Followers

Thursday, January 07, 2016

முதியவரின் பிணத்தை தெரு வழியாக அனுமதிக்காத சாதி இந்துக்கள்!



நேற்று மயிலாடுதுறை அருகே திருநாள் கொண்டச் சேரியில் ஒரு முதியவர் இறந்து விட்டார். இறந்த முதியவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தங்கள் தெரு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. அங்கு பெரும் பதட்டம் நிலவியது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காவலர்கள் தாழ்த்தப்பட்டவர்களை விரட்டி விட்டு பிணத்தை தாங்களே வேறு மார்க்கமாக (வடுவூர் வழியாக) வேறு வழியின்றி எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு அந்த காவலர்களே சுடுகாட்டில் பிணத்தை புதைத்துள்ளனர்.

'நாமெல்லாம் இந்துக்கள்' என்று வழியும் மோடி, அமீத்ஷா, இல கணேசன், இராம கோபாலன் எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டார்கள்?

மண்ணின் மைந்தனின் பிணத்தை அவனது நாட்டு தெருக்களில் எடுத்துச் செல்வதையே அனுமதிக்காத சமூகங்களின் மத்தியில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.

7 comments:

Dr.Anburaj said...

சுவனப்பாிாியன் எனது கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்

01. சாதி இந்துக்கள் என்கினறீா்களே - அந்த மக்கள் பகவத்கீதை படித்தவா்களா ? தேவாரம் பாட படித்தவா்களா ? சுவாமி விவேகானந்தாின் ஞானதீபம் முழுவதும் கற்றுத் தோ்ந்தவா்களா ? குறைந்த பட்சம் காந்திஜியின் சத்திய சோதனையாவது படித்தவா்களா ? இன்று உலகம் போற்றும் யோகா வகுப்புகளாவது கலந்து கொண்டவா்களா ? அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் அவர்களுக்கு வாழ்க்கை, சமூகம், சமயம் சாா்ந்து எனன பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளது ?

காட்டில் பிறக்கும் மிருகங்களுக்கு தாய் தந்தை மிருகம் சில பயிற்சிகளை அளிக்கும்.

அதுகூட இன்றி அறியாமையில் ஆழந்து இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

தங்களுக்கு அறிமுகமாக தந்தை-தாய் சுழ்நிலை வழி கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு
தவறு செய்து வருகின்றாா்கள்.

சமூக சிந்தனை என்ற கதிரவன் இவர்கள் வாழ்வில் இன்னும் உதிக்கவேயில்லை.

தமிழ் இனப்போராளி கலைஞாட் கருணாநிதி எங்கே போனாா் ? சுவவீரப்பன் எங்கே போனாா் ? தமிழ்தன்மான மிகு வீரமணி எங்கே போனாா் ? அம்பேத்காா் மன்றங்கள் இயக்க தலைவா்கள் எங்கே போனா்கள் ? விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் எங்கே போனாா் ? என்று தாங்கள் கேட்க மாட்டீர்கள். கேட்டிருக்க வேண்டும்.

இந்தியாவின் எநதவொறு பிரச்சனைக்கும் அரேபிய மத நூல்களும் சித்தாங்தங்களும் தீா்வு என்பது மடத்தனம். சுற்றி ச்சுற்றி தாங்கள் அங்கேதான் வருவீா்கள் .

