என்ற அரசனின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர், பதவியை உதறிவிட்டுக் களப்பணியில் இறங்கினார், அந்த அக்கிரகாரத்தின் அதிசயப் பிறவி.
புத்தர் உருவாக்கிய சங்கத்தைப்போல், தியான மண்டபம் எனும் ஓர் அவையை உருவாக்கினார். அதில், மாதர சென்னையன், டோக்கர கக்கையன் எனும் தாழ்த்தப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்களைச் சீடராக்கினார். மடிவாள மாச்சையன் எனும் வண்ணாரையும், மாரய்யன் எனும் விறகு வெட்டியையும் தியான மண்டபத்தின் அங்கத்தினர் ஆக்கினார்.
பக்கம் -2
சமூகத்தில் நிலவிய பேதாபேதங்களை ஆணிவேரிலிருந்து சல்லிவேர் வரை களைந்தெறிய வேண்டும் என்பதற்காக அந்தணர் குலத்தில் பிறந்த அவர், தம்மைத் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் எனச் சொல்லிக் கொண்டார்.
பக்தி, நற்குணம் முதலியவற்றைக் கீழ்க்குலத்தவரிடம் இருந்தே கற்றுக் கொள்கிறேன். உயர்குலத்தில் பிறந்தது என் தலைவிதி என்று அறிவித்துக் கொண்டார். என்றாலும், இன்றும் பிகாரில் ஆதிவாசிகள் செய்யாத குற்றத்திற்குத் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறைச்சாலைகளில், துஞ்சி மடிகின்றார்களே!
கேரளத்திலே தொடுவதற்கு மட்டுமன்றி, பார்வைக்கும் தீண்டாமை இருந்த சூழலில் சுவாமி விவேகானந்தர் அங்கு செல்ல நேர்ந்தது. கேரளத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தீண்டாமையைக் கண்டு வெகுண்ட சுவாமிஜி, இந்தியா முழுமையும் தீண்டாமை இருக்கிறது. மற்ற மற்ற இடங்களில் தீண்டாமையைக் காலில் விலங்குகளாக அணிந்திருக்கின்றனர்.
ஆனால், கேரளத்தில் மட்டும் அதனைக் கழுத்தில் நெக்லஸாக அணிந்து அழகு பார்க்கிறார்கள். இது ஓர் மனநோயாளிகளின் கூடாரம் எனக் கர்ஜித்தார். பின்பு நாராயண குரு போன்றவர்களின் தொண்டால், அந்நோயின் வேகம் குறைய ஆரம்பித்தது.
15.01.1934-இல் பிகாரில் ஒரு பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. அதுவரையில் இந்தத் தேசம் கண்டிராத சேதம், பேரழிவு. பண்டித நேருவும், பாபு இராஜேந்திர பிரசாத்தும் பம்பரமாய்ச் சுழன்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மகாத்மா காந்தியடிகள், தீண்டாதவர்கள் மீது நாம் அனுசரிக்கும் பாவத்திற்குத் தண்டனையாகக் கடவுள் அனுப்பி வைத்த சீற்றமே இப்பூகம்பம் எனச் "சற்றிது கேளுங்கள் மானிடரே' எனப் பகிரங்க அறிக்கை விடுத்தார்.
1924-ஆம் ஆண்டுச் சூழலில் வைக்கத்தில் மகாதேவர் கோயிலுக்குப் போகும் பாதைகளில் புறக்கணிக்கப்பட்ட இனத்தார், யாரும் நடந்து செல்லக்கூடாது எனும் விதிமுறை இருந்தது. அக்கோயிலுக்குப் பக்கத்தில் தான் நீதிமன்றம் இருந்தது. மாதவன் என்ற புறக்கணிக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த வழக்குரைஞர் அந்தப் பாதையின் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டும். வழக்கு அதி அவசரமான வழக்கு.
செய்தியைக் கேள்விப்பட்ட ஈரோட்டுப் பெரியார் வைக்கத்திற்கு விரைகிறார். மாதவன் என்ற இளைஞன் அந்தப் பாதையில் நடந்துதானே செல்லக்கூடாது. இதோ நான் அவனைத் தோளில் தூக்கிக்கொண்டுபோய் வழக்கு மன்றத்தில் விடுகிறேன் பார் என்று தம் தோளில் அவனைச் சுமந்து சென்றார்.
பெரியாரின் விவேகத்தைப் பாராட்டியத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள், அவரை வைக்கம் வீரர் என்று நவசக்தியில் பாராட்டி எழுதினார். இந்தப் பாடத்தை ஹைதராபாத் பல்கலைக்கழகம் கற்பிக்கவில்லையா அல்லது கற்கவில்லையா?
கேரளத்தில் திவானாக இருந்த ஸர்.சி.பி. இராமசாமி ஐயர், அங்கு ஆலயப் பிரவேச சட்டம் வருவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். அவர் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தை இங்கே சுட்டலாம்.
