ஆறு வயதோ அல்லது ஏழு வயதோ இருக்கும் அந்த சிறுவனுக்கு இருக்கும் உணர்வு 60 வயதை தாண்டிய அந்த முதியருக்கு இல்லை. கைலியை வரிந...
Posted by Nazeer Ahamed on Wednesday, January 27, 2016
ஆறு வயதோ அல்லது ஏழு வயதோ இருக்கும் அந்த சிறுவனுக்கு இருக்கும் உணர்வு 60 வயதை தாண்டிய அந்த முதியருக்கு இல்லை. கைலியை வரிந்து கட்டிக் கொண்டு 'யா முஹய்யதீன்'... 'யா முஹய்யதீன்' என்று பித்து பிடித்தவர் போல் அங்கும் இங்கும் அலைகிறார். இத்தனை சப்தங்களுக்கு இடையிலும் 'படைப்பினங்களை விடுத்து படைத்தவனையே வணங்குவோம்' என்று அந்த சிறுவன் இன்னும் குரலை உயர்த்துகிறான். 'அல்லாஹ் அக்பர்'
எல்லா புகழும் இறைவனுக்கே!
அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.
அல்குர்ஆன் (9:31)
9 comments:
The Muslims are not happy!
They’re not happy in Gaza.
They’re not happy in Egypt.
They’re not happy in Libya.
They’re not happy in Morocco.
They’re not happy in Iran.
They’re not happy in Iraq.
They’re not happy in Syria
They’re not happy in Southi Arabia
They’re not happy in Islamic Bangaladesh
They’re not happy in Yemen.
They’re not happy in Afghanistan.
They’re not happy in Pakistan.
They’re not happy in Syria.
They’re not happy in Lebanon.
So, where are they happy?
They’re happy in Australia.
They’re happy in England.
They’re happy in France.
They’re happy in Italy.
They’re happy in Germany.
They’re happy in Sweden.
They’re happy in the USA.
They’re happy in Norway.
They’re happy in SriLanka
They’re happy in India
They’re-Palestinians- happy in Israel
They’re happy in every country that is not Muslim.
And who do they blame?
Not Islam.
Not their leadership.
Not themselves.
THEY BLAME THE COUNTRIES THEY ARE HAPPY IN!
AND THEY WANT TO CHANGE THEM TO BE LIKE THE COUNTRY THEY CAME FROM
WHERE THEY are UNHAPPY.
December 21, 2012 at 3:11 PM அஹ்லுபைத் என்ற வலைதளத்தில் இருந்து
BBS முன்னெடுக்கவுள்ள 'நிகாப்' அல்லது 'புர்கா' பிரச்சினைக்கு அஹ்லுல்பைத் தளம் முன் வைக்கும் தீர்வு..
அஹ்லுல்பைத் என்ற இணையத்தில் நான் எழுதிய கடிதம்
படித்தேன்.பார்த்தேன்.ரசித்தேன்.களித்தேன்.நன்றி உடையில் கண்ணியம் ஆண் பெண் என்ற பேதம் இன்றி அனைவருக்கும் தேவை என்பதை நானும் கடைபிடித்து வருகின்றேன். மற்றவர்களுக்கும் சொல்லுவதுண்டு. ஆனாலும் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை முஸ்லீம் பெண்கள் பின்பற்றுவதை அவர்களின் சொந்தவிசயமாக வே முடிவு செய்கின்றேன். அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என் நினைத்தால் .... பின்பற்றட்டும். அழகான தோற்றம் கொண்ட பெண்களால் பிறர் மனதில் பாலியல் ஆசைதான் தூண்டப்படும் என்ற கருத்து தவறானது.அனைவரும் அக்கா தங்கையோடு பிறந்தவர்கள்தாம்.ஒருதாயிடம் பிறந்து பால்குடித்து வளர்ந்தவர்கள்தாம். எனது வாழிவில் ” பிரம்மச்சரியம் ” என்ற விரதத்தை 14 வயதில் ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் நூல்களை எனக்கு க்ற்றுத் தந்த ஆசிரியரின் ஆலோ சனை பேரில் ஏற்றுக் கொண்டு வாழந்து எனது வாலிப பருவத்தை கற்பு நெறி தவறாது வாழ்ந்தேன். எந்த அழகியப் பெண்ணையும் ஒருமுறைக்கு மேல் திரும்ப பார்த்தது யில்லை.பெண்களை கூர்ந்து நோக்கியது கிடையாது. மனதை அலைய விடாது புத்தங்கள் படிப்பது,அதுகுறித்து சிந்திப்பது என மனதிற்கு மனித வளத்தை ப் பெருக்கும் வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.அதுபோக ” ஓம் நமசிவாய ” என்ற ஐந்தெழுத்து மந்திரம் மனதில் நிறைந்திருக்க வேண்டும்.எனது கற்பு ஒழுக்கத்தைக் காக்க ஆசிரியர் சொன்ன ஆலோசனை இவ்வளவுதான். கடைபிடித்து வாழ்ந்து வருகின்றேன். ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ” தனது தாய்,தமக்கையார்கள், அண்ணிமார்கள்,தனது மனைவி என்று தனது உறவில்உள்ள அனைத்து பெண்களும் கற்பு நெறியில் தவறாதவர்கள் என்று நம்பும் ஒரு இளைஞன் தானும் கற்பு நெறி தவறாது வாழ முடியும் என்று நினைத்தால் பிரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும். பிரம்மச்சரிய ஒழுக்கம் கைவிடப்பட்டதனால் இந்தியா சமூக ஒற்றுமையை இழந்து ,வீழ்ந்து போனது என்று எனது உரை பிரம்மச்சரிய ஒழுக்கத்தை ஆண்கள் பேண வேண்டிய அவசியம் குறித்ததாக அமைந்தது. முஸ்லீம் சமூகத்தில் ஒழுக்கசீலர்களுக்கு பஞசம்யில்லை. பிரம்மசசரியம் தவறாத இளைஞர்கள் பலபேரை நான் அறிவேன்.