குரான் படிக்கும் இடங்கள் இன்று மனித இரத்தக்களறியில் முழ்கித் தவித்து வருகின்றன.
வேறுபாடுகள் பலவும் மனித இயற்கை என்ற உன்னத தத்துவத்தை இந்தியாவில் அனேக மக்கள் பின்பற்றி வருகின்றாா்கள். எனவேதான் இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் மொழி கலாச்சாரம் வாழ்க்கை முறை போன்ற ஆயிரக்கணக்கான விசயங்களில் மாறுபட்ட மக்கள் இந்துமதம் தேசீயம் தேசப்பற்று என்ற சிறு நூலில் தங்களைக் கட்டிக் கொண்டு கட்டுப்பாடுடன் வாழ்ந்து வருகின்றாா்கள்.
லிபியாவின் காவலா் பயிற்சி கல்லூாியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாாியை பயங்கரவாத காடையா்கள் மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 69 இந்துக்கள் தவறு ஷியா முஸ்லீம்கள் அல்லது சன்னி முஸ்லீம்கள் ஏதோ சிாியாவின் குடிமக்கள் - இறந்து போனா்கள்.இன்னும் கைபோனவன் கால்போனவன் கண்போனவன் எத்தனையோ ?
அனைவரும் குரான் படித்தவா்கள். அரேபிய மணி நபி திலகம் கற்றுக் கொடுத்தப்படி
5 வேளை தொழுகை செய்பவா்கள்தாம். பதான் கோட்டில் தாக்குதல் நடத்த இறந்த அனைவரும் குரான் படித்தவா்கள்.5 வேளை தொழுகை செய்பவா்கள்தாம்.
திருநாள் கொண்டச் சேரியில் உள்ள சாதி இந்துக்களை திருத்தி விடலாம் .முறையாக இந்து சமய வகுப்புக்கள் நடத்தினால் நிச்சயம் திருத்தி விடலாம்.இத்தனை மக்களுக்கு பயிற்சி அளிக்க அரசுதான் முன்வரவேண்டும்.நவீன இந்து அமைப்புகள் அவ்வளவு செல்வாக்கும் பிரபல்யமும் பெற வில்லை.ஆா்எஸஎஸ பயிற்சி வகுப்பு இப்பகுதி மக்களுக்கு அளித்தால் நிச்சயம் தாழ்த்தப்பட்ட வகுப்பினா் பிணத்தை தூக்க மேல் சாதி மக்கள் என்று குறிப்பிடப்படும் மக்கள் தோள் கொடுப்பாா்கள்.

Dr.Anburaj said...

வேதங்கள் ஒருகாலத்தில் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. எல்லோரும் கற்க வேண்டிய நூலாக வேதங்கள் இருந்தன.

வேதங்களில் வரும் சுலோகம் இது :

ஓம் யதேமாம் வாசம் கல்ணாணீமாவதானி ஜனேப்ய: I

ப்ரஹ் மராஜன்யாப்யாம் சூத்ராயசார்யாய ச ஸ்வாய சாரணாய I

ப்ரியோ தேவானாம் தக்ஷிணாயைதாதுரிஹ பூயாஸமயம் மே காம:

ஸம்ருத்யதாமுப மாதோ நமது II

யஜுர் வேதம் 26-2

மனிதர்களே, இறைவனாகிய நான்,

ப்ரஹ்மராஜன்யாப்யாம் – பிராமணர், க்ஷத்திரியர்

அரியாய – வைசியர்

சூத்ராய – சூத்திரர்

ச – இவர்களுடன்

ஸ்வயா ச -அவரவர் மனைவி, மக்கள், சேவகர்கள் முதலியோருடன்

அரணாய ச – உத்தம குணங்களோடு கூடிய மிக க்கீழானநிலையில் பிறந்தோர் ஆகவுள்ள

ஜனேப்ய: – மேற்கூறிய எல்லா மனிதர்களுக்குமாக

இஹ – இவ்வுலகில்

இமாம் – என்னால் வெளிப்படுத்தப்பட்டதும்

கல்யாணீம் – இன்பம் தருவதும் ஆகிய

வாசம் – நான்கு வேதரூபமான வாணியை

ஆவதானி – நான் உபதேசம் செய்கின்றேன். அவ்வாறே நீங்களும் நன்கு உபதேசம் செய்வீர்

தாது – தானம் செய்வோர் ஆகிய சத்சங்கத்தினர்

தேவானாம் – வித்வான்களுக்கு

தக்ஷிணாயை – தக்ஷிணை அதாவது தானம் முதலியவற்றை அளிப்பதால்

ப்ரிய: – உலகினரால் விரும்ப ப்படுகின்றவர்

பூயாஸம் – ஆவர்

மே – என்னுடைய

அயம் – இந்த

காம: – விருப்பம்

ஸம்ருத்யதாம் – சிறப்பான முறையில் மேலும்மேலும் நிறைவேறட்டும். அன்றியும்

மா – எனக்கு

அத – இந்த மறைவான சுகம்

உப நமது – காணிக்கையாக வந்து சேரட்டும். நீங்களும் இவ்வாறே செய்து இத்தகைய விருப்பம் நிறைவேறி சுகம் பெறுவீராக.

கருத்துரை : இம்மந்திரம் உபமாலங்காரம். பரமாத்மா எல்லா மனிதர்களுக்கும் உபதேசம் செய்கிறான். நான்கு வேதரூபமான நன்மைகள் நிறையச் செய்கின்ற வேதவாணியை எல்லா மனிதர்களின் நன்மைக்காக நான் உபதேசம் செய்திருக்கின்றேன். நான் விருப்பு வெறுப்பின்றி எல்லோரும் வேண்டியவனாக இருப்பதுபோல் நீங்களும் இருப்பீர். அவ்விதம் செய்வதால் உங்களுக்கு எல்லாச் செயல்களும் வெற்றி அடையும். நிறைவுறும்.

(சுவாமி தயானந்தரின் யஜுர்வேத பாஷ்யத்திலிருந்து)

இப்படி எல்லோருக்கும் அருளப்பட்டதுமான, எல்லோருக்கும் பொதுவானதுமான வேதங்கள் இடையில் ஒரு காலத்தில் வேதம் கேட்பதற்கு சூத்திரர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை இல்லை; அனுமதி இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. கேட்பதற்கே உரிமை இல்லை என்று சொல்லும்போது படிப்பதற்கு நிச்சயமாக அனுமதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்த அவலநிலையைச் சரிசெய்வதற்கு பல்வேறு இந்து சமூக சீர்திருத்த இயக்கங்கள், இந்து சமூக சீர்திருத்தவாதிகள் பாரத தேசத்தில் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தனர். ஸ்ரீராமானுஜர், சுவாமி விவேகானந்தர் என்று இந்து சமூக சீர்திருத்தப் பரம்பரை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தொடர்ந்து இந்து சமூகம் மாறுதலுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. இந்த மாறுதல்களை சில எதிர்ப்புகளோடு ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறது என்று சொல்லும்போது ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்து சமூகத்தின் பெருவாரியான ஆதரவுகளோடு ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

மறைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வேதங்கள் எல்லோருக்கும் பொதுவானதாக கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலை இந்து சமூகத்தில் தோன்றியிருக்கிறது.

நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அறிஞர், மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் என்னும் எம்.ஆர்.ஜம்புநாதன் என்பவராவார். வேதங்களோடு கடோபநிஷத்தையும், உபநிடதக் கதைகளையும் தமிழில் தந்திருக்கிறார். அவர் தமது “சதபதபிராமணம்’ என்னும் யஜுர்வேத சதபத கதைகள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூலை, ஹரிஜனப் பெருமக்களின் பாதகமலங்களில் அர்ப்பணம் செய்திருக்கிறார்.

Dr.Anburaj said...

ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயஸ்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து இவ்வேத நூலை உங்கள் பாதகமலங்களில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள்தான் இவ்வேதங்களைப் படித்து பாரதநாடு மாத்திரமில்லை, பூலோகமுழுவதும் பிரச்சாரம் செய்து மறுபடியும் தர்மஸ்தாபனம் செய்ய வேண்டும்……… இந்நாடு, பூலோகம் முழுவதும் புனிதவேதம் விரிந்து தலையோங்க நீங்களே அதற்கேற்ற கங்கையைக் கொண்டுவர முடியுமென இதை நான் உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்” என்று குறிப்பிடுகிறார்.

