Followers

Monday, August 07, 2017

கட்டாய மதமாற்றம் என்பது இதுதான்!

கட்டாய மதமாற்றம் என்பது இதுதான்!

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் உதுமா கிராமத்தை சேர்ந்தவர் ஆதிரா. கல்லூரி மாணவியான இவருக்கு 21 வயதாகிறது. கல்லூரியில் படிக்கும் காலங்களில் இஸ்லாம் அறிமுகமாயுள்ளது. தோழிகளின் உதவியோடு குர்ஆனை ஆய்வு செய்துள்ளார். இஸ்லாமிய மார்க்கம் பிடித்துப் போகவே வீட்டை விட்டு சென்ற ஜூலை 10க்கு வெளியேறி கண்ணூர் சென்றுள்ளார். தோழிகளின் வீட்டில் இருந்து கொண்டு அங்கு இஸ்லாமிய மார்க்கத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஆனால் இவரின் தந்தையோ தனது மகள் ஐஎஸ்ஐஎஸ் இல் சேர்ந்து விட்டதாகவும் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு காவல் நிலையம் வந்த ஆதிரா 'தனது பெயர் ஆயிஷா என்றும் தான் விரும்பியே இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டேன்' என்றும் 15 பக்கத்துக்கு விளக்க கடிதமும் எழுதிக் கொடுத்துள்ளார்.


'நான் எனது தாய் தந்தையரை இன்றும் மதிக்கிறேன். அவர்கள் என்னை இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எனது வழிபாடுகளில் குறிக்கிடாமல் இருந்தால் அவர்களுடனேயே வாழ ஆசைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் ஆயிஷாவை தாய் தந்தையரோடு அனுப்பி வைத்துள்ளது. அவரது இறை வழிபாட்டுக்கு எந்த குறிக்கீடும் செய்யக் கூடாது என்று கட்டளையும் பிறப்பித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தந்தை சில நாட்கள் கழித்து ஆயிஷாவை ஆர்எஸ்எஸ் பயிற்சி நடக்கும் குழுமத்தில் கொண்டு விட்டுள்ளார். இனி அந்தப் பெண் உயிரோடு திரும்புவாரா என்பதே சந்தேகம்தான். ஒரு மனிதனின் மனம் மாறி விட்டால் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனால் ஒரு பலனும் இல்லை. ஆதிராவின் பெற்றோர் செய்வதுதான் கட்டாய மதமாற்றம். இதனால் ஒரு பலனும் இல்லை என்பதை அந்த பெற்றோர்கள் வெகு விரைவில் உணர்வார்கள்.


6 comments:

Dr.Anburaj said...


பெற்றோாின் அனுமதியின்றி மதம் மாற அனுமதியில்லை. ஒரு முஸ்லீம் தன் மகள் இந்துவாக வாழ அனுமதிக்க மாட்டான்.கொலை செய்துவிடுவான். ஆனால் ஒரு இந்து பெண் தன் தாய்க்கும் தந்தைக்கும் அநீதி செய்வதை எப்படி தங்களால் நியாயப்படுத்த முடிகின்றது ? தந்தையை தாயை பேணும் (அவ)லட்சணம் இதுதானோ ? இசுலாம் என்பது குடும்பதை்தை கூடுகளை கலைக்கும் இயக்கம்தானோ ? மதம் மாற்றம் முட்டாள்தனமாகது. அரேபியனாக அரேபிய பெயா்தாங்கி அரேபிய அடிமையாக வாழ்வது இந்த பெண்ணுக்கு அவமானம் ஆகும்.இந்த முட்டாளுக்கு இந்த சிறிய உண்மை விளங்கவில்லையே.
01.தேசப்பிதா காந்தி அடிகள் மதம் மாற்றத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றாா்.அந்த வகையில் பாா்த்தால் தேசப்பிதா காந்திக்கு மாறு செய்துள்ளாாள் இப் பெண்.
இவளது புாிதல் ஆபத்தானது. விஷத்தை பால்என்று சொல்லும் இவளது அறிவு முட்டாள்தனமானது. உலகத்தில் குரான் இருக்கும் இடமெல்லாம் பாழாகிக் இரத்தக்களறியில் கிடப்பதுகண்டு மனம் வெம்பி அதை விட்டு நீக்கியிருக்க வேண்டும். யுத்தத்தில் கைபற்றிய எத்தனை பெண்களை வேண்டுமானாலும் செக்ஸ்அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள்என்ற வசனம் இந்த பெண்ணுக்கு ஏன் எாிச்சலையும் வெறுப்பையும் உருவாக்கவவில்லை.இவள் பேதை.வெகுளி.
இந்த பெணணை மீண்டும் தாய்மதம் திருப்பியே ஆக வேண்டும். வாழ்க அவளது பெற்றோா்கள்.