சுவாமிஜிவிவேகானந்தர்வாழ்வில் நடந்தவை …..
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும்.
இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால்
தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்)
எனதுகுறிப்பு முகம்மது அவர்கள் தனது மனைவியர்களுக்கு துறவறம் வழங்கிவிட்டார்கள்.எனவேதான் குரான் தொகுப்பு போன்ற பெருங்காரியங்களில் ஆயிசா போன்றவர்கள் ஈடுபட்டார்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
"எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ
தலை நிமிர்ந்தப்பட்டிருக்கிறதோ
எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ
எங்க உலகம் குறுகிய சுவர்களைக் கொண்டு துண்டாடப்படவில்லையோ
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ
எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்கிறதோ
எங்கே பகுத்தறிவு எனும்
வெள்ளோடை செத்த
பழக்கங்களெனும் பாலைக்கு
வழிதவறவில்லையோ
எங்கே மனம் உம்மால் என்றும்
பரந்துபடும் எண்ணங்களுக்கும்
ஆக்கத்திற்கும் அழைத்துச்
செல்லப்படுகிறதோ...
அந்த சுதந்திர சொர்க்கத்தில் இறைவா என் நாட்டை எழச் செய்"
இப்படிச் சென்னவர் ரவீந்திரநாத் தாகூர். .
பெண்களின் மீது விவேகானந்தருக்கு இருந்த பாசத்திற்கு ஒரு சம்பவம்…
பேலூர் மடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது. மடத்திற்கு அருகில் வசித்த விலைமாதர்கள் கலந்துகொள்ள வந்தனர். ஆனால் மடத்தினர் அனுமதிக்க வில்லை. அதைக் கண்ட விவேகானந்தர் தலையிட்டு, எந்தப் பெண்ணும் எனக்குத் தாய் தான். விலைமாதர் என்பதால் அனுமதி மறுப்பை ஏற்க மாட்டேன்’என்று கூறி அவர்களை அனுமதித்தார்.
மூதாட்டியின் மீது பாசம்- ஒரு சம்பவம்…
சென்னை வந்த விவேகானந்தருக்கு ரயில் நிலையத்தில் ஒரு வரவேற்பு கொடுக்கப்பட்டது. தூரத்திலிருந்து ஒரு வயதான பாட்டி சுவாமிகளைப் பார்க்க முண்டியடித்துக்கொண்டு இருந்தார். இதைக் கவனித்த விவேகானந்தர் அம்மூதாட்டியை அருகில் அழைத்தார். மூதாட்டியும், விவேகானந்தரைப் பார்த்து, ‘திருஞானசம்பந்தர் மாதிரி இருக்கியே’ என கைகளைப் பற்றிக்கொண்டார்.
அமெரிக்கத் தாய்- ஒரு சம்பவம்…
அமெரிக்காவில் விவேகானந்தரின் வசீகரத் தோற்றம், மின்னெலெனத் தெறிக்கும் பேச்சு- இவற்றால் ஈர்க்கப்பட்ட பெண், இவர் மூலமாக ஒரு குழந்தை வேண்டுமென்றாள்.
அதற்கு உடனடியாக விவேகானந்தர், ”இவ்வளவு அழகான தாயைப் பெற இந்த மகன் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்? என்னை உன் குழந்தையாக ஏற்றுக்கொள்” என்றார்.
இந்தப் பக்கம்தான் இக்கவிதைக்கு பொருத்தமான இடம்.
மறைப்பதில் அல்ல,
இயன்றவரை திறப்பதில்தான் சுதந்திரம்
என்பதாகத் திணிக்கப்படுகிறோம்!
ஆடை அணிவதில் அல்ல! ,
இயன்றவரை களைவதே நாகரிகம் என
உலராச் சலவை செய்யப்படுகிறது
நம் மூளைகள்!
குடும்பமா?
தேவையில்லை!