இதற்கான பெருமுயற்சிகளில் ஆர்யசமாஜம் முதலான இந்து சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றன. இந்த மாறுதலை இந்து சமூகம் பெருவாரியான ஆதரவோடு ஏற்றுக் கொண்டு வந்திருக்கிறது. இதன் நீட்சியாக ஸ்ரீஸ்ரீஸ்ரீதத்தாகிரி மகராஜ் ஆஸ்ரம் வேதங்களை எல்லோருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தில் மும்பை நெடுஞ்சாலை அருகில் உள்ள பர்திபூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீஸ்ரீஸ்ரீதத்தாகிரி மகராஜ் ஆஸ்ரமம். இந்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீதத்தாகிரி மகராஜ் வேத பாடசாலை இயங்கி வருகிறது. இந்த ஆஸ்ரமம் 55 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

Dr.Anburaj said...

இந்த ஆசிரமத்தை உருவாக்கியவர் ஸ்ரீதத்தாகிரி மகராஜ் அவர்கள். அவருடைய இயற்பெயர் நாகேந்தரய்யா. இவர் 1922ல் கர்நாடகா, தெலுங்கா எல்லையில் உள்ள மேடக் மாவட்டத்தில் மனூர் பகுதியில் பிறந்தார். சிறிய வயதிலேயே பல சித்தி வேலைகளை கைவரப் பெற்றவர் என்று கருதப்படுகிறது. 12வருடங்களாக தண்ணீர் மட்டுமே பருகி தபஸ்களில் ஈடுபட்டார்.

இந்த ஆசிரமத்தில் தாமாக முன்வந்து வேதபாடசாலையில் சேர்ந்து பயில விரும்புபவர்களுக்கு வேதங்கள் மற்றும் மந்திரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் அவர்கள் விரும்பினால் அர்ச்சகர்களாக ஆகலாம் என்று கூறுகிறார் அதன் தலைமை குருவாகிய சித்தேஸ்வர சுவாமிஜி அவர்கள்.
வேத பாடசாலையில் மாணவர்களாக சேர்வதற்கு மதம் மற்றும் ஜாதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இந்து மதத்தில் வழக்கமாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருந்துவருகின்றனர். அந்த மனநிலையை மாற்றுவதற்கான முயற்சியில் இந்த ஆசிரமம் இயங்கிவருகிறது.

இந்த ஆசிரமத்தில் உள்ள வேதபாடசாலையில் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மார்பள்ளி மண்டலத்தில் நார்சாப்பூர் பகுதியில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த நவீன் நாய்க் என்னும் மாணவன் வேதங்ளைப் பயின்று வருகிறான். 2015 ஏப்ரல் மாதத்தில் 14 வயதை எட்டியுள்ள நவீன் நாய்க் உயர் ஜாதி ஆதிக்கம் உள்ள இந்தத்துறையில் அர்ச்சகராகப் பணியாற்றத் தொடங்க உள்ளார்.

நவீன் நாய்க் கூறும்போது, ‘எட்டாம் வகுப்புவரை படித்துள்ளேன். நான் அர்ச்சகராக ஆக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், இந்த ஆசிரமத்துக்கு வரும்வரையில் எங்குமே என்னை அர்ச்சகராக்க எவரும் முன் வரவில்லை. ஏறக்குறைய ஓராண்டாக இந்த ஆசிரமத்தில் பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த வேதபாடசாலையில் படித்து முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் ஆசிரமத்தில் இருப்பேன்’ என்று கூறுகிறார்.

சமுதாயத்தில் மிகவும் அடித்தட்டுப் பின்னணியிலிருந்து நவீன் வந்துள்ளார். அவர் தந்தை ராஜூநாய்க் தினக்கூலித் தொழிலாளி ஆவார். என்றாவது ஒரு நாள் தன் மகன் அர்ச்சகர் ஆவான் என்பதை உறுதிபடுத்துவதற்காக அவரும் சமூக அமைப்பில் போராடி வருகிறார்.