அவர் வழக்குமன்றத்திற்குப் புறப்படும்பொழுது, அவர் வீட்டு நுழைவு வாசலில் ஓர் இளைஞர் கைகட்டி, தலை தாழ்த்தி, கூனிக்குறுகி நின்றார். ஸர்.சி.பி. அவனை உற்றுப் பார்ப்பதற்குள் மகிழுந்து கடந்து போய்விட்டது. மறுநாளும் அந்த வாலிபர் மகிழுந்து புறப்படும்போது, நுழைவுவாயிலில் தென்பட்டார். ஸர்.சி.பி. காரை நிறுத்தச் சொல்லி, அவரை விசாரித்தார். அவர் சொன்ன பதில் ஸர்.சி.பி.யைத் திடுக்கிடச் செய்தது.
அந்த இளைஞர் சொன்ன பதில்: ஐயா நான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். ஜாதி இந்துக்கள் வீட்டில் நுழைய அச்சப்பட்டு, வாசலிலேயே நிற்கிறேன். என்னை ஜுனியர் வழக்கறிஞராகச் சேர்க்க, எந்த மூத்த வழக்கறிஞரும் முன்வரவில்லை. என் ஜாதியினரும் என்னை ஏற்க மறுக்கின்றார்கள். தாங்கள் சாதி வேறுபாடு பார்க்காமல் ஜுனியர்களைச் சேர்ப்பவர் என்பதைக் கேள்விப்பட்டுத்தான் வந்தேன் என்றார். ஸர்.சி.பி. அந்த இளைஞரை ஜுனியராக மட்டுமல்லாமல், தன் குடும்பத்தில் ஒருவராகவே ஆக்கிக் கொண்டார்.
நீதித்துறை வரலாற்றில் ஒரு மூத்த வழக்கறிஞர், ஒரு தலித் இளைஞரை ஜுனியராகச் சேர்த்துக் கொண்டது அதுவே முதல்முறை. அத்துடன், ஸர்.சி.பி. காலை உணவை குமாஸ்தா, தட்டச்சர், சுருக்கெழுத்தாளர், ஜுனியர்கள், பணியாளர்கள் என எல்லோருடனும் சரிசமமாக அமர்ந்துதான் உட்கொள்வார்.
ஒருநாள் காலை உணவின்போது, அந்தப் புதிதாக வந்த ஜுனியர் எங்கே என்று கேட்டார் ஸர்.சி.பி. அவர் கூச்சப்பட்டு வெளியில் நிற்பதாக மற்றவர்கள் சொன்னார்கள். உடனே அவரை இங்கே அழைத்து வாருங்கள் என்று சொல்லி, நடுக்கூடத்தில் உட்கார வைத்த பிறகுதான், ஸர்.சி.பி. உணவு உண்டார். அந்த இளைஞர்தான் பிற்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் பரிணமித்த சிவராஜ்.
சிவராஜோடு சமபந்தி போஜனம் செய்தமைக்காகவும், விடுதலைப் போராட்ட வீரர்களான அலி சகோதரர்களை நடு வீட்டில் வைத்து உபசரித்தமைக்காகவும், குஞ்சு ராமர் என்ற மலையாளத் தாழ்த்தப்பட்டவரை ஆயுள் பரியந்தம் வைத்துக் காப்பாற்றியமைக்காகவும், சமூகத்தார் ஸர்.சி.பி.யின் குடும்பத்தை விலக்கி வைத்தார்கள். அவர்கள் வீட்டிற்கு அர்ச்சகர்கள் வந்து பூசை செய்வதற்கு மறுத்தார்கள்.
ஸர்.சி.பி.யினுடைய தாயார் ரங்கம்மாள் காஞ்சிபுரம் சென்று கிட்டா என்ற அர்ச்சகரை அழைத்து வந்து, தம் மகனுக்கு பூஜை புனஸ்காரங்களைக் கற்பித்தார். இவற்றை எல்லாம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் படித்திருந்தால், ரோஹித் என்ற மாணவருடைய ஆராய்ச்சிக்கு, ஒரு மேற்பார்வையாளரை நியமித்திருப்பார்கள்.
இத்தனை மாமனிதர்களும் மகான்களும் புறக்கணிக்கப்பட்ட மக்களைக் கைகொடுத்துத் தூக்கிவிட்ட பிறகும், நந்தனார்கள் நஞ்சருந்தி சாகின்றார்கள் - தண்டவாளத்தில் துண்டு துண்டாகக் கிடக்கின்றார்கள் என்றால், என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
வட இந்தியாவில் பார்சி என்ற இனத்தினர் இன்று வணிகத்திலும், நீதித்துறையிலும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் துருக்கியிலிருந்து விரட்டப்பட்டவர்கள். அவர்கள் நேரே மராட்டிய மன்னனை அணுகி, மராட்டியத்தில் தங்க அனுமதி வேண்டினர். அதற்கு மராட்டிய மன்னர் ஏற்கெனவே இங்கு வாழ்கின்ற மக்களுக்கு இடமில்லை என்பதை உணர்த்துவதற்காக ஓர் உத்தியைக் கையாண்டார்.