Dr.Anburaj said...



சுத்த சைவம், பூர்வ சைவம் , மார்க்க சைவம் ,ஆதி சைவம் , வீர சைவம் என சைவம் பல வகைப் பட்டு நின்ற கால கட்டத்தில் வீரசைவத்தின் கொள்கைகள் வசனகாரர்களைக் கவர்ந்தன. வீர சைவம் என்பது இட்ட லிங்கத்தை வழிபாடு செய்வதாகும்.குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட லிங்கத்தை உடலின் மீது கட்டிக் கொள்வது இவர்கள் கொள்கையாகும்.இந்த லிங்கத்தை ஒரு போதும் இவர்கள் பிரிவதில்லை.மார்பில் சிவலிங்கத்தை அணிந்ததால் இவர்கள் “லிங்காயத் “என்றும் அழைக்கப்படுகின்றனர். [இன்றும் கூட கர்நாடகத்தில் ’லிங்காயத் ’ ஒரு பெரிய பிரிவாக வாழ்வது குறிப்பிடத் தக்கது ] உபதேசம் தருபவர் குருவாகவும்,அவர் அளிக்கும் சிவ அடையாளப் பொருள் லிங்கமாகவும் உள்ளது.அவர்கள் தாங்கள் அணிந் திருக்கும் லிங்கத்தை மட்டுமே வழிபடுகின்றனர்.இது முதியவர்களிடையே இன்றும் காணப்படுகிறது.வர்ணாசிரம முறையிலான சாதி வேறுபாடுகளை வீர சைவம் ஏற்கவில்லை. சிவ தீட்சை பெற்ற பிறகு அனைவரும் ஒன்றா கவே கருதப்பட்டனர். அறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். வீரசைவத்தினர் ’சரணர்” என்றும் அழைக்கப் பட்டனர்.சாதி ,பொருளாதார வேறபாடுகளின்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்.

பெண்கள் ஒடுக்கப்பட்டும் ,ஒதுக்கப்பட்டும் வாழ்ந்த காலகட்டதில் வசனகாரர்கள் வீரசைவக் கொள்கையின் படி பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கிடைக்கும்படி செய்யப் போராடியிருக்கின்றனர். ’பெண் என்பவள் மாயை அல்லள் ;அவள் உண்மையில் கபிலசித்த மல்லிகார் ஜுனன் ’என்று சித்தராமய்யன் கூறுகிறான்.பொன்,பெண், மண் ஆகியவை மாயை அல்ல.மனதில் உள்ள ஆசையே மாயை என்பது அல்லமா பிரபுவின் கருத்தாகும்.பார்ப்பதற்கு எப்படி இரு கண்கள் தேவையோ அது போலவே வாழ்வதற்கு ஆண்-பெண் என்ற இரு கண்கள் வேண்டும் என்றும் அல்லமா வின் வசனம் அமைகிறது.வீரசைவ நெறி எந்த இடத்திலும் பெண்ணை ஒதுக்கவில்லை. வீரசைவர்களை சமூக சமயப் புரட்சியாளர்கள் என்று சொல்லலாம் வீர சைவத்தின் இந்தப் பார்வை பெண்கள் தங்கள் அனுபவங் களை வசனங்களாக்க உதவியது.