நவீனுக்கு வேதபாடசாலையில் பயிற்றுவித்த குருவாகிய சித்தேஸ்வரா சுவாமிஜி கூறுகையில், எங்கள் மாணவர்களிலேயே மிகவும் திறமையான மாணவன் நவீன். வேகமாக வேதங்களைக் கற்றுக் கொண்டான். இந்த வேதபாடசாலையில் குறிக்கோளாக உள்ள எங்களுடைய நோக்கமெல்லாம் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான். குழந்தைப் பருவத்தில் பயில விரும்பும் எவருக்கும் மதம், ஜாதி குறுக்கிடக்கூடாது. தற்பொழுது 60 மாணவர்கள் வேத பாடசாலையில் படித்து வருகிறார்கள். வரும் கல்வி ஆண்டில் மேலும் 30 மாணவர்களை சேர்க்க உள்ளோம். ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும். வேதபாடசாலையில் நான்கு ஆண்டு காலத்துக்கு கற்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

Dr.Anburaj said...

சித்தேஸ்வரா மேலும் கூறும்போது, குழந்தைப்பருவத்திலேயே படிக்கும் ஆர்வம் உள்ளவர்களா என்பதை மட்டுமே தகுதியாக வைத்துள்ளோம். மற்றவையெல்லாம் இரண்டாம்பட்சம் தான். மனிதனிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், படிக்கவேண்டும் என்றால், அதில் என்னவிதமான பொருளாதார பயன் கிடைக்கும் என்று எண்ணி, அப்படி பொருளாதார பயன் இல்லை என்றால் படிப்பதற்கு முன் வருவதில்லை என்பதுதான்.

அதன்படியே அறிவையும் பெறுகிறான். இங்கு மதம் கற்பிக்கப்படுவதில்லை. மனித நேயம்தான் கற்பிக்கப்படுகிறது. மனிதன் எல்லோருமே இரத்தம், சதை, எலும்பு ஆகியவைகளைக் கொண்ட வர்கள் தான் என்பதைப் புரிந்து கொள்ள வைப்பது தான். எவருமே உயர்ந்தவரும் அல்லர். தாழ்ந்தவரும் அல்லர். இந்த கருத்துகளை குழந்தைகளிடையே கொண்டு சென்று, அவர்கள் வாழ்வில் என்றும் கடைசி வரையிலும் மறவாமல் இதை பின்பற்ற வேண்டும் என்றுதான் கற்பிக்கப்படுகிறது என்று கூறினார்.

வேதபாடசாலையில் கிறித்தவர் மற்றும் முசுலீம் பட்டதாரிகளும் வேதங்களைப் படிக்கும் ஆர்வத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக ஒன்றை மட்டும் நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா எப்படி மறுபடியும் எழுச்சி பெறும்? இந்த கேள்வியை சுவாமி விவேகானந்தரிடம் அவருடைய சீடர் கேட்டார்.

Dr.Anburaj said...

அதற்கு சுவாமிஜி கூறுகிறார் :’…….

இதுவரையில் பிராமணர்கள் சமயத்தைத் தங்கள் கைகளுக்குள் வைத்திருந்தார்கள்.

காலத்தின் மாறுதலுக்கு முன்னால் அவர்களால் நிற்க முடியவில்லை.

எனவே இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவருமே சமயத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்.

அவர்கள் மனத்தில், பிராமணனுக்கு எந்த அளவு சமயத்தில் உரிமை உள்ளதோ அந்த அளவு அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதை உறுதிப் படுத்துங்கள்.

நெருப்பைப் போன்று ஆற்றலைத் தரும் இந்த மந்திரத்தைச் அனைவருக்கும் கற்று கொடுத்து அனுஷ்டானத்திற்கு கொண்டு வாருங்கள்.

