பூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிடிப்பு!
போபால்(03 ஆகஸ்ட் 2017):
மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிவலிங்க பூஜை செய்ய மறுத்த
முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைக்குள் பூட்டிவைத்து கைதிகள் போல் நடத்தப்பட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போபால் கமலா நேரு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சிவலிங்க பூஜை
நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மாணவிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளி
முதல்வர் நிஷா கமரானி கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பயிலும் சுமார் 100 முஸ்லிம்
மாணவிகள் இதுபோன்ற பூஜை செய்வது இஸ்லாமிய
கொள்கைக்கு எதிரானது என்பதால் அதை செய்யமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இதனால்
முஸ்லிம் மாணவிகள் அனைவரும் வகுப்பறைக்குள் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு
பின்பு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத பள்ளி ஆசிரியை
தெரிவிக்கையில், "மத்திய
பிரதேசத்தில் சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனால்
அனைத்து மதத்தினரும் பயிலும் அரசு பள்ளிகளில் இதுபோன்ற ஒரு சார்பு மத பூஜைகள்
நடத்தப்படுவது மாணவர்களுக்கிடையே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்" என்றார்.
நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க காவிகள்
இந்துத்வாவை அனைத்து மட்டத்திலும் புகுத்த பல வழிகளிலும் முயல்கிறார்கள். பெரும்பான்மை
இந்து மக்களாலேயே சனாதன தர்மம் ஒதுக்கி வைக்கப்பட்டு நாத்திகர்களாக வாழ்கின்றனர். உண்மை
இவ்வாறு இருக்க இந்த உலுத்துப் போன பார்பனீய பழக்கங்களை முஸ்லிம் மாணவிகள் மேல் திணித்து
எதனை சாதிக்கப் பொகிறது பிஜேபி. இதனால் இந்தியாவின் வறுமை ஒழிந்து விடுமா? இவ்வாறு கட்டாயப்படுத்துவதால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெகுண்டெழும்
நாள் வெகு தொலைவில் இல்லை.
Muslim girl students were locked
up in a classroom after they denied participating in the ‘religious Shivlings
aka Shiva Lingams making workshop’.
No comments:
Post a Comment