கொள்கைகளால் கவரப் பட்ட வீர சைவர்கள் சமுதாய நலனுக் காகவும்,மக்களின் வாழ்க்கையை அர்த்தம் உடையதாக்கும் வழியிலும் தாம் சொல்ல வந்த கருத்துக்களை ’வசனங்கள்”என்ற வடிவில் வெளிப்படுத்தினர். இந்த வசன இலக்கிய [வசன சாகித்யா ] வடிவம் அறிமுகமாவதற்கு முன்பு வரை மிகக் கடுமையான நடையில் அமைந்த இலக்கியம் தான் சிறப்புடைய தாக இருக்கும் என்பது அன்றைய சித்தாந்தமாக இருந்திருக்கிறது.பன்னிரண் டாம் நூற்றாண்டு வரை அமைந்த கன்னட இலக்கியங்களில் பழங்கன்னடச் சொற்களின் ஆளுமையே இருந்தது.சாதாரணக் கல்வியறிவுடையவர்,பாமரர் ஆகியோரைச் சேராததாகவே ஒரு கால கட்ட இலக்கியங்கள் இருந்திருக் கின்றன. இந்தப் போக்கை மாற்றிய தன்மை வசனகாரர்களையே சேரும். வசனம் என்பது உரைநடை மற்றும் பாடல் என்ற இரணடிற்கும் இடைப் பட்ட நடை கொண் டது. சொல்வதைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் , நேரடியாகவும் எல்லோருக்கும் பொருள் புரியும்படி சொல்வதாகும்.பத்து –பன்னிரண்டு என்ற இரண்டு நூற்றாண்டுகளில் வசன இலக்கியத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் வசனங்கள் உள்ளன.வசனகாரர்கள் சிவனைப் பற்றிப் பேசுவார்கள் சிவனோடு பேசுவார்கள் என்று ஏ.கே.ராமனுஜம் சொல்வது குறிப்பிடத் தக்கது. எனவே அறிவை வளர்க்கும் முயற்சியை விட மனதை, உண்மையை அறியும் முயற்சியை வசனங்கள் வெளிப்படுத்தின .அதுவே அவற்றின் தனிச் சிறப்பாகும். வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.தேவரதாசிம்மையா அல்லமாபிரபு ,சித்தராமய்யன், பசவண்ணா, அக்கம்மா, ஆகியோர் வசனகாரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

Dr.Anburaj said...

வீரசைவர்கள் மக்கள் மத்தியில் பரப்ப முயன்ற கொள்கைகளில் மிகச் சிறந்ததாக அமைவது ’காயகவே கைலாசா”. ’ காயகம் என்பதற்கு உடல் உழைப்பு என்பது பொருளாகும் அது இல்லாமல் வாழ்க்கை இல்லை..மனிதன் தன் அற நெறிச் சாதனையை சாதித்துக் கொள்ள உதவும் ஒரு சாதனம் தான் உழைப்பு. அது இருந்தால் மட்டுமே உரிய பலன் கிடைக்க முடியும்.உடல் உழைப்பு தான் மோட்சம் தருவது என்ற உண்மையை சாதாரண மனிதனும் அறியச் செய்வதே அடிப்படை நோக்கமாகும் .மனிதன் ஏதாவது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும்.எதுவும் செய்யாமல் பிறரைச் சார்ந்திருப்பவர்களுக்கு உலகில் இடமில்லை.எனவே காயகத்தின்படி எந்த ஒரு தொழிலும் உயர்ந்ததும் இல்லை:தாழ்ந்ததும் இல்லை.அதனால் தான் பசவரின் அனுபவ மண்டபத்தில் மடிவாள மாச்சையா [துணி வெளுப்பவன் ]நூலிய சந்தையன்[கயிறு திரிப்பவன்] ஹள்ளய்யன் [மிதியடிகள் தைப்பவன்] என்று பலரும் பங்கு பெற்றிருந்ததை அறிய முடிகிறது.எந்த வேறுபாடும் இன்றி பலவகையான மனிதர்களின் கூட்டாகவே தங்களின் அனுபவங்களை வித்தியாசம் இன்றி மிக இயல்பாக பகிர்ந்து கொள்ள இந்த அனுபவ மண்டபம் உதவி இருப்பதும் குறிப்பிடத் தக்கது.