ஒரு பெரிய குவளை நிறைய பாலை நிரப்பி, அந்தப் பார்சிக் கூட்டத்திற்கு முன்னர் வைத்தார். பார்சிகள் இஸ்ரேலியரைப் போல் அறிவார்ந்த இனத்தினர். அதனால் அப்பார்சிக் கூட்டத்தின் தலைவன், தன் மடியிலிருந்து ஒரு கை சர்க்கரையை அள்ளி, அந்தப் பால்குவளையில் இட்டான். அச் சர்க்கரை, ஒரு சொட்டுப் பால் நிரம்பி வழியாமல், பாலில் கரைந்துவிட்டது.
அதன் பொருள்: பார்சியாகிய நாங்கள் மராட்டியரோடு கலந்துவிடுவோம். எங்களால் ஒரு பிரச்னையும் இருக்காது என்பதாகும். மன்னர் அக்கூட்டத்தை நாட்டிற்குள் செல்ல அனுமதித்துவிட்டார்.
தமிழக அரசும் சமத்துவபுரங்களைக் கட்டிக் கொடுத்ததன் காரணம், புறக்கணிக்கப்பட்ட மக்கள் மூன்று வருணங்களோடும் கலந்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆராய்ச்சி செய்வதற்காகச் சென்ற மாணவன், தேசத்துரோக வழக்கில் தூக்குக் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவானேன்? புறக்கணிக்கப்பட்ட மக்களைப் பறையன் - பள்ளன் எனச் சொல்லி, யாராவது திட்டினால் அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவு, தயவு தாட்சண்யமின்றி உள்ளே தள்ளிவிடும். அதிலும், புதிதாக வந்திருக்கும் வன்கொடுமைச் சட்டத்திலிருந்து தூற்றியவன் தப்பிக்கவே முடியாது.
அந்தச் சொற்களைப் புறக்கணிக்கப்பட்ட மக்களிலேயே சிலர், தங்கள் பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்வது அநியாயம் அல்லவா? வன்கொடுமைச் சட்டம் குற்றவாளிகளைத் தண்டிப்பற்குப் பதிலாக எத்தனை முறை நிரபராதிகளைத் தண்டித்திருக்கிறது தெரியுமா?
புறக்கணிக்கப்பட்ட மக்கள் கிடைத்திருக்கின்ற ஈடேற்றங்களை எண்ணித் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமே தவிர, எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் வஞ்சிக்கப்பட்டதற்காகத் தலைமுறைக் கோபம் எனக்கூறி, கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுரண்டிப் பார்ப்பது, அபாயகரமான செயல் ஆகும்.
தீண்டாமை என்பது இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தி. கைப்பிடி இல்லாத கத்தி. அந்தக் கத்தியைக் கையில் எடுப்பவனும் வெட்டுப்படுவான். யார் மேல் எறியப்படுகின்றதோ அவனும் துண்டிக்கப்படுவான். எனவே, கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டுவோம்.
இழிவு கொண்ட மனிதர் என்பது இந்தியாவில் இல்லையே எனும் மகாகவி பாரதியின்
வாக்கினை மெய்ப்பட வைப்போம்.
சாதிக் கொடுமைகளை திருத்த இந்து சமூகம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக முயன்று வருகின்றது.வெற்றியும் பெற்று வருகின்றது. நோய்கள் வந்து கொண்டேயிருக்கின்றது.மருந்துகளும் வந்து கொண்டேயிருக்ின்றது. ஆஸ்பத்திாிகளின் எண்ணிக்கை மருத்தவ உபகரணங்கள் ..... தொல்லைகள் குறையவில்லை. மனித முயற்சி தொடா்கின்றது. இந்து சமூகம் ஒரு உயிா் உள்ள அமிா்த சமூகம். உயா்ந்த வாழ்வியல் தத்துசங்களை அது முன்னிலைப்படுத்துபதில் ஒரு போதும் தளா்ந்து போனதில்லை. அரேபிய அடிமை சுவனப்பிாியன் அறிந்து கொள்ள இக்கட்டுரை உதவும்
ஆராய்ச்சி செய்வதற்காகச் சென்ற மாணவன், தேசத்துரோக வழக்கில் தூக்குக்
தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்துவானேன்? பல்கலைக்கழக
ஒழுங்கு நடவடிக்கை குழு இவரது மேல் முறையீட்டை ரத்து செய்து விட்டது.
இவரிடம் தகுதியற்ற செயல்கள் நிறைய இருக்கும் போது அதையெல்லாம் மறைத்து
விட்டு ”தலீத் ” மாணவர் என்று இவரை அடையாயப்படுத்துவதில் என்ன நியாயம்
உள்ளது ????
Post a Comment