கட்டுக்குள் சிக்காமல்
சுதந்திரமாக சுற்றித்திரி!
எங்கும் எவரோடும் உறவு கொள்ள
உரிமையுண்டு உனக்கு
என உயர்த்திப் பிடிக்கிறார்கள்
உரிமைக் குரலென!
முன் பின் பழகாமல், திருமணமா?
கட்டுப்பெட்டித்தனம் அது!
எல்லாவற்றையும் பழகி,
கலந்து, இழந்தபின் தேர்ந்தெடு!
அதுதான் டேட்டிங் என்ற
மந்திரச்சொல் என்பதாய்
ஏற்றப்படுகிறது நம் மனங்கள் கழுவில்!
காதலின்றிக் கல்லூரிவாயில்
நுழைதலும், வெளி வருதலும்
கலாச்சார இழுக்காம்!
நாகரிகம் முன்னேற்றம் அல்லவாம்!
சினிமாக்கள் பிதற்றும்
மற்றுமொரு மாயவலை இது!
பொது வெளியில் உடை களைதல்
முன்னேற்றமல்ல!
தொலைத்து தொலைத்து விளையாட
கற்பு ஒன்றும் காற்றுக் குமிழி அல்ல!
மேலை நாடுகள்
படும் பாடுகள் நாமறிவோம்!
குடும்ப உறவுகள் இன்றி
வாழ்தலில் பலனேது?
இளமையைத் தொலைத்து,
முதுமையில் வருந்தும் நிலை
நமக்கும் வேண்டாம்.
நாம் போகப் பொருளல்ல!
காட்சிப் பொருளல்ல!
கடைச்சரக்கல்ல!
விற்பனைப் பண்டமல்ல!
என்பதை மனதில் கொண்டால்,
கழியும் ஒவ்வொரு நாளும்
பெண்கள் தினமே!
சத்தியமார்க்கம் என்ற வலைதளத்திலிருந்து நன்றியுடன்.
அழகிய, கம்பிரமான ஒரு ஆண்மகனைக் கண்டால் பெண்களுக்கும் ...... ஆசை வராதா ? வரக்கூடுமே!
ஆப்கானிஸ்தான் குறித்து தாங்கள் எழுதிய கட்டுரையை வலைதளத்திலிருந்து நீக்கிவிட்டது ஏன்?
இக்கட்டுரையை தவறு என அது நிருபிக்கும் என்ற பயமா ? அழகிய பெண்களின் கணவனைக் கொன்று பெண்களைக் கைப்பற்றும் பண்பாடு மிக்க நாட்டில் பெண்களை முழுவதும் மூடி வைத்தார்கள் என் நீங்கள் சொந்த அனுபவ பாடமாக கட்டுரை வரைந்தீர்கள். ஆனால் தாங்களே முகத்தையும் மறைக்கும் உடை பண்பாடு வேண்டும் என்கின்றீர்கள். முகம்மது அவர்கள் தனது இரண்டு மனைவியரோடு இருந்த வேளையில் ஒரு குருடர் முகம்மது அவர்களை பார்க்க வந்தார். மனைவியர் இருவரையும் உள்ளேபோக்ச் சொன்னார் ஐயா. வந்திருப்பவர் குருடர்தானே நாங்கள் இங்கேயே இருக்கக் கூடாதா? எனக் கேட்ட மனைவியருக்கு முகம்மதுவின் பதில் ” உங்களுக்கு கண் இருக்கின்றதே! எனபதுவாம். உண்மையா ? முகம் மறைய உடை அணிவது மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். கூலி வேலை செய்யும் ஒரு பெண் ஒரு பெண் மருத்துவர் ஆசிரியர் நர்ஸ் போன்றோர் தாங்கள் விரும்புவதுபோல் உடை அணிய முடியுமா?அரசு பணிகளில் முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு இந்தியாவில் வழங்கப்படுகிறது. ஆனால் நியமனத்திற்க தகுதியான முஸ்லீம் பெண்கள் கிடைப்பார்களா ?சேலை அல்லது சுடிதார் தடிமனாக துணியினால் ஆனது -கண்ணாடிபோல் இல்லாதது- தளர்வான -உடலை இறுகப்பிடிக்காத நிலையில் - அதிக பட்சம் மூடுவதாக இருந்தால் போதும் - அதுவே நல்ல உடை.
சிறை காக்கும் எவன் செய்யும் ஆண்கள்- பெண்கள் நிறை காப்பதே கற்பு
எனது கருத்துக்களை வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் நான் முன்னிருத்தும் பல கருத்துக்கள் குறித்து நேயா்கள் யாரும் கருத்து தொிவிப்பதில்லை ஏன் என்று எனக்கு புாியவில்லை. வலுவான கருத்துக்களை விவாதம் செய்ய தகுதியான வாசகா்கள் தங்களுக்கு இல்லையோ ?
அஹ்லுல்பைத் இணைத்தில் ஒரு வீடியோ உள்ளது. வெளியிடலாம்
Post a Comment