வசனகாரர்களுள் காலத்தால் முதன்மையானவராக அமைபவர் தேவர தாசிமையா. இவருடைய காலமாக 10 ம் நூற்றாண்டு கணிக்கப்படு கிறது.கர்நாடக மாநிலம் முதனூரு கிராமத்தைச் சேர்ந்தவர்.அந்த கிராமத் தில் பல கோயில்கள் இருந்தாலும் திருமாலின் அவதாரமான இராமன் சிவனை வணங்கியதான ஐதீகப் பின்னணியில் வந்தது என்பதால் ராம நாதன் கோயில் அவரைக் கவர்கிறது. அதனால் தான் தாசிம்மையாவின் முத்திரை ராமநாதா [ ராமனின் கடவுள் ] ஆகிறது. இறைவனின் அருளை வேண்டி கடுமையான தவம் செய்யும் போது சிவன் காட்சி தந்து தன்னை அடைய உடலை வருத்திக் கொள்ள வேண்டியதில்லை எனவும், உழைப்பே உயர்வான நிலையில் மனம் விரும்பும் எதையும் அடைய முடியும் எனவும் சொல்ல தாசிமையா கிராமம் திரும்பி சிவத் தொண்டுகள் செய்து காட்டு வாசிகள் தொடங்கி அனைவரையும் சிவபக்தர்களாக மாற்றியதாகவும் துக்களே என்னும் பெண்ணை மணம் செய்து வாழ்ந்ததாகவும் வரலாறு அமைகிறது.

மூட நம்பிக்கைகளும் ,அது சார்ந்த கொள்கைகளும் ஆழமாக வேரூன்றியிருந்த கால கட்டத்தில் வசன இலக்கியம் பெண்ணை ஆணுக்கு சமமாகக் காட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. பசவேசர்,அல்லமா பிரபு, சித்தராமன் என்று ஒரு பரம்பரையே இந்தக் கருத்தை இயன்றவரை வசனங்களில் வலியுறுத்தியிருக்கிறது. ஆண்,பெண் பாகுபாடு தவறானது என்றும், இது புறத் தோற்ற பாகுபாடு மட்டுமே என்று கருதுகின்றனர். இதை வசன பரம்பரையின் முதல் ஆளான தாசிமையா,

Dr.Anburaj said...

மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
தாடி மீசை வந்தால் ஆணென்பார்
நடுவில் சுற்றும் ஆத்மா ஆணும் அல்ல
பெண்ணும் அல்ல காண் ராமநாதா

என்கிறார். இந்த வசனத்தின் பொருளை இவனுக்கு பின்னால் வந்த வசன காரர்கள் அனைவரும் பயன் படுத்தியிருக்கின்றனர். வசனகாரர்களின் நோக்கம் எந்தத் தத்துவத்தையும் ,கடவுள் கொள்கையையும் சாதாரண மனிதன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.பழ மொழிகள், உவமைகள்,எதுகை.மோனை அமைப்பு, அழகான சந்தம் ஆகியவை பெரும்பாலான வசனங்களில் வெளிப்படுகின்றன.

தீ எரியும் அசைய முடியாது
காற்று அசைய முடியும் எரியாது
தீ காற்றைச் சேரும் வரை
ஓரசைவும் இல்லை
தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது
மனிதர்களுக்குத் தெரியுமா ராமநாதா

என்று இணைவு தத்துவம் காடப்படுகிறது.நீ , நான், என், உன் என்று எதுவுமில்லை.நிலையற்ற வாழ்வும், அழியும் உடம்பும்தான் என்னும் போது சலன புத்தி எதற்கு என்ற கேள்வி இயல்பு தன்மையை முன் வைக்கிறது.