அதோடுகூட அவர்களுடைய வாழ்க்கைக்கு வேண்டிய தேவைகளான வியாபாரம், விவசாயம் முதலியவை பற்றியும் எளிய முறையில் சொல்லித் தாருங்கள்.

நீங்கள் இதைச் செய்யாவிட்டால் உங்கள் கல்வி நாசமாகப் போகவேண்டிய கல்வி. உங்கள் பண்பாடு நாசமாகப் போகவேண்டிய பண்பாடு.

நீங்கள் படிக்கும் வேதங்களும் வேதாந்தங்களும் நாசமாகப் போக வேண்டியவை.’

சுவாமி விவேகானந்தர் சொன்னதுதான் இந்து சமுதாயம் செய்ய வேண்டியது.

எவ்வளவு விரைவில் செய்துவிட முடியுமோ அவ்வளவு விரைவில் இந்து சமூகம் செய்ய வேண்டும்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் பாரத நாடு முழுவதும் நடைபெற வேண்டும்.

இந்த சமூக சீர்திருத்தத்தை பெருவாரியான இந்துக்கள் ஏற்று வருகிறார்கள் என்பதுதான் சற்று ஆறுதலான விஷயம். இந்த ஆஸ்ரம் போல் பாரத தேசத்தில் உள்ள எல்லா ஆஸ்ரமங்களும் மடங்களும் செயல்பட்டால் நிச்சயம் இந்து சமூகம் மேன்மை அடையும்.

ஆதாரங்கள்

1. http://www.thenewsminute.com/article/how-vedic-school-telangana-breaking-caste-and-religious-barriers

2. http://www.dattagirimahayogi.com/history/dattagiri-maharaj/

3. நூல் : சுவாமி விவேகானந்தருடன் உரையாடல்கள், விவேகானந்த கேந்திரா பிரகாசன் டிரஸ்ட், பக்.49

இந்து சமய அறநிலையத்துறையை வைத்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு இப்படி ஒரு திட்டம் இல்லையே ஏன் ?
இந்து நலன் என்று ஒருவன் பேசி விட்டால் நாடே எழுந்து அவனை மதவாதி என்று தூற்றி சாக்கடையை எறிகின்றது.என்ன கெர்டுமைடா ???

Dr.Anburaj said...

தமிழ்நாட்டில் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் ஆகியவை இப்பணிகளை அதைியாக செய்து வருகின்றது. அந்தா் யோகம்எ்னற சமய பயிற்சி திட்டத்தின் மூலம் அருமையான அந்தணா்களை உருவாக்கி வருகின்றாா்கள்.
ஸ்ரீராமகிருஷ்ண தபோவன ஸ்தாபகா்ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தா் பேலூா் ராமகிருஷ்ண மடத்தில் துறவு திட்சை பெற்று தமிழ்நாட்டில் பணியாற்ற வேண்டும்எ ன்ற விரும்பத்தின் அடிப்படையில் பேலூா் மடத்திலி இருந்து விலகி தபோவனத்தை உருவாக்ிக நடத்தி வந்தாா். ஸ்ரீமத்பகவத் கீதைக்கு உரை எழுதி மலிவு விலைளயில் வெளியிட்டாா். அப்போது கும்பகோணத்து கோணல் புத்தி பாா்ப்பனா்கள் சிலா் சித்பவானந்தருக்கு பகவத்கீதை உரை எழுத தகுதி கிடையாது என்று அறிவித்தனா். இது குறித்து சித்பவானந்தாிடம் கேட்டபோது காலம் பதில் சொல்லும் என்று அதைியானாா் . சித்பவானந்தா் எழுதிய கீதை இன்று வரை லட்சக்கணக்கி் விற்பனையாகி வருகின்றது.தமிழில் உள்ள சிறந்த உரையக மதிக்கப்படுகினறது.