இது என் உடல் என்றால்
என் விருப்பப்படி நடக்க வேண்டும்
இது உன் உடல் என்றால்
உன் விருப்பப்படி நடக்க வேண்டும்
இது என்னுடையதுமில்லை
உன்னுடையதுமில்லை
சலன புத்தியுள்ள வஸ்து ராமநாதா

என்ற வசனம் அறிவார்ந்த சிந்தனையின் அடையாளம்.

ஒவ்வொருவரும் சாகவே
போருக்குப் போகின்றனர்
நூறில் ஆயிரத்தில் ஒருவர்தான்
எதிரியைக் கொல்கிறார்
ஒவ்வொரு புளியம்பூவும்
பழமாக முடியுமா ராமநாதா

என்று தெரிந்த பொருளும், செறிந்தகருத்தும் வசனமாகிறது.

பூமி உனது பரிசு
பயிர் உனது பரிசு
காற்று உனது பரிசு
நான் இதை என்னவென்று சொல்லட்டும்
எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டு
உன்னைத் தவிர எல்லோரையும் புகழ்வதேன்?

என்பது இயல்பான கேள்விதானே?
பசவண்ணர் சிலை (பெங்களூர்)

பசவண்ணர் சிலை (பெங்களூர்)

அந்தணர் குடும்பத்தில் பிறந்த பசவர் (பசவண்ணர்) சிவசாரணர்களின் வரலாறுகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி வேறுபாடுகளினால் தான் சமுதாயம் சீரழிகிறது என்பது அவருடைய உறுதியான எண்ணமாக இருந் தது. எல்லா தரப்பு மக்களும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேரும் அனுபவ மண்டபம் [திருச்சபை] அவரால் உருவாக்கப் பட்டது.விறகு வெட்டி, படகோட்டி, விவசாயி, மருத்துவன், மாடு மேய்ப்பவன் என்று அனைவரும் திருச் சபையின் உறுப்பினர்களாக இருந்தனர்.திருச்சபை ஒருவரை ஒருவர் விமரிசிக்கவும், குறைகளை வெளிப்படையாகச் சொல்லி பரிமாற்றம் செய்து கொள்ளவும் வழி வகுத்தது.

இவன் யாரவன் இவன் யாரவன்
இவன் யாரவனென்று எண்ணாதிருமையா
இவன் நம்மவன் இவன் நம்மவன்
இவன் நம்மவன் என்று எண்ணய்யா
கூடலசங்கம தேவா
உங்கள் வீட்டு மகனென்று எண்ணய்யா

என்று பிறப்பின் பொதுமையைப் பேசுகிறார்.

Dr.Anburaj said...

எனது மனமோ அத்திப் பழம் பாரையா
ஆராய்ந்து பார்த்தால் அதில் திரட்சி எதுவுமில்லை

என்கிறார். மிக அழகான தோற்றம் கொண்ட அத்திப் பழம் போன்றது மனம்.பழத்தினுள்ளே பெருகிக் கிடக்கும் புழுக்களைப் போன்றதுமனதின் கசடுகள் என்பது அவரது உவமை.பரங்கிக் காய்க்கு இரும்பு கவசமிட்டால் இறுகி அழுகுமே தவிர வலிமை பெற முடியுமா என்று வினவுகிறார்.பாம்பின் வாயிலுள்ள தவளை பசித்து பறக்கும் ஈயை விரும்புவது போலதான் மனிதனின் நிலை.அவன் அதை உணராத வரை விமோசனமில்லை.

இசைப்பிரியன் சிவன் என்பர் இசைப் பிரியன் சிவனல்லய்யா
வேதப் பிரியன் சிவன் என்பர் வேதப் பிரியன் சிவனல்லய்யா
பக்திப் பிரியன் நம் கூடல சங்கமதேவன்

என்று பக்தி நெறியின் விளக்கம் அமைகிறது.

இப்படிப்பட்ட இந்துமத அற்புதங்களை அறியாத இப்பெண் அவசரப்பட்டு எடுத்த முடிவு திருத்தப்பட வேண்டும்.

Dr.Anburaj said...

இஸ்லாம் மிகுந்த வீரியத்துடன் பரவி வந்த காலத்தில், படையெடுப்புகளின் மத்தியில் வாழும் நிச்சயமின்மையையும் ஆபத்துக்களையும் மீறி தனக்கென ஒரு வாழ்நெறியைக் கொண்டு அதை ருபாய்யத்துக்களாக வெளிப்படுத்தியதும் பெரிய விஷயங்கள் தான். அவர் காலத்தில் அவர் பலரது எதிர்ப்பையும் எதிர்கொண்டு தான் வாழ்ந்தார் என்பதும், ருபாய்யத் அவ்வளவும் உமருடையது அல்ல என்று சொல்லப்படுவதும் புதிய செய்திகள்.

எதுவானாலும் இத்தொகுப்பில்காணும் 215 பாடல்களும் ஒரே ஒரு உமரைத் தான் நம் முன் வைக்கின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது.

தீவிர முஸ்லீம்களுக்கு சொல்லப்படுவது அவர்களுக்காக ஜன்னத்தில் (சொர்க்கத்தில்) 72 தேவகன்னிகைகள் மெல்லிய மஸ்லின் உடையணிந்து மதுக்குடங்களும் புன்னைகை பூத்த முகங்களுடன் நமக்குச் சுகமளிக்கக் காத்திருப்பார்கள் என. தம் மதத்திற்க்காக உயிரிழக்கும் முஸ்லீமுக்கும் அவர்கள் தியாகத்திற்கு ஜன்னத்தில் கிடைக்கவிருக்கும் பரிசு இது. நமக்கென்னவோ ஆண்டவனின் திருவடிகள் மாத்திரம் தான் உறுதியாகச் சொல்லப்படுகிறது. நிச்சயமாகத் தெரியாது நமக்கு.
உமருக்கும் அவர் மதகுருக்கள் சொல்வதில் நம்பிக்கையில்லை.

உமர் சொல்கிறார்:

தெளிந்த மதுவும் தேனும் ஓடும் சொர்க்கம் உண்டென்றும்
அதில் தேவகன்னியர் இருப்பார்கள் என்றும் உறுதியளிக்கிறார்கள்
மாறாக, மதுவையும் காதலரையும் தேர்ந்து கொள்வோமெனில்
தீங்கென்ன அதில்?
இறுதியில் கிடைப்பது இவைதானே?

தியாகம் செய்து அங்கே போய் கிடைக்கவிருப்பது இங்கேயே கிடைக்குமானால், மதகுருக்கள் ஏன் தடுக்கவேண்டும்? என்கிறார் மதகுருக்கள் வேண்டுமானால் இங்கே மறுத்துக்கொண்டு அங்கே போய் பெற்றுக் கொள்ளட்டுமே. இன்னொரு இடத்தில் மதகுருவைப் பற்றி அவர் சொல்கிறார்:

மதகுருவுக்கு பதில் சொல்கிறாள் வேசி ஒருத்தி,
“ஆமாம் மதகுருவே நீங்கள் சொல்வது போல்தான் நான்,
தோற்றத்தில் தெரிவது போலத்தானா உண்மையில் நீங்கள்?

இன்னொமொரு ருபாய்யத், சாதாரண மக்கள் கேட்பது.

மதத்தின் நீதிமான்களே, உங்களைவிட நன்றாக
உழைக்கிறோம் நாங்கள்,
இவ்வளவு குடிபோதையிலும் மிகவும் நிதானமானவர்கள்
நாங்கள்,
நீங்கள் குடிப்பது மனித இரத்தத்தை, நாங்கள் குடிப்பது
திராட்சையின் ரத்தத்தை,
உண்மையாகச் சொல்லுங்கள் – நம்மில் யார் அதிக
ரத்த வெறி பிடித்தவர்கள்?

இன்று அதே பாரசீகத்தில் உமர் இன்றைய அயொத்தொல்லாக்கள் கையில் என்ன பாடு பட்டிருப்பார்? உயிரோடு இருந்திருப்பாரா? ருபாய்யத்துகள் நமக்குக் கிடைத்திருக்குமா?